நமது பண்டைய காலங்களில் நமது மதங்களிலும் கலாச்சாரத்திலும் சூரியனை கண்களால் காண்பது மற்றும் சூரிய குளியல் எடுப்பது ஆகியவை இருந்து வந்தன.
சூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்ப்பதற்கான அறிவையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சரும பூச்சு
விளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாகி காட்டுகின்றனர். ஆனால் சூரியஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. அதன் விளக்கத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.எவ்வளவு சூரிய ஒலி உடலுக்கு நல்லது?
தினமும் 10-15 நிமிடங்கள் காலை மற்றும் மாலை நேர வெயில் உடலுக்கும் மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
காலை 7மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை நாம் எடுத்து கொள்ளலாம் . இன்னும் விரிவாக சொல்ல போனால், சூரியன் உதித்ததில் இருந்து 2 மணி நேரம்சென்றவுடன் அதன் யுவி கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந்த நேரம் நாம் வெயிலை அனுபவிக்க சிறந்த நேரம்.
மிதமான சூரிய வெளிப்பாட்டை நாம் உடலில் ஏற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ:
மகிழ்ச்சியை அளிக்கிறது:
சூரிய ஒளி உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த செரோடோனின் என்பது உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த ஹார்மோன்
உடலில் அதிகம் சுரப்பதால் இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியோடும் ஆற்றலோடும் இருக்க முடிகிறது. சூரிய ஒளியின் வெளிப்பாட்டினால் மனச்சோர்வு குறைகிறது,
அதிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற வெளியிடங்களில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எண்டோரபின் என்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. இது நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறதுவைட்டமின் டி சத்து : குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வைட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கிறது. வைட்டமின் டி யை சூரிய ஒளி வைட்டமின் என்று அழைப்பர். சூரிய ஒளி உடலை வைட்டமின் டி தயாரிக்க தூண்டுகிறது. குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் உதவி புரிகிறது. வைட்டமின் டி இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது: சூரிய ஒளியில் உடலில் T செல்கள் உருவாவதை அதிகரிக்கிறது. T செல்கள் என்பது வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகையாகும். இவை உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிகின்றன. வெள்ளை அணுக்கள் உடலில் உள்ள நச்சு தன்மையை எதிர்த்து போராடும் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்சிஜென் கொண்டு செல்லும் திறனையும் சூரிய ஒளி அதிகரிக்கின்றது.நீரிழிவை தடுக்கிறது: சூரிய ஒளியின் வெளிப்பாடும், போதுமான அளவு வைட்டமின் டியும் நீரிழிவு நோய் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய ஒளியின் மூலம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று சில ஆய்வின் முடிவுகள் உரைக்கின்றன.மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் நோயை தடுக்கிறது: இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் உடல் நடுக்கம் அல்லது பக்கவாதம் ஏற்படலாம். சூரிய வெளிப்பாட்டை எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரிய வெப்பம் அதிகமாக இல்லாத நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.சருமத்தை பாதுகாக்கிறது: சோரியாசிஸ் , எக்ஸிமா,. பூஞ்சை தொற்று, கட்டிகள் போன்றவற்றில் இருந்து சூரிய ஒளி வெளிப்பாடு நமது தோலை பாதுகாக்கிறது. ஆயுர்வேத சூரிய குளியலில், பாதிப்பு ஏற்பட்ட உடல் பாகம் 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் படுமாறு நிற்க செய்வர். சூரிய ஒளியின் தாக்கத்தால் உடல் பாகம் சூடானதும், மறுபடி நிழலுக்கு வந்து பாதிக்கபட்ட இடங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வர் . இந்த சிகிச்சையை தொடர்ந்து காலை வெயிலில் செய்வதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது: வைட்டமின் டியின் குறைபாடால் பெண்கள் கருவுருவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்ற ஒரு ஹார்மோன் சீர்கேடு 5இல் 1 பெண்ணுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த நோயால் பாதிக்க படும் பெண்களுக்கு சீரில்லாத மாதவிடாய் காலங்கள்,மற்றும் உடலில் தேவை இல்லாத ரோமங்கள் முளைப்பது,மற்றும் கருவுறாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகையால் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் தினமும் காலையில் சூரிய கிளியல் எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.கருவுற்றல் அதிகரிக்கும்: மெலடோனின் என்ற ஹார்மோன் கருவுறுதலை தடுக்கிறது. சூரிய ஒளி இந்த ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது . சூரிய ஓளியால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் வெயில் காலங்களில் அதிகமாக சுரக்கிறது. வெயில் காலங்கள் மற்ற காலங்களை விட கருவுருவதற்கு சிறந்த காலம் என்று ஆரய்ச்சிகள் கூறுகின்றன. இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் சூரிய ஒளியில் உள்ள பயன்கள் நம்மை வெகுவாக ஆச்சர்யப்படுத்துகிறது. இந்த பயன்கள் பெற்று நமது ஆரோக்கியத்தை காப்போம்!
No comments:
Post a Comment