வெளிச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது உங்களுக்கு ஆரோக்கியமான தருணங்களை அள்ளிக் கொடுக்கும். அதுவும் பெண்களுக்கு வெளிச் சூழல் வாழ்க்கை அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறதாம்.
ஆமாங்க சுற்றிலும் பச்சை பசுமையான இயற்கை சூழல், மலைகள், அருவிகள், தூய்மையான காற்று என்று வாழும் பெண்களின் இறப்பு விகிதம் 12% மற்ற சூழலில் வாழும் பெண்களை காட்டிலும் குறைவாக உள்ளதாம்.
பசுமை நிறைந்த சூழலில் வாழும் பெண்களில் 34% குறைவான அளவில் தான் மூச்சுப் பிரச்சினையால் இறக்கிறார்களாம். 13% அளவில் தான் கேன்சரால் இறப்பு விகிதம் ஏற்படுகிறதாம். இது மற்ற சூழலில் வாழும் பெண்களின் இறப்பை காட்டிலும் குறைவாக உள்ளதாம் .பெண்களே நீங்கள் நீண்ட காலம் வாழ நினைத்தால் பசுமையான சூழல் அதை கொடுக்கும் என்பது தான் புதிய தகவல். இந்த இயற்கையான அமைதியான சூழல் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் உடல் செயல்களை அதிகப்படுத்துவதால் உங்கள் ஆயுளும் நீடிக்கிறது.
பசுமையான இயற்கைக்கும் இறப்பு விகதத்திற்கும் தொடர்பு உள்ளது. இதனுடன் மற்ற காரணிகளான வயது, வாழ்க்கை ஓட்டம், புகைப்பழக்கம், பொருளாதாரம் அவைகளும் சேர்க்கப்படுகின்றன.
பெண்கள் 250 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிலும் பசுமையான சூழலில் வாழ்ந்தால் 12% விபத்து இல்லாத இறப்பு விகிதம் குறைகிறது. இந்த ஆராய்ச்சி குறிப்பாக கேன்சர் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளின் இறப்பு விகிதத்திற்கு முக்கியத்துவம் உடல் நலக் கோளாறுகள், மன அழுத்தம் ,கவலை எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்திடுமாம் பசுமையான சூழல். எனவே நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பினால் பசுமையான இயற்கை சூழலில் உங்கள் நேரத்தை கழியுங்கள்.
அழகாக காற்றில் அசைந்தாடும் பூக்கள், பசுமையான புல்வெளி, உயர்ந்த மரங்கள் இப்படி சுற்றிலும் எங்கும் பசுமை நிறைந்த இடங்கள் உங்கள் மன நல ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாம்.இயற்கையின் பசுமை உங்கள் கேன்சர், மூச்சுப் பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை இவற்றால் ஏற்படும் இறப்பு விகிதத்தை நேரடியாக குறைப்பதில்லை.
அதற்கு பதிலாக உங்கள் மன நல ஆரோக்கியம், சமூக பங்களிப்பு, உடல் செயல்கள் மற்றும் மாசு இல்லாத தூய்மையான காற்று போன்றவற்றின் வழியாக இறப்பு விகிதத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment