Wednesday, 30 August 2017

ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் பற்றித் தெரியுமா?

என்ன தான் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொன்னாலும் ஜங்க் ஃபுட் மீதான மோகம் குறைந்த பாடில்லை. முதலில் இதற்கு ஜங்க் ஃபுட் என்று பெயர் வந்ததற்கு காரணமே அந்த உணவுகள் சத்துக்கள் குறைவாக இருப்பது தான்.
இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்கிறதா என்று தேடலாம். ஆனால் ஐஸ்க்ரீம் சாப்பிடும் இடத்தில் தயிர் சாப்பிடச் சொன்னால் எப்படியிருக்கும்? ஆரோக்கியமான முறையில் அதே நேரத்தில் சுவையான ஜங்க் ஃபுட் மாற்று உணவுகளின் பட்டியல் இங்கே... என்ன தான் மாற்றுவழியை கண்டுபிடித்தாலும் அளவுடன் சாப்பிடுவது தான் நன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சிப்ஸ் :சிப்ஸ் : ஸ்நாக்ஸ் என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த சிப்ஸ் வகைகள் தான். முழுதாக எண்ணெயில் டீப் ஃப்ரை செய்தது உடலுக்கு நல்லதல்ல. அதுவும் சிப்ஸ் என்றால் பெரும்பாலும் உருளைக்கிழங்கை தான் பயன்படுத்துவார்கள். மாற்றாக உருளைக்கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். டீப் ஃப்ரைக்கு பதிலாக பேக்கிங் செய்வது அல்லது ட்ரை ப்ரை செய்து சாப்பிடலாம். வித்யாசமான சுவை உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.சாக்லெட் :

சாக்லெட் :

சிலர் சாக்லெட் நல்லது என்றும் இன்னும் சிலர் சாக்லெட் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் சொல்வதுண்டு. நல்லது என்று சொல்வதற்கு காரணம், சாக்லெட் சாப்பிடுவதால் நாம் மகிழ்வாக இருப்பதற்கான ஹார்மோன்கள் தூண்டிவிடப்படுகிறது, தீங்கானது என்று சொல்வதற்கு காரணம் அதிலிருக்கும் கலோரிகள் தான்.
இதற்கு மாற்றாக, டார்க் சாக்லெட் உடன், நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம். வொயிட் சாக்லெட்டிற்கு பதிலாக டார்க் சாக்லெட் எடுத்துக்கொள்ளுங்கள்.ஐஸ்க்ரீம் :

ஐஸ்க்ரீம் :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு என்றால் கண்ணை மூடி ஐஸ்க்ரீமை தேர்ந்தெடுக்கலாம். ஐஸ்க்ரீம் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுவதற்கு காரணம் அதில் அதிக கலோரிகள் இருப்பது தான் காரணம்.
இதனை தவிர்க்க பாதிப்புகளின் வீரியத்தை குறைத்துக் கொள்ள சாக்கோ சிப்ஸ் பதிலாக வெண்ணிலா ஃப்லேவர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.பீட்சா :

பீட்சா :

ஒற்றை பீஸ் பீட்சாவில் 285 கலோரி இருக்கிறது. ஒரு முழு பீட்சாவையும் சாப்பிட்டால் 1000 கலோரிகளுக்கும் அதிகமாக வரும்.
இதனை தவிர்க்க பீட்சா ஆர்டர் செய்யும் போது தின் க்ரஸ்ட் பீட்சாவை மட்டும் ஆர்டர் செய்திடுங்கள். இதனால் பீட்சாவிற்காக சேர்க்கப்படும் மாவு பொருள் குறைந்திடும்.கப் கேக் :

கப் கேக் :

மாவும் சாக்லேட்டும் அதிகப்படியான கலோரி இருப்பதால் இது உடல்நலத்திற்கு தீங்கானது என்று சொல்லப்படுகிறது. இதனை குறைக்க, சாக்லேட்டுக்கு பதிலாக ஓட்ஸ்,ப்ளூபெர்ரீஸ், நட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது பசியையும் மட்டுப்படுத்தம்.ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் :

ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் :

கார்போஹைட்ரேட் இருக்கும் அதை விட எண்ணெயில் டீப் ஃப்ரை செய்திருப்பதால் ஜங்க் ஃபுட் பட்டியில் முதலிடத்தில் இருக்கும் உணவுகளில் ஒன்று இது. இதனை தவிர்க்க, ஸ்வீட் பொட்டோவை பயன்படுத்தலாம். ஏனென்றால் உருளைக்கிழங்கை விட இந்த ஸ்வீட் பொட்டோட்டோவில் அதிகப்படியான நியூட்ரிசியன்கள் கிடைக்கும்.
இதனை எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக பேக் செய்திடலாம் அல்லது ஏர் ஃப்ரையரில் ஃப்ரை செய்திடலாம்.பாஸ்தா : பாஸ்தா : முழு கோதுமை பாஸ்தா வாங்கி பயன்படுத்துங்கள். கூடுதலாக அதில் காளாண், தக்காளி,கேரட் என காய்களை பயன்படுத்துங்கள் அசைவு உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால், சிக்கன் அல்லது இறால் சேர்த்திடலாம். ப்ரட் சாப்பிடுபவர்கள் மல்ட்டி க்ரைன் ப்ரட் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...