Thursday, 31 August 2017

குண்டாகவும், ஆரோக்கியம் குறையவும் மனைவி கூட நீங்க போடற சண்டை தான் காரணம் தெரியுமா?

நமது ஆரோக்கியத்தில் பெரும்பகுதி நமது மனம் சார்ந்து தான் இருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது போல மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதில்லை.May Relationship Problem May Cause Weight Gainநீங்கள் ஒரு ஆரோக்கியமற்ற உறவில், அதாவது மகிழ்ச்சியை தராத உறவில் மன வருத்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களது உடல் நலனில் கட்டாயம் பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்களது உடல் எடையும் அதிகரிக்கும்.உடல் எடை அதிகரிப்பு:

உடல் எடை அதிகரிப்பு:

ஒரு ஆய்வில் திருமணத்திற்கு பிறகு ஈடுபாடில்லாத ஒரு உறவு, மன கசப்புகள் மற்றும் உறவில் திருப்தி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் தூக்கமின்மையும் உண்டாகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.மன அழுத்தம்

மன அழுத்தம்

பல தரப்பட்ட ஆய்வுகளில் தினசரி உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகள் மனதளவில் மிகவும் உற்சாகமாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு உடலுறவில் நாட்டம் அதிகமாக இருந்து, மற்றொருவருக்கு ஈடுபாடு குறைவாக இருந்தால், போதுமான அளவு உடலுறவு இல்லாமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.கவலை

கவலை

உறவுகளிடையே உள்ள பிரச்சனை யாரையும் கவலையின் உச்சத்தில் தள்ளி விடுகிறது. இதனால் எந்த ஒரு வேலையிலும் ஈடுப்பாடு இல்லாமல் போகிறது. இது மன நோய்களுக்கு வழிவகுக்கிறது.மன சோர்வு

மன சோர்வு

வாழ்க்கையில் சரியான உறவு கிடைக்கவில்லை என்றால் அதிக கவலை மற்றும் மனசோர்வு ஏற்படுகிறது. இந்த மன சோர்வு ஆண்களை காட்டிலும் பெண்களை ஆறு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட குடும்ப பிரச்சனைகளுக்கு மதுவை கையில் எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மது பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்பதை உணர வேண்டியது அவசியம். மதுவினால் அதிக அளவு மன சோர்வு தான் ஏற்படுகிறது. பல ஆரோக்கிய சீர் கேடுகளும் உண்டாகின்றன.இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத தம்பதிகளுக்கு, பிரச்சனைகளின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

புகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்!!

புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொல்லி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புகைப்பதை நிறுத்தச் சொல்கிறோம். அவர் புகைப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்ததா? இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா?
Best Ways To flush out Nicotine from your bodyபுகையை நிறுத்தினால் மட்டும் போதாது. நுரையீரலில் படிந்திருக்கும் நிக்கோட்டினை அகற்றினால் மட்டுமே ஆரோக்கியம் ஓரளவுக்காவது மீளும்.பழங்கள் :

பழங்கள் :

சிகரெட் புகைப்பவர்களுக்கு உடலில் உள்ள விட்டமின் ஏ,சி மற்றும் ஈ அளவு குறைந்திடும். அதனை ஈடுகட்டும் விதமாக நிறைய பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக நெல்லிக்காய், கிவி பழத்தை சாப்பிடலாம். அதில் எக்கசக்கமான விட்டமின் சத்துக்கள் உள்ளன.
நுரையீரலின் செயல்பாடுகளுக்கு விட்டமின் ஏ பெரிதும் உதவிடும்.
நம் உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் இருக்க உதவிடுகிறது விட்டமின் பி6. இது நுரையீரல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்திடும்.கீரைகள் :

கீரைகள் :

கீரைகளில் அதிகப்படியான ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின்ஸ் நிறைந்திருக்கும். நுரையீரலை காக்க உதவிடும் விட்டமின் ஏ மற்றும் ஃப்ளேவனாய்ட் கீரைகளில் அதிகம் இருக்கும்.
அதிலிருக்கும் இரும்புச்சத்து நுரையீரலில் இருந்து உடலில் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எளிதாக கொண்டு செல்ல உதவிடும்.
இதனால் நுரையீரலுக்கு அதிக வேலை இருக்காது.தண்ணீர் :

தண்ணீர் :

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் புகைக்கும் போது உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் குறைந்து கொண்டேயிருக்கும்.
இதனை சரிசெய்ய சாதாரண மனிதர்களை விட புகைப்பிடித்தவரக்ள் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும்.
மூக்கு வழியாக சுவாசிக்கும் போது ஈரப்பதமான காற்று உள்ளே போகும். இதே வாய் வழியாக சுவாசிக்கும் போது வறண்ட காற்று தான் உள்ளே போகும்.
புகைப்பிடித்து ஏற்கனவே வறண்டு இருக்கும் நேரத்தில் வாய்வழியாக சுவாசிக்க கூடாது.
நுரையீரல் துரிதமாக செயல்படவும், ஈரப்பதம் மிகவும் அவசியம் அதற்கு கண்டிப்பாக அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும்.வெங்காயம் :

