இன்றைய நாகரீக கால மாற்றத்தில், வீட்டிற்குள்ளே செருப்பு அணிந்து நடப்பது பேஷன் ஆகிவிட்டது. குழந்தைகள் கூட வீட்டில் போடுவதற்கு ஒரு காலணியும் வெளியில் செல்வதற்கு ஒரு காலணியும் வைத்து கொண்டு இருக்கிறார்கள். செருப்பு அணியாமல் நடந்தால் பல வித தொற்றுகள் ஏற்படும் என்று அச்சம் கொள்கின்றனர் இன்றைய நவ நாகரீக மக்கள். பழங்காலத்தில் செருப்பு அணியாமல் பலர் பல மைல்கள் நடந்து சென்றிருக்கின்றனர்.
வெறும் கால்களில் நடப்பதை ஆங்கிலத்தில் எர்த்திங் என கூறுவர். வெறும் கால்களில் நடப்பது என்பது பல நல்ல பயன்களை நமக்கு கொடுக்கும் என்று பல விஞ்ஞான ரீதியாக ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. பொதுவாக வெறும் கால்களில் நாம் நடந்தால் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நமது உடலில் உயருவதாகவும், மேலும் உடற் சூட்டை குறைத்து தூக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல் (அதாவது, எந்த இயற்கை மேற்பரப்பிலும்) மீது கால்களில் எதையும் அணியாமல் வெறுமனே நடைபயிற்சி செய்வது ஆகும்.
ஆரம்பகால ஆய்வுகள் நமக்கு தெரிவிப்பது, நாம் நமது கால்களை ஒவ்வொருமுறையும் இயற்கையான மேற்பரப்பில் பதிக்கும் பொழுது நமது கால்களுக்கும் பூமியில் உள்ள எலக்ட்ரோன்கள் ஒரு உறவுப் பாலம் அமைக்கப் படுகிறது.
உடல்கள் மற்றும் பூமியில் உள்ள எலெக்ட்ரான்களுக்கு இடையிலான இந்த பிணைப்பு ஏற்படுவதில் இருந்து உடல் நலன் அதிகரித்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது. நமது பூமிக்கு இயற்கையான சக்தி இருக்கிறது. நமக்கு அஃது நேரடியாக தொடர்பில் இருக்கும் போது, அஃது நமக்கு பலவித பலன்களை கொடுக்கின்றது.
வெறும் காலுடன் ஏன் நடக்க வேண்டும்?
"சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம்" எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, பூமியில் இருக்கும் எலக்ட்ரான்கள் எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை முன்னிலைப் படுத்துகின்றன பல ஆய்வுகளை பற்றி தெரிவித்து இருந்தது. அதில் ஒரு ஆய்வு, அதன் படி நாள் பட்ட (நீண்டகால) நோயின் பிடியிலிருந்து தவிக்கும் சிலரை கார்பன் ஃபைபர் மெத்தைகளை தொடர்ந்து ஒரு கால அளவிற்கு பயன் படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் அதிசயிக்க தக்க வகையில், அந்த ஆய்வில் ஈடுபட்டு இருந்த அனைத்து நோயாளிகளும் முன்னை விட அதிகமாக தூங்கினார்கள் எனவும் மேலும் அவர்களுக்கு நோயினால் ஏற்படும் வலிகளும் அதிகமாக குறைந்ததாகவும் அறிய படுகிறது.
மற்றொரு ஆய்வு, வெறும் கால்களில் நடப்பது மூளையில் மின்மாற்றத்தை மாற்றி அமைத்து சீர் ஆக்குகிறது எனக் கண்டறிந்தது. மேலும் சில ஆராய்ச்சிகளில், வெறும் கால்களில் நடப்பதால், தோல் பராமரிப்புத் திறன், மிதமான இதய துடிப்பு, மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ் கட்டுப்பாடு, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல முக்கியமான செயல் பாடுகளை நிறைவேற்றுகிறது என தெரிய வருகிறது.
தி ஜர்னல் ஆஃப் அல்டர்நேட்டிவ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின்வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், வெறும் கால்களில் நடப்பதால் சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பின் சக்தியை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் இரத்த செல்கள் குவிவது தவிர்க்க படுகின்றன, இது இரத்ததில் உள்ள பாகுத் தன்மையை குறைக்கிறது.
அதிக பாகுத் தன்மை கொண்ட இரத்தத்தின் மூலம் பலவித இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. இதற்காக தான் பலர் இரத்தத்தின் பாகு தன்மையை குறைக்க "ஆஸ்பிரின்" போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதே பத்திரிகையில் மற்றொரு ஆய்வில், வெறும் காலில் நடப்பது நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் கண்டு அறிந்திருக்கிறது.
ஒரு நாளுக்கு குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்வதால், புற்றுநோயின் ஆபத்தை குறைக்க முடியும், மேலும் அஃது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மிதமான எடை மற்றும் நீரிழிவு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கின்றது. கூடுதலாக, நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த ஆக்சிஜனேஷன், சுழற்சி, நோயெதிர்ப்பு, நச்சு நீக்குதல், மற்றும் மன அழுத்தத்தையும் விடுவிக்கிறது.
உங்களுக்கு நெருக்கமானவர்களோடு இணைந்து தோட்டத்திலோ, பூங்காவிலோ, கடற்கரையிலோ வெறும் காலுடன் நடந்து பாருங்கள். மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை பெற்று நலமுடன் வாழுங்கள்!
No comments:
Post a Comment