மார்பகம் என்பது பெண்களின் உடலில் மிக முக்கியமான பாகம். தாய்மையின் பெரும் பங்குபெறும் பாகமாகவும் மார்பகம் விளங்குகிறது. பெண்களின் உடல் இயற்கையாகவே சென்ஸிடிவானது. அதிலும், பெண்களின் சில உடல் பாகங்கள் மிகவும் மிருதுவானது. அப்பகுதிகளில் பெண்கள் தங்களை அறியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட, சில தீய தாக்கங்கள் உண்டாக காரணியாகிவிடலாம். குப்புறப்படுத்து உறங்குவது, இறுக்கமான மேலாடை அணிவது, தவறான ஹேர் ரிமூவல் டெக்னிக் பின்பற்றுதல் என பெண்கள், தங்களை அறியாமல் செய்யும் 7 தவறுகள் அவர்களது மார்பளவில் தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றன...
துளையிடுதல்! சில பெண்கள் மத்தியில் மார்பகத்தில் துளையிடுதல், அங்கே வளையம் மாட்டிக் கொள்தல் ஃபேஷனாக இருக்கிறது. ஆனால், இதை தவிர்க்க கூறி மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர். ஏனெனில், மார்பக பகுதியில் நிணநீர் முனைகள் மிக அருகாமையில் இருக்கும். துளையிடுதல் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்
ஸ்போர்ட்ஸ் பிரா! ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாத, சாதாரண பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தல், விளையாட்டில் ஈடுபடுதல் மார்பக அளவில் / மார்பக வடிவில் தாக்கம் உண்டாக்கலாம்.
படுக்கும் நிலை! வயிறு தரையில் படும்படி குப்புறப்படுத்து உறங்குவது மார்க்க அளவில் / வடிவில் தாக்கம் ஏற்படுத்தலாம். அல்ல, இப்படி படுத்து உறங்குவது தான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது எனில், கீழே தலையணை பயன்படுத்தி உறங்க பழகுங்கள்.
சென்ஸிடிவ்! மார்பக பகுதி சருமம் மிகவும் சென்ஸிடிவானது. இப்பகுதியில் அதிகம் வெயில் படாதபடி உடை அணிய வேண்டும். அல்லது மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் அறிவுரைக்கிறார்கள்.
சிலிகான்! மார்பக அளவை பெரிதுப்படுத்திக் கொள்ள நினைப்பதில் தவறல்ல. ஆனால், சிலிகான் பந்துகள் கொண்டு தங்கள் மார்பக அளவை பெரிதுப்படுத்திக் கொள்ள பெண்கள் விரும்புவது தவறு. இது பல வகைகளில் ஆரோக்யத்தில் சீர்கேடுகள் வரவழைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தவறான சைஸ்! மார்பகத்தை எடுப்பாக தெரிய வேண்டும், மார்பகங்கள் தொங்கிவிடக் கூடாது என பல பெண்கள் இறுக்கமான பிரா அணிவதுண்டு. இதனால் காலப்போக்கில் அவர்களுக்கு மார்பக பகுதி இரத்த நாளங்களில் தீய தாக்கம் உண்டாகும். மேலும், வெறும் 25% பெண்கள் தான் சரியான அளவு பிரா அணிகிறார்கள் என ஓர் ஆய்வறிக்கையில் தகவல் அறியப்படுகிறது.
முடி அகற்றுதல்! நாம் முன்பு கூறியது போல, மார்பக பகுதி சருமம் மிகவும் மிருதுவானது. அங்கே முடிகளை அகற்ற Tweezers முறையை பயன்படுத்துதல் தவறு. இது சேதம் உண்டாக காரணமாக அமையலாம். எனவே, சாதாரண முடி அகற்றும் ஹேர் ரிமூவல் க்ரீம் பயபடுத்தினாலே போதும்.
No comments:
Post a Comment