நமது ஆரோக்கியத்தில் பெரும்பகுதி நமது மனம் சார்ந்து தான் இருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது போல மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதில்லை.நீங்கள் ஒரு ஆரோக்கியமற்ற உறவில், அதாவது மகிழ்ச்சியை தராத உறவில் மன வருத்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களது உடல் நலனில் கட்டாயம் பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்களது உடல் எடையும் அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிப்பு:
ஒரு ஆய்வில் திருமணத்திற்கு பிறகு ஈடுபாடில்லாத ஒரு உறவு, மன கசப்புகள் மற்றும் உறவில் திருப்தி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் தூக்கமின்மையும் உண்டாகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
மன அழுத்தம்
பல தரப்பட்ட ஆய்வுகளில் தினசரி உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகள் மனதளவில் மிகவும் உற்சாகமாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு உடலுறவில் நாட்டம் அதிகமாக இருந்து, மற்றொருவருக்கு ஈடுபாடு குறைவாக இருந்தால், போதுமான அளவு உடலுறவு இல்லாமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
கவலை
உறவுகளிடையே உள்ள பிரச்சனை யாரையும் கவலையின் உச்சத்தில் தள்ளி விடுகிறது. இதனால் எந்த ஒரு வேலையிலும் ஈடுப்பாடு இல்லாமல் போகிறது. இது மன நோய்களுக்கு வழிவகுக்கிறது.
மன சோர்வு
வாழ்க்கையில் சரியான உறவு கிடைக்கவில்லை என்றால் அதிக கவலை மற்றும் மனசோர்வு ஏற்படுகிறது. இந்த மன சோர்வு ஆண்களை காட்டிலும் பெண்களை ஆறு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.
ஆல்கஹால்
ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட குடும்ப பிரச்சனைகளுக்கு மதுவை கையில் எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மது பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்பதை உணர வேண்டியது அவசியம். மதுவினால் அதிக அளவு மன சோர்வு தான் ஏற்படுகிறது. பல ஆரோக்கிய சீர் கேடுகளும் உண்டாகின்றன.
இரத்த அழுத்தம்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத தம்பதிகளுக்கு, பிரச்சனைகளின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
No comments:
Post a Comment