மூக்கின் இரு பக்கத்திலும் இருக்கும் காற்று நிரப்பப்பட்ட குழிகள் அல்லது துவாரங்கள் தான் சைனஸ் என்பதாகும். ஒவ்வாமை, குளிர் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக, இவை சில நேரங்களில் அடைபட்டு தொற்று ஏற்படலாம்.
இது தலைவலி, குறட்டை அல்லது சுவாசத்தில் சிரமம் போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம். நாட்பட்ட சைனஸ் தொந்தரவு மூளை காய்ச்சலுக்கும் வழி வகுக்கலாம்.
3 வகையான சைனஸ் தொந்தரவுகள் உள்ளன. முதல் வகை சைனஸ் 4 வாரங்களுக்கு குறைவாக நீடிக்கும். இரண்டாம் வகை 4 - 8 வாரங்கள் நீடிக்கும்.
மூன்றாம் வகை 8 வாரங்களுக்கு அதிகமாக இருக்கும். இவ்வகையில் வீக்கங்கள் தொடர்ந்து பலமுறை ஏற்படும்.
சைனஸ் குறியீட்டை அதிகரிக்கும் சில உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். அவற்றுள் வறுத்த உணவுகள், அரிசி, இறைச்சி மற்றும் வலுவான மசாலா போன்றவை அடங்கும்.
வைட்டமின் ஏ நிறைந்த உணவு உட்கொள்ளல் சைனஸ் தொற்றுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு உருவாக்க உதவும். பால் பொருட்கள், குறிப்பாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், சாக்லேட், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கொண்ட உணவை அறவே நீக்க வேண்டும். அவை சைனஸில் அதிகமாக சளி உற்பத்தியை தூண்டும். குளிர் பானங்கள் ஒரு பெரிய குட் பை . குளிர் திரவங்களை உட்கொள்வது மூக்கடைப்பை உண்டாக்கி மூக்கில் சளி வருவதை தடுக்கும்.
இதற்கு வீட்டிலேயே சில எளிய முறைகளை பின்பற்றி உடனடி நிவாரணம் அடையலாம்.
1.நீர் சத்து
தண்ணீர், தேநீர்,சர்க்கரை மற்றும் ஐஸ் இல்லாத பழச்சாறு போன்றவை நம் உடலை நீர்ச்சத்துடன் வைத்து கொள்ள உதவும். இவைகள் சளியை கெட்டியாக்காமல் மென்மையாக இருக்க வைக்கும்.
இதன் மூலம் சைனஸ் தொந்தரவுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். நீர் வறட்சி ஏற்படுத்தக் கூடிய மது அருந்துதல், காஃபின் மற்றும் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
2. காரமான உணவுகள்:
காய்ந்த மிளகாய் பாக்டீரியாக்களைஎதிர்த்து வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை உட்கொள்ளும் போது கெட்டியான சளி உடைக்கப்பட்டு வெளி வரும் . ஆப்பிள் சீடர் வினிகர் ,மற்றும் எலுமிச்சை சாறுடன் , சிறிது முள்ளங்கி சேர்த்து அருந்தும் போது இந்த கலவை சளியை வெளியேற்றும்.
புதிதாக துருவிய முள்ளங்கியை சில நிமிடங்கள் வாயில் வைத்திருக்க வேண்டும். அதன் சுவை மறைந்த வுடன் விழுங்கி விடுங்கள்.
3. ஆவி பிடித்தல்:
ஆவி பிடிப்பது ஒரு சிறந்த நிவாரணியாகும். நன்றாக கொதிக்கும் தண்ணீரில் 3 துளி ரோஸ்மேரி எண்ணெய்,3 துளி புதினா சாறு மற்றும் 2 துளி யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். உடல்முழுவதையும் நன்றாகப்போர்த்தி கொண்டு அந்த கொதி நீரில் உங்கள் முகத்தை நன்றாக காண்பியுங்கள். அந்த ஆவியை நன்றாக நுகரும் போது மூக்கின் துவாரங்கள் நன்றாக திறக்கப்படும். மூச்சை இழுத்து விடுங்கள். மூக்கடைப்பு விலகி சீரான சுவாசம் பெறுவீர்கள்.4. மஞ்சள் மற்றும் இஞ்சி வேர் : மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் உணவு பொருள். மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சியை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. இதனை இஞ்சியுடன் சேர்த்து தேநீரில் கலந்து பருக வேண்டும். இதன் மூலம் சளி மென்மையாகி மூக்கில் இருந்து வெளி வரும். உடனடியாக நீங்க சைனஸிலிருந்து விடுபடுவீர்கள். இஞ்சி சாறில் தேன் கலந்து ஒரு நாளில் 2-3 முறை குடிப்பதும் ஒரு சிறந்த தீர்வாகும் என்று ‘The Complete Book of Ayurvedic Home Remedies, பரிந்துரைக்கிறது.5.ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் பல ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஒரு அற்புதமான இயற்கை பொருளாக உள்ளது. ஒரு கப் சூடான தண்ணீர் அல்லது தேநீரில், மூன்று தேக்கரண்டி வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்கவும். சளி மெலிதாக கரைந்து வருவதற்கு இது உதவும். சுவைக்கு எலுமிச்சை மற்றும் தேனுடன் சேர்த்தும் அருந்தலாம் . வெறும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளில் 3முறை 1தேக்கரண்டி சுவைப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.6. சூப் : சூப் அருந்துவதால் சளியினால் ஏற்படும் அடைப்புகள் குறைகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.அது சிக்கன் சூப் அல்லது காய் கறி சூப் எதுவாக இருந்தாலும் அதனுடன் சில மூலிகைகளை கலந்து பருகும் போது உடலுக்கு நன்மை பயக்கின்றன . ஆவி பிடித்த பிறகு ஒரு நல்ல கார சாரமான சூப் பருகுவது சைனஸுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.7. உப்பு கரைசல்: நீங்கள் ½ கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்து அதை ஒரு பாட்டிலில் ஊற்றவும்; உங்கள் தலையைச் சாய்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாசியில் 5 சொட்டு கரைசலை ஊற்றவும். அது மற்ற மூக்கின் ஓட்டை வழியாக வெளியேறும் . மற்றொரு துவாரத்திலும் இதை செய்யுங்கள். இது உங்கள் சைனஸை உறிஞ்சி, பாக்டீரியா மற்றும் எரிச்சலூட்டும் துகள்களை அகற்றும்.
No comments:
Post a Comment