கை நிறைய காசு இல்லை, லஃசூரியஸ் வாழ்க்கை இல்லை, பன்னாட்டு உணவு வகைகள் ருசிக்கவில்லை, கேலிக்கை, நேரம் கடத்த கண்ணாடி கட்டிடங்கள இல்லை, தெருவுக்கு, தெரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் இல்லை, ஆனால்... நிம்மதியான தூக்கம் இருந்தது.
இன்று அனைத்தும் இருக்கிறது. ஐந்தங்குல திரைக்குள் உலகை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும். ஆனால், இரு கண்களில் நிம்மதியான உறக்கம் மட்டும் காணவில்லை. இன்று பலரும் வேண்டுவது நிம்மதியான உறக்கம் மற்றும்நோயவாயற்ற மரணம்.சந்திரனை கூட வாங்கிவிடலாம் போல... ஆனால், அவன் தரிசிக்கும் இரவில் உறக்கம் வாங்குவது கடினமாக இருக்கிறது.
சரி! ஈஸியா கவலைய மறந்து, மருந்தே இல்லாம நிம்மதியா தூங்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
எழுத்து!
நமக்கெல்லாம் படிப்பு மண்டையில் ஏறவில்லை என்றால் முதல் வேலையாக டீச்சர் வகுப்பில் கொடுக்கும் தண்டனை இம்போஷீஷன். பத்து தடவ எழுதிட்டு வா மண்டையில் கொட்டி அனுப்புவார். அப்பறம் தான் அது கொஞ்சம் மண்டையில் ஏறும்.
இசை!
அப்பாக்கள் குழந்தைகளிடம் கேட்கும் டவுட் இது, " எப்படிடா திருக்குறள் எத்தின வாட்டி படிச்சாலும் உனக்கு மண்டையில ஏறவே மாட்டேங்குது, சினிமா பாட்டு மட்டும் ரெண்டு தடவ கேட்டா, மூணாவது தடவ உன் வாயில முணுமுணுக்க ஆரம்பிச்சிடுது..?"
ஆம்! எழுதுவதை காட்டிலும், படிப்பதை காட்டிலும், பாடலாக, இசை வாயிலாக கேட்கும் விஷயங்கள் நமது மனதில் எளிதாக பதியும் என்பது அறிவியல் ரீதியாக ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மை.
வாசி!
உங்கள் நண்பர்கள் மத்தியில் யாருக்கேனும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடம் நீங்கள் இதை கவனித்திருக்கலாம். படித்துக் கொண்டிருக்கும் போதே உறங்கியிருப்பார்கள். அல்லது புத்தகம் ஒருபக்கம் மெத்தையில் இருக்கும், இவர்கள் மறுபக்கம் மெத்தையில் உருண்டு தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
எப்படிடா இவனுக்கு மட்டும் இப்படி தூக்கம் வருகிறது என உங்களுக்குள் சந்தேகம் எழுந்தது உண்டா?
நீங்கள் சந்தேகித்திருக்க வேண்டும். அப்போ உங்களுக்கு ஒரு நல்ல விடை கிடைச்சிருக்கும்.
மொட்டை தலையும், முழங்காலும்!
என்னடா இது முன்னுரையில, நிம்மதியான தூக்கம் பத்தி பேசிட்டு, பின்னாடி ஏதோ, எழுத்து, இசை, வாசிக்கிறதுன்னு மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி இருக்கேன்னு தோணுதா...? தோணுறது தப்பு இல்ல. ஆனா, இந்த மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் கனக்ஷன் இருக்கு.
இது தான் கனக்ஷன்!
நிம்மதியான உறக்கம் பெற நீங்கள் மாத்திரையோ, அல்லது யோகா, தியானம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. இரவில் புத்தகம் படியிங்கள். நல்ல இசை கேளுங்கள், நீங்கள் பெரிய எழுத்தாளன் இல்லை என்றாலும் பரவாயில்லை, உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை உங்களுக்கு சரளமாக எழுத வரும் மொழியில் முடிந்த வரை எழுதுங்கள். கையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை.
உங்கள் எண்ணத்தை, கவனத்தை ஒருமுகப்படுத்தினால் உங்கள் மனது ரிலாக்ஸ் ஆகும். உங்கள் மனது ரிலாக்ஸ் ஆனால், மூளையின் ஸ்ட்ரஸ் குறையும். உங்கள் மூளையின் ஸ்ட்ரஸ் குறைந்தால் தன்னப்போல தூக்கம் தானா வரும்.
முடிஞ்சா, இத இன்னக்கி நைட்டே ட்ரை பண்ணி பாருங்க!
ஒரே நாள்ல ரிசல்ட் கிடைக்காது. ஆனா, கண்டிப்பாக சோர்வற்ற, நிம்மதியான நல்ல தூக்கம் கிடைக்கும்!
No comments:
Post a Comment