வெங்காயம் :

நுரையீரலை சுத்தப்படுத்துவதில் வெங்காயத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நுரையீரலில் வரும் தொற்று நோய்களைக் கூட இது குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
புற்றுநோயாளிகளில் தங்களது உடலில் செல் உற்பத்தியை தடுக்க வெங்காயத்தை உண்பர்.
வெங்காயத்தில் இருக்கும் ஆந்தோசயனின் என்னும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் வெங்காயத்திற்கு இளம் சிவப்பு நிறத்தை கொடுக்கிறது.
இதுவும் வெங்காயத்தில் இருக்கும் அமினோ ஆசிட் சிஸ்டைனும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.ஆரஞ்ச் :

ஆரஞ்ச் :

இதில் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுத்திடும் க்ரிப்டோக்ஸன்தின் என்னும் மூலப்பொருள் இருக்கிறது. அத்துடன் இதில் அதிகப்படியான விட்டமின் சி இருப்பதால் இதனை உட்கொண்டால் நுரையிரல் எளிதாக ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவிடும்.
ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் கரோடினாய்ட்ஸ் என்னும் மூலப்பொருள் இருக்கும். இது நுரையீரல் விரைந்த செயலாற்ற உதவிடும்.ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பி5 நம் உடலுக்கு மிகவும் அவசியம். புகைப்பவர்களின் நுரையீரல் பாதையான NRF2 அடைப்பட்டிருக்கும். ப்ரோக்கோலியில் இருந்து கிடைக்கும் சல்போர்பேன் இதனை தீர்த்திடும்.பைன் ஆயில் :

பைன் ஆயில் :

பைன் ஆயில் அல்லது பைன் டீ நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் சிறந்தது. அதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடன்ஸ், விட்டமின் ஏ மற்றும் சி இருக்கிறது.
நுரையீரலில் சேரும் அழுக்கு மற்றும் சளியை நீக்குவதில் இது சிறந்தது மக்காச் சோளம் :

மக்காச் சோளம் :

மக்காச்சோளத்தில் பீட்டா க்ரிப்டாக்ஸான்தின் இருக்கிறது. இது நுரையீல் புற்றுநோயிலிருந்து நம்மை காத்திடும்.
கார்னில் இருக்கும் பீட்டா கரோட்டின் மூலமாக நம் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ சத்து கிடைத்திடும்.இஞ்சி :

இஞ்சி :

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறாரகள். வீரியமிக்க பல நோய்களை இது அழிக்க துணைபுரிந்திருக்கிறது.
நுரையீரலில் சேர்ந்திருக்கும் டாக்ஸின்களை நீக்க இஞ்சி மிகச்சிறந்த மருந்தாக பயன்படும். இஞ்சியை தோல் நீக்கி அப்படியே கூட சாப்பிடலாம்.
இல்லையென்றால் ஒரு டம்பளர் தண்ணீரில் இஞ்சியை நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் அது அரைகப் அளவு தண்ணீர் குறையும் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரையும் தொடர்ந்து குடிக்கலாம்.
நுரையீரலில் சேர்ந்திருக்கும் நச்சுப்புகையை நீக்கவும் இது உதவுகிறது. அத்துடன் அதன் செயல்பாடுகளுக்கும், நுரையீரலின் தன்மை மேம்படவும் இஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.கேரட் :

கேரட் :

புகைப்பதால் உள்ளூருப்புகள் மட்டுமின்றி சருமமும் பாதிப்படையும். அதனை ஈடுகட்ட விட்டமின் சத்துக்கள் நிறைந்த கேரட் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது சருமத்திற்கு மட்டுமல்ல உள்ளே சேர்ந்திருக்கும் நிக்கோட்டினை வெளியேற்றவும் செய்யும்.
நுரையிரலில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதுடன் புகைப்பதால் உண்டான உபாதைகளின் வீரியத்தை குறைகக்வும் செய்திடும்.
தினமும் காரட்களை உண்பதால் நுரையிரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் பாதியளவு குறைந்திடும் என்கிறது ஓர் ஆய்வு!.உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

நுரையிரலை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள சிறந்த சாய்ஸ் உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் போது ஆழமான மூச்சு எடுப்போம் இது நுரையிரலுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
உடற்பயிற்சி செய்வதுடன் மூச்சுப்பயிற்சியையும் செய்யலாம்.சிகப்பு மிளகாய் :

சிகப்பு மிளகாய் :

மிளகாய்க்கு இந்த வண்ணத்தை கொடுப்பது அதிலிருக்கும் பீட்டா கரோட்டீன் தான். நுரையிரலில் தங்கியிருக்கும் சளியை அகற்ற உதவிடும்.
அத்துடன் உடலில் உள்ள கிருமிகளை நீக்கவும் இது உதவுகிறது.செய்யக்கூடாதவை :

செய்யக்கூடாதவை :

