வால்நட்ஸ்யை நொறுக்கி தீனி மாதிரி சாப்பிடுவதால் நமது பசியின்மை அடங்குகிறதாம். ஆமாங்க இது தமது மூளையில் தூண்டும் பசி பிரச்சினையை காணாமல் செய்கிறது.
இதில் ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டறிந்து உள்ளனர். பசி ஏற்பட நமது மூளையில் ஏற்படும் செயலாக்கத்தை வால்நட்ஸ் மாற்றுகிறது என்று ஒலிவியா எம் ஃபார் அமெரிக்காவில் உள்ள பெத் இஸ்ரேல் டெகோனஸ் மெடிக்கல் சென்டரிலிருந்து கூறுகிறார்.
இதற்காக உடல் பருமனுள்ள 10 நபர்களை ஆராய்ச்சி செய்து அவர்களின் மூளையின் பசி செயலை வால்நட்ஸ் சாப்பிடும் பழக்கம் எந்த அளவுக்கு மாற்றம் செய்து உள்ளது என்பதை பங்சனல் எம். ஆர். ஐ ஸ்கேன் மூலம்( fMRI) மூலம் அவர்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.ஒரு கட்டுப்பான சூழலில் அவர்களின் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
இந்த 5 நாட்கள் கண்காணிப்பில் 48 கிராம் என்ற அளவில் வால்நட்ஸ் ஸ்மீத்தி சாப்பிட அவர்களுக்கு அமெரிக்கன் டயாபெட்டீஸ் அஸோஷியேசன் டயட்டெரி ஹைட்லைன்ஸ் அறிவுறுத்தியது.
இந்த சிகச்சையில் வால்நட்ஸ் ஸ்மீத்தி மாதிரியே மருத்துவ பொருளை கண்டறிந்து பயன்படுத்தினர். இந்த மருந்து பொருள் வால்நட்ஸ் ஸ்மீத்தி மாதிரியே டேஸ்ட்டை கொண்டு இருந்தது.
வால்நட்ஸ் அடங்கிய ஸ்மீத்தியை ஒரு வாரம் உடல் பருமன் ஆனவர்கள் எடுத்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அவர்களின் பசி தாகம் குறைந்துள்ளது. அடுத்த வாரம் அவர்களுக்கு ப்ளாஸோ ஸ்மீத்தி (மருத்துவ பொருள் ஸ்மீத்தி) கொடுக்கப்பட்டது.
ஒரு படக் கருவியின் மூலம் உணவுகளான ஹேம்பர்க்கர் மற்றும் டிசர்ட்ஸ் மற்றும் பூக்கள், பாறை மற்றும் காய்கறிகள் போன்ற படங்களை அவர்களுக்கு காட்டினர். அப்பொழுது அவர்களின் எம். ஆர். ஐ ஸ்கேன்யை ஆராய்ச்சி செய்த போது அவர்களின் மூளையின் வலது இன்சுலா பகுதியில் வால்நட்ஸ் எடுத்த பிறகு பசியின் செயலாக்கம் முன்பு இருந்ததை விட தற்போது குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த சுவாரஸ்யமான ஆராய்ச்சியானது தெளிவான ஒரு முடிவை தருகிறது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதால் அவர்களின் பசி தாக்கம் குறைகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது என்று கிறிஸ்டோஸ் மான்ட்ஷொரஸ் என்பவர் மெடிசன் அட் ஹார்வர்டு யுனிவர்சிட்டியின் புரபொசர் ஆன அவர் கூறுகிறார்.
மூளையில் உள்ள இன்சுலா பகுதியானது நமது அறிவாற்றல் சார்ந்த பசி தாக்கத்தை ஏற்படுத்துவதும் மேலும் சரியான நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கமும் இந்த ஆராய்ச்சி மூலம் அவர்களுக்கு கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் டயாபெட்டீஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment