மழைக்காலம் தொடங்கிவிட்டதால், மருத்துவமனைகளிலும், மருந்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த காய்ச்சல் நமக்கு வந்த உடன் தீர்வு என்ன என்று யோசிப்பதை விட வரும் முன்னரே காப்பது எப்படி என யோசித்து முடிவெடுப்பது தான் சிறந்தது.
இந்த பகுதியில் மழைக்காலங்களில் பரவும் பல்வேறு நோய்களில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி தப்பிக்கலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பயன்பெருங்கள்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சலுக்கு என எந்த ஒரு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் டெங்கு காய்ச்சலை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதன் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம்.
டெங்குவைத் தவிர்க்கக் கொசுவை ஒழிப்பது மட்டும் தான் சிறந்த வழியாகும். டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி' கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
வீட்டிற்குள் கொசு நுழையாத படி கொசு வலைகளை பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன்கொடுக்கும். வேப்பிலை கொண்டு புகை போடலாம். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.' மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்' மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை'ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
மழை கால உணவு
மழை, குளிர் காலங்களில் நுரையீரல்கள் அதிகமாக பாதிக்கப்படும் என்பதால், காலத்திற்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
உதாரணமாக, இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகளை தடுக்க முடியும்.
தொற்றுகளை தடுக்க
கொத்துமல்லி மற்றும் கேரட்டை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு இஞ்சியை சேர்த்து அரைத்து ஜூஸ் போல தயாரித்துப் பருகினால், உடலின் சக்தியை அதிகரித்து, அசதியைப் போக்கும்.
மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கலாம், பலவித ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
நுரையிரல் அலர்ஜி
பட்டாணியில் புரதம், வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்துக்கான சத்துகள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் அலர்ஜியையும் பட்டாணியில் உள்ள சத்துகள் போக்குகின்றன.
ஜலதோசம் காய்ச்சல்
பசலைக் கீரையில் 30 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன. எனவே இந்தக் கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் புற்றுநோய், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
டைபாய்டு காய்ச்சல்
'சால்மோனெல்லா' எனும் பாக்டீரியாக்களால் டைபாய்டு காய்ச்சல் வருகிறது. இந்த கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் மற்றவர்களுக்குப் பரவுகின்றன.
நோயின் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சை மேற்க்கொண்டால் இது விரைவில் குணமாகும். இந்த நோய்க்கு தடுப்பூசி உள்ளது. ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.
ஜன்னல் ஓரம்
பேருந்துகள் மற்றும் கார்களில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓர திரையை முடி விட வேண்டும். இந்த காற்று காதிற்குள் புகுந்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, முகத்தின் வடிவம் ஒரு புறம் மட்டும் மாறுபடும்.
சுத்தம் தேவை
மழைக்காலங்களில் வரும் பல நீர் காரணமாக தான் வருகின்றன. மழைக்காலங்களில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து விட வாய்ப்புகள் அதிகம் எனவே குடிநீரை நன்றாக சூடு செய்து பருக வேண்டும்.
கைகளை நன்றாக தேய்து கழுவ வேண்டும். சாலைகளில் எச்சில் துப்புதல் வேண்டாம். வெளியில் செல்லும் போது கட்டாயம் செருப்பு அணிந்து செல்ல வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment