என்ன தான் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொன்னாலும் ஜங்க் ஃபுட் மீதான மோகம் குறைந்த பாடில்லை. முதலில் இதற்கு ஜங்க் ஃபுட் என்று பெயர் வந்ததற்கு காரணமே அந்த உணவுகள் சத்துக்கள் குறைவாக இருப்பது தான்.
இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்கிறதா என்று தேடலாம். ஆனால் ஐஸ்க்ரீம் சாப்பிடும் இடத்தில் தயிர் சாப்பிடச் சொன்னால் எப்படியிருக்கும்? ஆரோக்கியமான முறையில் அதே நேரத்தில் சுவையான ஜங்க் ஃபுட் மாற்று உணவுகளின் பட்டியல் இங்கே... என்ன தான் மாற்றுவழியை கண்டுபிடித்தாலும் அளவுடன் சாப்பிடுவது தான் நன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிப்ஸ் : ஸ்நாக்ஸ் என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த சிப்ஸ் வகைகள் தான். முழுதாக எண்ணெயில் டீப் ஃப்ரை செய்தது உடலுக்கு நல்லதல்ல. அதுவும் சிப்ஸ் என்றால் பெரும்பாலும் உருளைக்கிழங்கை தான் பயன்படுத்துவார்கள். மாற்றாக உருளைக்கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். டீப் ஃப்ரைக்கு பதிலாக பேக்கிங் செய்வது அல்லது ட்ரை ப்ரை செய்து சாப்பிடலாம். வித்யாசமான சுவை உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
சிப்ஸ் : ஸ்நாக்ஸ் என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த சிப்ஸ் வகைகள் தான். முழுதாக எண்ணெயில் டீப் ஃப்ரை செய்தது உடலுக்கு நல்லதல்ல. அதுவும் சிப்ஸ் என்றால் பெரும்பாலும் உருளைக்கிழங்கை தான் பயன்படுத்துவார்கள். மாற்றாக உருளைக்கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். டீப் ஃப்ரைக்கு பதிலாக பேக்கிங் செய்வது அல்லது ட்ரை ப்ரை செய்து சாப்பிடலாம். வித்யாசமான சுவை உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
சாக்லெட் :
சிலர் சாக்லெட் நல்லது என்றும் இன்னும் சிலர் சாக்லெட் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் சொல்வதுண்டு. நல்லது என்று சொல்வதற்கு காரணம், சாக்லெட் சாப்பிடுவதால் நாம் மகிழ்வாக இருப்பதற்கான ஹார்மோன்கள் தூண்டிவிடப்படுகிறது, தீங்கானது என்று சொல்வதற்கு காரணம் அதிலிருக்கும் கலோரிகள் தான்.
இதற்கு மாற்றாக, டார்க் சாக்லெட் உடன், நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம். வொயிட் சாக்லெட்டிற்கு பதிலாக டார்க் சாக்லெட் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐஸ்க்ரீம் :
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு என்றால் கண்ணை மூடி ஐஸ்க்ரீமை தேர்ந்தெடுக்கலாம். ஐஸ்க்ரீம் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுவதற்கு காரணம் அதில் அதிக கலோரிகள் இருப்பது தான் காரணம்.
இதனை தவிர்க்க பாதிப்புகளின் வீரியத்தை குறைத்துக் கொள்ள சாக்கோ சிப்ஸ் பதிலாக வெண்ணிலா ஃப்லேவர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.

பீட்சா :
ஒற்றை பீஸ் பீட்சாவில் 285 கலோரி இருக்கிறது. ஒரு முழு பீட்சாவையும் சாப்பிட்டால் 1000 கலோரிகளுக்கும் அதிகமாக வரும்.
இதனை தவிர்க்க பீட்சா ஆர்டர் செய்யும் போது தின் க்ரஸ்ட் பீட்சாவை மட்டும் ஆர்டர் செய்திடுங்கள். இதனால் பீட்சாவிற்காக சேர்க்கப்படும் மாவு பொருள் குறைந்திடும்.

கப் கேக் :
மாவும் சாக்லேட்டும் அதிகப்படியான கலோரி இருப்பதால் இது உடல்நலத்திற்கு தீங்கானது என்று சொல்லப்படுகிறது. இதனை குறைக்க, சாக்லேட்டுக்கு பதிலாக ஓட்ஸ்,ப்ளூபெர்ரீஸ், நட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது பசியையும் மட்டுப்படுத்தம்.

ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் :
கார்போஹைட்ரேட் இருக்கும் அதை விட எண்ணெயில் டீப் ஃப்ரை செய்திருப்பதால் ஜங்க் ஃபுட் பட்டியில் முதலிடத்தில் இருக்கும் உணவுகளில் ஒன்று இது. இதனை தவிர்க்க, ஸ்வீட் பொட்டோவை பயன்படுத்தலாம். ஏனென்றால் உருளைக்கிழங்கை விட இந்த ஸ்வீட் பொட்டோட்டோவில் அதிகப்படியான நியூட்ரிசியன்கள் கிடைக்கும்.
இதனை எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக பேக் செய்திடலாம் அல்லது ஏர் ஃப்ரையரில் ஃப்ரை செய்திடலாம்.
பாஸ்தா : முழு கோதுமை பாஸ்தா வாங்கி பயன்படுத்துங்கள். கூடுதலாக அதில் காளாண், தக்காளி,கேரட் என காய்களை பயன்படுத்துங்கள் அசைவு உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால், சிக்கன் அல்லது இறால் சேர்த்திடலாம். ப்ரட் சாப்பிடுபவர்கள் மல்ட்டி க்ரைன் ப்ரட் சாப்பிடலாம்.
பாஸ்தா : முழு கோதுமை பாஸ்தா வாங்கி பயன்படுத்துங்கள். கூடுதலாக அதில் காளாண், தக்காளி,கேரட் என காய்களை பயன்படுத்துங்கள் அசைவு உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால், சிக்கன் அல்லது இறால் சேர்த்திடலாம். ப்ரட் சாப்பிடுபவர்கள் மல்ட்டி க்ரைன் ப்ரட் சாப்பிடலாம்.
வெற்று கலோரிகள் கொண்ட அவ்வகை தனியார் குளிர் பானங்கள் நமக்கு, நமது உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும்உண்மையில் அவை நமது உடலை குளிர்விப்பது இல்லை.




நியாசின்(வைட்டமின் B3): உலர்ந்த ஈஸ்ட்டில் நியாசின் நிறைந்து காணப்படுகிறது. வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணை போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம். ஒரு கப் பச்சை வேர்க்கடலையில் 17.6mg சத்து உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 100% பூர்த்தி செய்கிறது. மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் நியாசின் அதிக அளவிலுள்ளது.
வைட்டமின் B6: மீன், மாட்டிறைச்சி கல்லீரல் மற்றும் கோழி உணவுகளில் இந்த வகை வைட்டமின்கள் காணப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும் அதிகமாக வைட்டமின் B6 கொண்டைக்கடலையில் இருக்கிறது. வைட்டமின்B6 ன் தினசரி உட்கொள்ளல் அளவில் 55% 1 கப் கொண்டைக்கடலையில் உள்ளது.
வைட்டமின் B12 : ` மாட்டிறைச்சி கல்லீரல்,சால்மன், ட்யூனா வகை மீன் உணவுகளில் அதிகம் உள்ளது. 1 துண்டு மாட்டிறைச்சியில் 48mcg வைட்டமின் பி12 உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 800% ஆகும்.
வைட்டமின் D : கொழுப்பு அதிகமுள்ள மீன்களான சால்மன், கானாங்கெளுத்தி போன்றவற்றில் வைட்டமின் D அதிகமாக உள்ளது. மீன் எண்ணையில் அதிகபட்ச வைட்டமின் D உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 142% உள்ளது.பெரும்பாலான மக்கள் பால், காலை உணவு தானியங்கள், தயிர் மற்றும் ஆரஞ்சு சாறு போன்ற பலமான உணவுகள் வழியாக வைட்டமின் D ஐ எடுத்து கொள்கின்றனர்.
வைட்டமின் K : பச்சை இலைகளை கொண்ட காய்கறிகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது. இது ஃபில்லோகுவினோன் என்றும் அழைக்கப்படுகிறது. கீரை ,நூக்கல் கீரை, பீட் ரூட் கீரை, கடுகு போன்ற உணவுகளில் இந்த சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த வைட்டமின்கள் அல்லாத பல ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு வலு சேர்க்கின்றன. இவைகளை பற்றி நமது அடுத்த பதிவில் காணலாம்.