புகைப்பதை நிறுத்தியதற்கு வாழ்த்துக்கள் ! தொடர்ந்து மேற்சொன்ன உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் செய்யக்கூடாது முக்கியமான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
மன அழுத்தம் :
புகைப்பதை நிறுத்திய பிறகு ஒரு வகையான மன அழுத்தம் உண்டாகும். இதற்கு மாற்றாக வேறு சில போதை பழக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேவையற்ற குழப்பங்கள்,கோபம் என நீங்கள் மன ரீதியாக பாதிகப்பட்டிருப்பீர்கள். அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.சர்க்கரை :

சர்க்கரை :

மாவு, சர்க்கரை, கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உடலில் அதிக பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
ஏற்கனவே நுரையிரல் பாதிக்கபப்ட்டிருக்கும் நிலையில் இதனை உண்பதால் மற்றவரக்ளை விட உங்களுக்கு சீக்கரமாகவே நோய்த்தொற்று ஏற்ப்பட்டிடும்.விலகியிருங்கள் :

விலகியிருங்கள் :

உங்கள் நட்பு வட்டத்தில் புகைப்பவர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து விலகியிருங்கள். சிகரெட் புகையை மறந்தும் கூட சுவாசிக்க வேண்டாம்.குடி :

குடி :

சிகரெட் நிறுத்திய சிறிது நாட்களுக்கு குடிக்கவும் கூடாது. உடலில் சேரும் ஆல்கஹால் சிகரெட் புகைக்க தூண்டும் என்பதால் அதனையும் தவிர்த்திடுங்கள்.
ஆல் தி பெஸ்ட் !!!!!!!!

சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் கூட, 1980களில் நாடு எங்கும் நிறைந்திருந்தவை, சீதாப்பழ மரமும், கொடுக்காபுளி மரமும். காசு கொடுக்காமல் இலவசமாகவே, சாலையோர மரங்களில் கிடைக்கும் அந்த சுவை மிகுந்த பழங்களை, சிறுவர்கள் எல்லாம் தேடித்தேடி, சாப்பிடுவார்கள். சிறுவர்கள் செல்லும் வழிகளில், பார்க்குமிடங்கள் எல்லாம், அந்த மரங்களின் கனிகளை, காய்களைக் கவர்ந்து ஒளிந்து நின்று, ருசித்து ரசித்து சாப்பிடும் அவையெல்லாம், உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்பவை, என்பதை இன்று அறிய முடிகிறது.
அன்று? அதன் சுவைக்காக மட்டும் சிறுவர்களால், அதிகம் விரும்பிச் சாப்பிடப்பட்டது. மேலும் வசதியுள்ள சிறுவர்கள், வசதி இல்லாத சிறுவர்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல், எல்லாச்சிறுவரும் விரும்பி உண்ட அவையெல்லாம், இன்று கடைகளில் அரிதாகக் கிடைக்கிறது.
பாக்கெட்களில் அடைத்து அதற்கு ஒரு விலையையும் இட்டு வைத்திருப்பது, பள்ளிப்பருவத்தில் ஓசியில் பறித்துத் தின்றவர்களுக்கு, புதிதாக இருந்தாலும் அவற்றை வாங்கி, வீட்டிற்கு வந்து தங்கள் பிள்ளைகளிடம் கொடுக்க, அவர்கள் மிக அலட்சியமாக அவற்றை மறுத்துவிட தலைமுறைகள் மாறிவிட்டது.
இன்றைய சிறுவர்கள் அந்த அனுபவங்களைப் பெற முடியாமல் நவீன வாழ்க்கை நம்மை மாற்றிவிட்டது. நீங்கள் பள்ளிப்பருவ நாட்களை நினைத்துகொண்டு அந்தச்சுவை இப்போது இல்ல என நினைக்கும் போது நமக்கும் வயதாகிக்கொண்டிருக்கும் உண்மை, சுள்ளென உரைக்கிறது... நிற்க, இப்படியே போனால், இது தத்துவக்கட்டுரையாகிவிடும், நாம் இனி இந்த சீதாப்பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.Health benefits of custard apple and its medicinal properties சீதாப்பழம்:
ஊளைச் சதை இருக்கிறதா, நடக்கவே கஷ்டமா இருக்கா, சீதாப்பழம் சாப்பிடுங்க, அப்புறம் நடக்க மாட்டீங்க,! ஓடிடுட்டே, இருப்பீங்க..!!
சீதாப் பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மையுடையது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும், எங்கும் எளிதில் வளரும் தன்மையுடையது. வைட்டமின், புரதம், மற்றும் இரும்புச் சத்து அதிகம் கொண்ட சீதாப்பழம் மிக உயர்வான மருத்துவப் பலன்கள் கொண்டது. அதனால்தான் நாம் அதிகம் உபயோகிப்பதில்லை.
இதன் பலன்களை நன்கு அறிந்த மேலைநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் நம்மிடமிருந்து இறக்குமதி செய்து மருந்துப்பொருட்கள் தயாரிக்கின்றன. தாம் உபயோகித்து இதன் பலன்களை அனுபவிக்காவிட்டாலும் சீதாப்பழங்களை அதிகஅளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சிலர் பொருளாதாரத்தில் வளமான பலன்களை, அடைகின்றனர்.
கஸ்டர்ட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போமா?Health benefits of custard apple and its medicinal properties இதயம் காக்கும்
சீதாப்பழங்களின் தோல்நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும் அணுகாது வாழலாம்.
காச நோயை குணப்படுத்த :
நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். ஆரம்ப நிலை காசநோயை உடலிலிருந்து நீக்கும். மற்ற வகை காசநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
உடல் ஊளைச்சதை குறைக்கும்.
உடல் எடை குறைய :
ஊளைச்சதையை குறைத்து, உடல் மெலிதாகி வனப்புடன் திகழ, சீதாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரும்பிய பலன்கள் கிட்டும். கோடைத்தாகம் நீக்கும். நாவறட்சி போக்கும்.
கோடைக்காலங்களில் ஏற்படும், அதீத தாகம், நாக்குவறட்சி இவற்றைப் போக்கி, உடலுக்கு குளிர்ச்சிதரும் தன்மைமிக்கது சீதாப்பழம். பெரிய ஆபரேசன்கள் ஆகி, அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உட்கொள்வதால் உடல் உள்உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும். மேலும், ஊறவைத்த வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட, குடற் புண்களையும் ஆற்றும்.
மலச்சிக்கல் நீங்க:
சீதாப்பழம் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கும்.
ரத்த சோகை :
சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும், மேலும் உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்வு தரும்.Health benefits of custard apple and its medicinal properties மன நோய் குணமாக
சீதாப்பழத்தை இஞ்சிச்சாறு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, அல்லது தனியே சாப்பிட்டுவர, பித்தம் தெளிந்து, மனநோய் குணமாகும். உடல் வலுப்பெற, சீதாப்பழத்தை, திராட்சைப்பழச்சாறு கலந்து ஜூசாகக் குடித்துவரலாம். இரவில் சாப்பிட, நல்ல உறக்கம் வரும். சீதாப்பழத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகிவர, சிறுநீர் கடுப்பு நீங்கி, சிறுநீர் சீராக வெளியேறும்.
சீதாப்பழத்தின் மற்ற பலன்கள்:
தலையில் அதிகம் தொல்லைக் கொடுக்கும் பேன்களை ஒழிக்க, சீதாப்பழத்திலிருந்து கூந்தல் தைலம் தயாரிக்கின்றனர். சீதாப்பழத்தை பூண்டு சேர்த்து அரைத்து, தேமல்கள் மீது பூசிவர, தேமல் மறையும்.

ஆண்கள் மாதத்திற்கு 21 தடவை சுய இன்பம் காண்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

தொடர்ந்து சுய இன்பம் மேற்கொள்ளும் ஆண்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு மரண நோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
இந்த மாதிரி செக்ஸ் பற்றிய பேச்சை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருப்பதில்லை. அதனால் தான் ஆண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
சுய இன்பம் என்பது ஒரு இயற்கையான செக்ஸுவல் ரிலீஸாகும். ஆனால் முந்தைய காலகட்டத்தில் இதைப் பற்றிய கட்டுக்கதை சுய இன்பம் என்றாலே தவறான பழக்கம் என்பதைத் தான் சுட்டிக் காட்டுகின்றது.Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Diseaseநிறைய பேர்கள் சுய இன்பம் என்றாலே பயப்படுவதற்கு காரணம் கண்பார்வை குறைவு, பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற தவறான கட்டுக்கதைகளை பற்றிய எண்ணங்கள் ஏற்பட்டதால் தான்.
இதனால் நிறைய ஆண்கள் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர்.
இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வது ஆரோக்கியமானது. ஆண்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 21 தடவை செய்தால் மரண நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Diseaseசுய இன்பத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன அதைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.
மன அழுத்தம் குறைதல்
சுய இன்பம் உங்களது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடனடியாக மன அழுத்தத்தை குறைக்கிறது. மூளையில் என்டோர்பின்ஸ்யை உருவாக்குகிறது.
ஸ்பெர்ம் இயங்கும் தன்மை அதிகரித்தல்
சுய இன்பம் ஸ்பெர்ம் இயங்கும் தன்மையை அதிகரிக்கிறது. ஆண்களின் விறைப்புத் தன்மையை உடலுறவு இல்லாமல் இழக்கச் செய்கிறது.
புரோஸ்டேட் கேன்சரை தவிர்த்தல்
ஹெர்வார்டு யுனிவர்சிட்டி செய்த புதிய ஆராய்ச்சி தகவலானது ஆண்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 21 தடவை சுய இன்பம் மேற்கொண்டால் புரோஸ்டேட் கேன்சர் வருவது தடுக்கப்படுகிறது.Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease50 வயதுக்கு மேல் ஆண்களுக்கு இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவது அதிகமாக உள்ளது. இது மரணத்தையே ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
இதற்காக 50 வயதுள்ள ஆண்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் தொடர்ச்சியான சுய இன்பம் செய்யாததும் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தொடர்ச்சியான சுய இன்பம் மேற்கொண்டால் செக்ஸஷூவல் ரிலாக்ஸ் ஏற்பட்டு புரோஸ்டேட் கேன்சர் வருவதை தடுக்கலாம்.

இத செஞ்சா ஜிம் போகாமலே உடலை ஃபிட்டாக்கலாம்! எப்படி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பிட்னசில் அதிகமான அக்கறை செலுத்தி வருகிறது இன்றைய தலைமுறை. துரித உணவுகள் பக்கம் ஓடும் அதே நேரத்தில் புதுப்புது டயட்டுகள், ஜிம், ஜாக்கிங்  என்று பல விஷயங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
இவை எல்லாவற்றையும் விட பிட்னஸுக்கு எக்சர்சைஸ் மட்டும் வேண்டாம் கலையோடு சேர்ந்த விஷயமாக இருக்கட்டும் என்றெண்ணி பிட்னஸ் டான்ஸ்களும் இன்று நிறைய வந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்காகத் செய்யப்படும் டான்சகளை பற்றிய தொகுப்புபாலட் டான்ஸ் :

பாலட் டான்ஸ் :

உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும். தசைகளுக்கு நிறைய வேலை அளிப்பவை என்பதால் சதைகளும் ஆரோக்கியமாக இருக்கும். பெரும்பாலும் சுற்றுதலும் உடலை பேலனிசிங்காக வைத்துக் கொள்ளக்கூடிய ஸ்டெப்ஸ்களே அதிகம் வரும்.கால்,தொடை, பகுதிகள் நல்ல வடிவமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.இதனை வீட்டில் தனியாக பயிற்சி செய்வதை விட தகுந்த பயிற்றுனரின் உதவியுடன் பயிற்சி செய்வதே சிறந்தது.ஸ்விங் டான்ஸ் :

ஸ்விங் டான்ஸ் :

லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை டான்ஸிற்கு தனியாக ரூல்ஸ் எல்லாம் எதுவும் இல்லை. நண்பர்கள் பலர் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஒரு மணி நேரம் வரை ஆட வேண்டும், சில ஸ்விங் கிளப் துவங்கப்பட்டு அதன் மூலமாக பலரை ஒன்றிணைத்து ஆடுகிறார்கள். உங்களுக்கு பிடித்தமான ஆடை எதுவும் அணிந்து கொள்ளலாம். இந்த வகை நடனத்தில் ஒரு மணி நேரத்தில் 300 கலோரி குறைத்திட வேண்டும் என்பது தான் அவர்களுது ஒரே குறிக்கோள்.பெல்லி டான்ஸ் :

பெல்லி டான்ஸ் :

நம் உடலை செதுக்கும் இவ்வகை நடன அமைப்பிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அடிவயிற்று தசையை குறைக்கச் செய்யும். ஏரோபிக்ஸ் ஸ்டெப்ஸ் சில வந்தாலும் பெரும்பாலும் வயிற்றுக்கு அசைவு கொடுக்கிற மாதிரியான ஸ்டெப்ஸ்கள் அதிகமிருக்கும். முதுகுவலி, ஷோல்டர் வலி இருப்பவர்கள் இந்த வகை நடனத்தை ஆடலாம். அதிரடியான ஸ்டெப்ஸ்கள் இல்லாமல் மைல்ட்டான ஸ்டெப்ஸ்களே அதிகமிருப்பதால் கர்ப்பிணிகள், வயதோனோர் ஆடலாம்.ஜும்பா :

ஜும்பா :

நம் ஊரில் இது மிகப்பிரபலம். பாட்டிற்கேற்ப சின்ன சின்ன டான்ஸ் ஸ்டெப்ஸ்கள், நம் உடலை நல்ல கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும். இதற்கு டிஷர்ட், ஷார்ட்ஸ் அல்லது லெகின்ஸ் டான்ஸ் விட்னஸ் ஷூஸ் முக்கியம்.டேப் டான்ஸ்:

டேப் டான்ஸ்:

முழுவதும் கால்கள் அசைந்து கொண்டேயிருக்க வேண்டும். எப்படி ஆடினாலும் முழு உடலின் எடையை கால் தாங்கிடும். ஒரு காலை ஊன்றி குதிப்பது, இன்னொரு காலை மேலே தூக்கியவாரே ஒற்றைக்காலுடன் ஆடுவது, என்று இருக்கும். இந்த வகை நடனத்திற்கும் டிஷர்ட்-லெகின்ஸ்,ஷார்ட்ஸ்,ஷூ அவசியம்.உடம்பில் தசைகள் தொங்காமல் இருக்க செதுக்குவது போல இந்த வகை நடனத்தை ஆடினால் ஒரு மணி நேரத்திற்கு 250 கலோரி வரை குறைக்கலாம்.சல்ஸா டான்ஸ் :

சல்ஸா டான்ஸ் :

இந்த வகை நடனத்தில் நீங்கள் ஆடுவது பொறுத்து 600 கலோரி வரை குறைக்க முடியும். அடிப்படையான சில ஸ்டெப்ஸ்களை கால்களுக்கு இருந்தாலும் பெரும்பாலானவை உங்கள் மொத்த உடலுக்கும் சேர்த்தே இருக்கும்.
தசைகளுக்கு மட்டுமல்லாமல் எலும்புக்கும் சேர்த்தே இது வலுசேர்க்கும். எந்த வகையினரும் இதனை ஆடலாம். ஆர்த்தடைட்டீஸ் வருவதை தடுத்திடும்.லைன் டான்ஸ் :

லைன் டான்ஸ் :

வயதானவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். அதிரும்படியாகவோ, வேக வேகமான ஸ்டெப்ஸ்களோ இருக்காது மைல்ட்டான, லேசாக அசைவுகள் கொண்ட ஸ்டெப்ஸ்களே அதிகமிருக்கும். இதற்கும் டான்ஸ் பாட்னர் எல்லாம் தேவியில்லை வரிசையாக நின்று ஆடுவர்.நியா டான்ஸ் :

நியா டான்ஸ் :

ஓர் நடனம், ஓர் தற்காப்பு கலை,யோகா எல்லாம் கலந்த கலவை தான் இந்த நியா. ஏரோபிக் நடனப்பயிற்றுனர் இருவர் சேர்ந்த இந்த நடன அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். பெரிய அறையில் நடனம் ஆடும் இவர்கள் அறை முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது விதி. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வெளியில் நினைத்தால் மட்டும் போதாது மனதளவில் அதற்கு நாம் தயாராக வேண்டும். அதே போல இது வெறும் டயட் மற்றும்
எக்சர்ஸைஸ்களால் மட்டும் நடைபெறுவதல்ல உடலும் மனமும் சேர்ந்தே இதில் முக்கிய பங்காற்றுகிறது என்று சொல்கிறார்கள் இந்த நடன வடிவமைப்பாளர்கள்

உடல் எடை குறைக்க பின்பற்ற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - டாப் 10 டிப்ஸ்!

உடலுழைப்பு இல்லாத இன்றைய நவீன வாழ்க்கை முறையால் உடல் பருமன் என்பது மிகச்சாதரணமாக கடந்து போகிற விஷயமாக மாறிவிட்டது.
தொப்பையை குறைக்க டயட் என்று சொல்லி இன்னும் இன்னும் அதிகமாக உட்கொள்கிறார்களே தவிர தொப்பை மட்டும் குறைந்த பாடில்லை.Tips to reduce your belly டயட்டை தாண்டி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.குறைந்த உணவுகள் :

குறைந்த உணவுகள் :

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையென குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று வேளை மொத்தமாக உண்பதை தவிர்த்திடுங்கள். இப்படி மொத்தமாக சாப்பிடுவதால் தான் தொப்பை வருகிறது.நார்ச்சத்து உணவுகளை தவிர்த்திடுங்கள் :

நார்ச்சத்து உணவுகளை தவிர்த்திடுங்கள் :

தொப்பையிருந்தால் அதில் கேஸ் சேர்ந்திருக்கும். வாயுத்தொல்லை, வயிறு உப்பலாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதை தவிர்க்க அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள். ப்ரோக்கோலி, காலி ப்ளவர், பீன்ஸ் போன்றவைகளை சாப்பிட வேண்டாம்.பழங்கள் மற்றும் காய்கறிகள் :

பழங்கள் மற்றும் காய்கறிகள் :

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.அதுவும் ஒரே நேரத்தில் உண்ணாமல் குறைந்த அளவுகளில் சிறிது நேரத்திற்கு ஒரு முறை என்று உண்ணுங்கள்.தவிர்க்க :

தவிர்க்க :

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்திடுங்கள். பாலில் இருக்கும் லாக்டோஸ் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் இதை தவிர்ப்பது நன்று. இது ஜீரணமாகாமல் தொடர்ந்து சேர்ந்து வயிற்றில் கேஸ் நிரம்பி வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.மன அழுத்தம் :

மன அழுத்தம் :

இன்றைய தேதிக்கு மிக முக்கிய பிரச்சனை இது. மனச்சோர்வு ஏற்படுவது கூட எடை கூட காரணமாக அமைந்திடும். சோர்வாக இருக்கும் போது, உடம்பிலிருந்து கார்டிசோல் வெளியாகும். இதனால் இன்சுலின் லெவல் அதிகரிக்கும். அதோடு எக்கச்சகமாக பசியும் அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக உணவுகளை எடுத்துக் கொள்வோம். உடல் உழைப்பு இல்லாத வேலை என்றால் அது கொழுப்பாகவே நம் உடலில் சேரும்.உப்பு:

உப்பு:

சோடியம் நம் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சக்கூடியது.நாளொன்றுக்கு நம் உடலுக்கு தேவையான சோடியம் அளவை விட அதிகமான சோடியம் தினமும் நாம் எடுத்துக் கொள்கிறோம் இது அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்தி தொடர்ந்து தண்ணீரை குடிக்கச் செய்திடும். அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கையில் அது தொப்பையில் சேர்ந்து தொப்பையையே அதிகப்படுத்தும். டேபிளில் உப்பு வைப்பதை தவிருங்கள். உணவில் உப்பு குறைந்திருந்தால் அதை அப்படியே சாப்பிட பழகுங்கள். பாக்கெட் உணவுகள் வாங்குகையில் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களில் உப்பின் அளவு பார்த்து வாங்குங்கள். சோடா :

சோடா :

வாயிலிருந்து காற்று அதாவது கேஸ் உள்ளே சென்று விட்டாலே அவை வயிற்றில் சென்று அடைத்துவிடும். வேகமாக சாப்பிடுவது, இனிப்பு மிட்டாய்களை மென்று கொண்டேயிருப்பது போன்றவை வயிற்றுக்குள்ளே காற்றை புகச் செய்திடும். இதனை தவிர்க்க சாப்பிடும் போது வாயை மூடி மெதுவாக உண்ணலாம். காற்று அடைக்கப்பட்ட பாக்கெட் டிரிங்க்ஸ் தவிர்த்திடுங்கள்.ஃப்ரூட் ஜூஸ் :

ஃப்ரூட் ஜூஸ் :

பழச்சாறுகளில் அதிகப்படியான நியூட்டிரிசியன்கள் இருக்கிறது தான் ஆனால் அதில் நிறைய சர்க்கரை இருப்பதால் நம் உடலில் குளோக்கோஸ் லெவல் அதிகரித்திடும். அதனால் அதனை தவிர்த்துவிடுங்கள்.ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

எடையை குறைக்க தேவைப்படும் உணவுகளில் முக்கி உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

உடலுக்கு தேவையான உழைப்பை கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும் தொப்பை வரக் காரணமாகும். சீரான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் நல்ல பலனை பார்க்கலாம்.ய இடம் பிடிப்பது ப்ரோட்டீன் உணவுகள். இது எடையை குறைக்க மட்டுமல்ல மீண்டும் எடை கூடாமல் இருக்கவும் பயன்படும். ப்ரோட்டீன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

டிவி பார்த்தால் பார்வைக் குறைபாடு உண்டாகும் என்பது உண்மையா?

நாம் வளரும் பருவத்தில் கண் தொடர்பான பல அட்வைஸ்களை கண்டிப்பாக கேட்டிருப்போம். அதுவும் குறிப்பாக நீண்ட நேரம் டிவி பார்த்தால் கண் கெட்டுவிடும், காரட் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் என்று நாம் பார்க்கும் விஷயங்களில் ஆரம்பித்து எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என வரையறை செய்துவிடுவார்கள். இதை தவிர்க்க கண் தொடர்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்களும் அதன் உண்மைகளும் பற்றிய தொகுப்பு.டிவி :

டிவி :

டிவிக்கு மிக அருகில் உட்கார்ந்து பார்த்தால் கண் கெட்டுவிடும் :
இது எல்லாருக்கும் பொருந்தாது.ஏற்கனவே கிட்டப்பார்வையால் கண்ணாடி அணிந்தவர்கள் தொடர்ந்து டிவி அருகில் உட்கார்ந்து ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் போது அவர்களுக்கு கிட்டப்பார்வை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதே போல் அதிக நேரம் கண்களை சிமிட்டாமல் ஒரே பொருளை கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பதால் கண்களை சிமிட்ட மறந்துவிடுகிறோம் இதனால் விரைவிலியே கண்கள் மிகவும் களைப்பாகும் அதோடு சிலருக்கு கண்கள் வறட்சி ஆவதற்கும் வழியுண்டு.கேரட் :

கேரட் :

காரட் சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது .
கண்களுக்கு தேவையான பீட்டா கரோட்டீன், விட்டமின் ஏ ஆகியவை காரட்டில் அதிகம் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக காரட் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போதாது. உங்களது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டு வந்தாக வேண்டும்.இருட்டறை :

இருட்டறை :

இருட்டு அறையில் படிப்பது கண்களை பாதிக்கும். பலரும் இந்த வார்த்தைகளை கேட்டிருப்போம். மிகவும் உன்னிப்பாக படிப்பதால் கண்கள் விரைவில் ட்யர்டு ஆகிடுமே தவிர மற்றபடி பெரிய பிரச்சனைகள் வராது. அதுவும் இது நிரந்தரப் பிரச்சனையல்ல. கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் கவனம் முழுவதும் அதில் இருக்குமே தவிர என்ன படிக்கிறோம் என்பதில் இருக்காது என்பதாலேயே நல்ல வெளிச்சமான காற்றோட்டமான இடத்தில் படித்தால் நல்லது.கண்ணாடி :

