Wednesday, 30 August 2017

மிளகாய் அதிகமாக சாப்பிட்டால், இது எல்லாம் தான் நடக்கும்!

காரசாரமாக சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகவும் இருக்கும். அதுவும் நமது ஊர்ப்பகுதியினர் காரசாரமாகவே சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மிளகாய் உங்களது மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது. அதற்காக இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த பகுதியில் மிளகாயை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உண்டாகும் தீமைகள் பற்றி காணலாம்.
நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று அல்சர் போன்றவை இருந்தும் கூட, நீங்கள் மிளகாயை அதிகளவில் எடுத்துக்கொண்டால், அது பிரச்சனையை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். நீங்கள் புளிப்பு ஏப்பம் போன்றவற்றை உணர்ந்தால், மிளகாய் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டு, தயிர் மற்றும் மோரை அதிகமாக உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

மிகவும் காரணமான மிளகாய் உங்களது வயிற்றில் படும்போது அது மற்ற உணவுகளை வேகமாக நகர்த்தி செல்கிறது. மிளகாயில் உள்ள கேப்சசைன் ஒரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதனால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

உதடுகளில் எரிச்சல்

மிளகாய் உங்களது கண்களில் பட்டால் எப்படி எரியுமோ அதே போல உதடுகளில் படும் போதும் எரிச்சலை உண்டாக்கும். நீங்கள் சாப்பிடும் போது மிளகாய் உங்களது உதடுகளில் பட்டு கடும் எரிச்சலை உண்டாக்க கூடும். எனவே காரணமான பொருட்களை சாப்பிடும் முன்னர் லிப் பாம் போட்டுக்கொள்ளலாம்.சுவை உணர்தல்சுவை உணர்தல் காரமாக சாப்பிடும் போது நாக்கில் உள்ள சுவை உணர் திறன் குறைந்துவிடுகிறது. எனவே அதிகமாக மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுங்கள்.

வியர்வை அதிகரிக்கும் மிளகாய் அதிகமாக சாப்பிட்டால், உங்களுக்கு அதிகளவில் வியர்வை வெளியேறும். கேப்சசைன் உங்களது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் உங்களது உடலில் அதிக வியற்வை வெளியேறும். இதன் காரணமாக உடல் தூர்நாற்றமும் ஏற்படும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...