பற்கள் : வொயிட் டீ குடிப்பது பல்லுக்கும் மிகவும் நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் பற்களில் ஏற்படும் தொற்றை தவிர்க்கவும் அதே நேரத்தில் பற்களை தாக்கும் பாக்டீரியாக்களை அளிக்கவும் செய்திடும். இதில் இருக்கும் ப்ளூரைட் பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும்.
புற்றுநோய் : க்ரீன் டீயினைப் போலவே வொயிட் டீயும் நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுத்திடும்.இதில் இருக்கும் கீமோ ப்ரிவன்ட்டிவ் ஏஜென்ட்டினால் புற்று நோய் வருவதற்கு முன்னரே அதனை வராமல் தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டீ குடிப்பதால் அவர்கள் உடலின் சர்க்கரை அளவினை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அடிக்கடி தாகமெடுப்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வொயிட் டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதயம் : இதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட் இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுத்திடும். ப்ளேவனாய்ட் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
நோய் எதிர்ப்பு : நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் நமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் ஏராளமான ஆன்ட்டி பாக்டீரியல் ப்ராப்பர்டீஸ் இருக்கிறது இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வொயிட் டீ தொடர்ந்து குடித்து வர பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை காத்திடும்.
எடையை குறைக்க : உடலுழைப்பு இல்லாத வேலை, திட்டமிடாத உணவுகளால் தான் பெரும்பாலும் எடை அதிகரிக்கிறது.தீவிரமாக டயட் பின்பற்ற முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த டீயை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இது நம் உடலில் உள்ள அப்டிபோசைட்ஸ் எனப்படுகின்ற கொழுப்பு செல்களை அழிக்க உதவிடும். இந்த டீ குடிக்கிறோம் என்று அளவில்லாமல் உணவு எடுத்தால் அது ஆபத்தைத் தான் ஏற்படுத்தும்.


வைட்டமின் ஏ நிறைந்த உணவு உட்கொள்ளல் சைனஸ் தொற்றுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு உருவாக்க உதவும். பால் பொருட்கள், குறிப்பாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தவிர்க்கப்பட வேண்டும்.


4. மஞ்சள் மற்றும் இஞ்சி வேர் : மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் உணவு பொருள். மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சியை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. இதனை இஞ்சியுடன் சேர்த்து தேநீரில் கலந்து பருக வேண்டும். இதன் மூலம் சளி மென்மையாகி மூக்கில் இருந்து வெளி வரும். உடனடியாக நீங்க சைனஸிலிருந்து விடுபடுவீர்கள். இஞ்சி சாறில் தேன் கலந்து ஒரு நாளில் 2-3 முறை குடிப்பதும் ஒரு சிறந்த தீர்வாகும் என்று ‘The Complete Book of Ayurvedic Home Remedies, பரிந்துரைக்கிறது.
5.ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் பல ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஒரு அற்புதமான இயற்கை பொருளாக உள்ளது. ஒரு கப் சூடான தண்ணீர் அல்லது தேநீரில், மூன்று தேக்கரண்டி வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்கவும். சளி மெலிதாக கரைந்து வருவதற்கு இது உதவும். சுவைக்கு எலுமிச்சை மற்றும் தேனுடன் சேர்த்தும் அருந்தலாம் . வெறும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளில் 3முறை 1தேக்கரண்டி சுவைப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.
6. சூப் : சூப் அருந்துவதால் சளியினால் ஏற்படும் அடைப்புகள் குறைகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.அது சிக்கன் சூப் அல்லது காய் கறி சூப் எதுவாக இருந்தாலும் அதனுடன் சில மூலிகைகளை கலந்து பருகும் போது உடலுக்கு நன்மை பயக்கின்றன . ஆவி பிடித்த பிறகு ஒரு நல்ல கார சாரமான சூப் பருகுவது சைனஸுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
7. உப்பு கரைசல்: நீங்கள் ½ கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்து அதை ஒரு பாட்டிலில் ஊற்றவும்; உங்கள் தலையைச் சாய்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாசியில் 5 சொட்டு கரைசலை ஊற்றவும். அது மற்ற மூக்கின் ஓட்டை வழியாக வெளியேறும் . மற்றொரு துவாரத்திலும் இதை செய்யுங்கள். இது உங்கள் சைனஸை உறிஞ்சி, பாக்டீரியா மற்றும் எரிச்சலூட்டும் துகள்களை அகற்றும்.