Wednesday, 30 August 2017

அரியவகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் தெலுங்கானா சிறுவன்!

பிறக்கும் ஏற்படும் சில குறைபாடுகள் மற்றவர் வாழும் இயல்பு வாழ்வை வாழ முடியாத நிலைக்கு நம்மை தள்ளும். அதிலும், முக்கியமாக கை, கால் சார்ந்த குறைபாடுகள் இந்த சமூகத்தில் ஒரு சவாலுடன் ஒவ்வொரு நொடியையும் நகர்த்த செய்யும்.

சில கோளாறுகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். அதிலும், சிலரது வாழ்க்கை சூழல் மற்றும் பொருளாதார நிலையானது எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

அஸ்வந்த், எட்டு வயதேயான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன். இந்த சிறுவனின் கை, கால் விரல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.

இதனால், கை இருந்தும் பயன்படுத்த முடியாத அவலநிலையில் தவித்து வருகிறான் சிறுவன் அஸ்வந்த். இவனால் ஷூ மாட்ட முடியாது, கை, கால்களை விரல்கள் மரபணு கோளாறு காரணத்தால் எதற்கும் பயன்படுத்து முடியாத நிலையில் இருக்கிறது.
             மேலும், இச்சிறுவனின் தலை இயல்பு நிலையை காட்டிலும் பெரிதாக வளர்ந்து வருகிறது.
             சிறுவன் அஸ்வந்த்தின் குடும்பம் இவனுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்று வருகிறார்கள். இதற்காக தங்கள் நிலம், நகை உட்பட அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டார்கள். அஸ்வந்தின் தந்தை ஒரு லாரி கிளீனர். அஸ்வந்த் பாதிக்கப்பட்டுள்ளது Apert Syndrome என கூறப்படுகிறது. சிறுவனின் நிலை இப்போது முதிர் நிலையை அடைந்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை செய்ய, இந்த குறைபாட்டை குணமாக்க போதிய பணவசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த சிறுவனின் மூன்று வயதில் இருந்து இந்த குறைபாட்டின் அறிகுறிகள் வெளிப்பட துன்வங்கியுள்ளன. ஆனால், இதை பற்றிய போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெற்றோர் அறியாதிருந்துள்ளனர். அஸ்வந்தின் கிராமத்தில் இருப்பவர் இப்போது இவருக்காக பொது மக்களிடம் இருந்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக பணம் சேர்த்து வருகிறார்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...