குழந்தைகள் பெரியவர்கள் என யாருக்கும் அலர்ஜி உண்டாகலாம். கழற்சிக்காயில் பட்டுசியா என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கசப்பை தரக்கூடியது. இதனை அனைத்து விதமான அலர்ஜிகளுக்கும் பயன்படுத்தலாம். இது மிக சிறந்த பலனை தரக்கூடியது. இந்த பகுதியில் கழற்சிகாய் எந்த நோய்களுக்கு பயன்படுகிறது என்பதையும், அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் காணலாம்.
பயன்படுத்தும் முறை:
இந்த கழற்ச்சிக்காயில் கடுமையான ஓடு உள்ளது. இந்த ஓட்டை எடுத்துவிட்டு அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்தாக பயன்படுத்த வேண்டும். இந்த ஓடு மிகவும் வலிமையானது, கையில் குத்திவிடக்கூடும். என பொருமையாக இதன் ஓட்டை நீக்க வேண்டியது அவசியம்.
யானைக்கால் நோய்
யானைக்கால் நோயின் போது கடுமையான குளிர் ஜீரம் வரும். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் குளிர் ஜீரம் வரும். மலேரியா வந்ததை போல கடுமையான ஜீரம் வரம். இதற்கு இரத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். இது யானைக்கால் நோயின் அறிகுறியாகும்.
இந்த யானைக்கால் நோய்க்கு கழற்சிக்காய் மிக சிறந்த மருந்தாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதவிலக்கு பிரச்சனை
பெண்களுக்கு மாதவிலக்கு இடைக்காலத்தில் நின்று போதலுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. மாதவிலக்கு மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு நின்று போதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதனை மருந்தாக பயன்படுத்தலாம்.
மருந்து செய்முறை
மாதவிலக்கு பிரச்சனைக்கும் ஒரு கழற்சிக்காய் பருப்புக்கு 5 மிளகுகளை வைத்து அரைத்து பொடி செய்து சாப்பிடலாம். அல்லது மொத்தமாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 100 கிராம் கழற்சி பருப்புக்கு, 25 கிராம் மிளகு சேர்த்து அரைக்கவும்.
மிளகை அரைக்கும் முன்னர் அதன் பச்சை வாசம் போகும் வரை வாணலியில் இட்டு நன்றாக வறுக்க வேண்டும். அதே போல கழற்சி பருப்பையும் வறுத்துக்கொண்டால், அதில் இருக்கும் ஈரத்தன்மை போய் மருந்து நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
விதைப்பை பிரச்சனை
விதைப்பை பிரச்சனை, அதாவது விதைப்பையில் நீர் இறங்கி, அதிகமாக காய்ச்சல் வரும் சூழ்நிலையில் இந்த கழற்சிக்காய் மருந்தாக பயன்படுகிறது. இந்த நோய் ஹைட்ரோசிலி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கழற்சிக்காய் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று.
No comments:
Post a Comment