Thursday, 31 August 2017

உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை விட நட்ஸ் வகைகளில் அதிகமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சுவைக்காக சேர்க்கும் கிஸ்மிஸ் எனப்படும் உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
திராட்சைப் பழங்களிலேயே உயர்தரமான திராட்சையை பதம் பிரித்து உலர்த்தி தயாரிக்கப்படுவது தான் உலர்திராட்சை. இவை வெகுநாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.உஷ்ணம் :

உஷ்ணம் :

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.அமிலத் தொந்தரவு :

அமிலத் தொந்தரவு :

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.ரத்தசோகை :

ரத்தசோகை :

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.குழந்தைக்கு :

குழந்தைக்கு :

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை திடமாக வளரும்.மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை :

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் குணமடையும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
அனைவரும் சாப்பிடலாம் :

அனைவரும் சாப்பிடலாம் :

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் . இதில் வைட்டமின் ‘பி' மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...