Wednesday, 30 August 2017

பாப்கார்னை டைம் பாஸ்க்காக சாப்பிட்டாலும் அதிலிருக்கும் நன்மைகள் தெரியுமா?

உலகம் எங்கிலும் மக்கள் பாப்கார்னை விரும்பி சுவைக்கின்றனர்.தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காக வரும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் பாப்கார்னை சுவைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பாபிகார்னை பொரித்து அப்படியே உண்ணும் வரையில் இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.
இதில் சீஸ்,வெண்ணை, உப்பு, மற்றும் வேறு பல சுவையூட்டிகள் சேர்க்கும்போது இவை ஒரு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவு ஆகிறது. பாப்கார்னை வெறும் சூட்டில் பொறிப்பது மட்டுமே போதுமானது. இதுவே ஆரோக்கியமானதும். ஆகையால் இதனை ஆலிவ் ஆயில் மற்றும் வேறு எண்ணெய் மூலம் பொரிப்பதை தவிர்த்திடுங்கள்.
Nutritional benefits of eating popcorn பாப்கார்னில் நார்ச்சத்து,பாலிபீனாலிக் கூறுகள் வைட்டமின் பி காம்ப்லெஸ் , மாங்கனீசு , மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜென்னேற்றி .
பாப்கார்ன் என்பது ஒரு முழு தானியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மற்ற தானியங்களான அரிசி, கோதுமை போன்றவற்றின் குணநலன்களை பெற்றிருக்கும். பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். மென்மையான குடல் திசுக்கள் மற்றும் செரிமான புலன்களால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
தானியங்களின் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும் தமனியிலலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன்மூலம், இதய நோய், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கப்படுகிறது. இரத்த குழாய்களிலும் தமனிகளில் இரத்தம் சீராக பாய்வதால், இதயத்திற்கு எந்த வொரு அழுத்தமும் ஏற்படுவதில்லை.
Nutritional benefits of eating popcorn நார்ச்சத்து மிகுந்த உணவின் மற்றொரு பயன்பாடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது. அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. இத்தகைய சிறப்பான நிர்வாகம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படும். ஆகையால் இந்த நார்ச்சத்து மிகுந்த உணவு நம் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று.
பாப்கார்னில் உள்ள அதிக ஆக்சிஜெனேற்றம் தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கே வியப்பை உண்டாக்கியது. பொதுவாக ஒரு ஜங்க் உணவாக கருதப்படும் இந்த பாப்கார்னின் ஓட்டில், அதிக அளவிலான போலிபீனாலிக் கூறுகள் காணப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
இது நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும். புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக்கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஒக்சிடண்ட்டின் பணியாகும். பாப்கார்ன் இந்த அபாயத்தை நிச்சயம் குறைக்கிறது.
பிரீ ரடிகல்ஸ் என்னும் அடிப்படை கூறுகள் புற்று நோய் போன்ற வேறு உபாதைகளையும் உடலுக்கு செய்கின்றன. தோல் சுருக்கங்கள்,தசைகள் வலிமையிழத்தல், குடல் பிரச்னை, கீல்வாதம், அல்சைமர், டிமென்ஷியா , முடி கொட்டுதல் போன்றவை இந்த அடிப்படைக்கூறுகளால் ஏற்படும் உபாதைகளாகும். பாப்கார்னில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இந்த கூறுகளை எதிர்த்து போராடுவதால் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடிகிறது.
Nutritional benefits of eating popcorn ஒரு சராசரி அளவு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளை கிழங்கு சிப்ஸை காட்டிலும் 5 மடங்கு குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பக்கூடும். பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்காமல் தடுக்கிறது.இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம். இது ஒரு குறைந்த கொழுப்பு உணவாகவே கருதப்படுகிறது, மற்றும் இதில் இருக்கும் இயற்கையான எண்ணெய் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான எண்ணெய்தான் . பாப்கார்ன் என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி தான்.ஆனால் அதில் உப்பு, வெண்ணை , சீஸ் போன்றவற்றை சேர்க்காமல் சுவைப்பது சிறந்தது.பதப்படுத்தப்பட்ட பாப்கார்னை உண்பது நல்ல விளைவுகளை கொடுக்காது. பாப்கார்னுடன் மற்ற பொருட்களை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நிறைந்துள்ள போலிபீனாலிக் கூறுகள் வலுவிழந்து விடுகின்றன. அதன் பிறகு இதுவும் மற்ற ஜங்க் உணவுகள் போல் தோற்றமளிக்கின்றன.


No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...