கண்ணாடி :

இன்னொருவரின் கண்ணாடி அணிந்தால் நம் கண் பாதிப்படையும். இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. இன்னொருவரின் கண்ணாடி அணிந்தால் நம் பார்க்கும் திறன் வேறுபடும் தொடர்ந்து அணிந்து கொண்டேயிருந்தால் மட்டுமே பாதிப்பு கண்ணாடியை கழட்டிவிட்டோம் என்றால் அதுவும் இல்லை.பார்வை இழப்பு :

பார்வை இழப்பு :

பார்வை இழப்பு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதில் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. யாருக்கும் ஒரே நாளில் பார்வை போவது இல்லை. சில அறிகுறிகள் தெரியும் போதே சுதாரித்து ஆரோக்கியமான உணவு, கண்களுக்கு தேவையான பவர் கண்ணாடி, சன் கிளாஸ்,தொடர்ந்து செக்கப் செல்வது என்று இருந்தால் பார்வை பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.கணினி :

கணினி :

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் பார்த்தால் கண்கள் பாதிப்படையும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் என்றில்லை வேறெந்த பொருளை பார்த்தாலும் கண்களுக்கு பாதிப்பு தான். அடிக்கடி சிறிய இடைவெளி எடுத்து நாம் பார்க்கும் பொருளை தவிர்த்து வேறு எதாவது பொருளை பார்க்க வேண்டும். கண்களுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் கிடைக்கும்.சூரியன் :

சூரியன் :

சூரியனை சன் கிளாஸ் உதவியுடன் நேரடியாக பார்க்கலாம். இது தவறான கருத்து. சூரியனிடமிருந்து வெளியாகும் அல்ட்ரா கதிர்கள் நம் கண்களின் கார்னியா, லென்ஸ், ரெட்டீனா ஆகியவற்றை பாதிக்கும். என்ன தான் சிறந்த சன் கிளாஸ் அணிந்து சூரியனை பார்த்தாலும் அவை 100 சதவீதம் சூரியனில் இருந்து வெளியாக அல்ட்ரா கதிர்களை தடுப்பதில்லை.செக்கப் :

செக்கப் :

அடிக்கடி கண்களை செக் செய்ய வேண்டும் என்றில்லை. தவறு. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கண்களை செய்து கொள்ள வேண்டும். கண்களை தாக்கும் நோய்களை முன்னரே அறிந்து அதனை தவிர்க்க இது அளிதாக அமையும். நோய் வந்த பிறகு செல்வதை விட நோய் வராமல் தவிர்ப்பதே சிறந்தது.கண்ணாடி :

கண்ணாடி :

கண்ணாடி அணிய வேண்டியவர் தொடர்ந்து கண்ணாடி அணியவில்லையெனில் பவர் கூடிடும். கண்ணாடியோ லென்ஸோ அணிவது பார்க்கும் திறனில் ஏதேனும் குறைகள் இருந்தால் மட்டுமே சிரமப்படாமல் நீங்கள் பார்க்கலாம். இதனை தவிர்த்தால் சிரமங்களை தவிர்க்கலாம். தொடர்ந்து அணிந்திருந்தால் பவர் குறையும் என்பதோ, அணியாமல் தவிர்த்தால் பவர் கூடும் என்பதோ தவறான கருத்து.சர்க்கரை நோயாளிகள் :

சர்க்கரை நோயாளிகள் :

உடலில் சர்க்கரையளவு சரியாக இருந்தால் அவர்களுக்கு பார்வை பறிபோகாது.
உடலில் உள்ள ரத்தச் சர்க்கரையளவை தாண்டி, சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை பறிபோவதற்கான வாய்ப்புகள் உண்டு,தொடர்ந்து செக்கப் செய்வது, மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.பயிற்சி :

பயிற்சி :

கண்களில் செய்யப்படும் பயிற்சி தொடர்ந்து செய்தால் பார்வை குறைபாட்டில் இருந்து தப்பிக்கலாம்.
கண்களுக்கு உள்ளே வரும் பாதிப்புகளை எல்லாம் பயிற்சி கொண்டு தவிர்க்க முடியாது. பயிற்சி செய்வது என்பது கண்கள் டயர்டு ஆகிடாமல் தவிர்க்கவே தவிர பார்வைக் குறைபாடு வராமல் தடுக்க அல்ல. சில நேரங்களில் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தாமதப்படுத்தவும் செய்யும்.கண்களை அழுத்த தேய்ப்பது :

கண்களை அழுத்த தேய்ப்பது :

எப்போதும் கண்களை அழுத்த தேய்க்ககூடாது. சரி, ஏனென்றால் கண்களைமூடி வெளிப்புறத்தில் தேய்க்கலாம் ஆனால் அழுத்த தேய்த்துவிடக்கூடாது இது கண்களில் உள்ள ரத்த நாளங்களை பாதிக்கச் செய்யும் அத்துடன் கண்களில் ஈரப்பதமான திசுக்கள் அதிகமிருக்கின்றன அதற்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...