ஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது.
இதன் முக்கியமான அறிகுறிகள்:
ஒருபக்க தலைவலியுடன்
வாந்தி
குமட்டல்
ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல்ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.
பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது "Z" வடிவங்கள் கண் முன் தோன்றலாம்.
கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம்.
நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம்.
உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும்.
1.மரபார்ந்த ஒற்றை தலை வலி
2.பொதுவான ஒற்றை தலை வலி
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தலைவலி மரபார்ந்த ஒற்றைத்தலைவலி எனவும். அப்படியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வருவது பொதுவான ஒற்றை தலைவலி எனவும் கூறப்படுகிறது.
பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒளி மற்றும் ஒலி உணர்வது பிடிப்பதில்லை ஆகையால் அமைதியான இருளான இடத்தில் இருப்பதையே விரும்புவர்.
ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது.
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் அல்லது 5 ஐடிராக்சி டிரிப்டமைன் எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.
காரணங்கள் :
இந்நோய் உருவாக பின்வரும் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்:
மன அழுத்தம், அயர்ச்சி,நீண்ட பயணம், அழுவதற்கு பின்,பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்கு மத்தியில் இருக்கும்போது, வானிலை மாற்றம் ஏற்படும்போது
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது, உணவு நேரத்தை புறக்கணிக்கும்போது, அதிகமான சத்தம் மற்றும் வெளிச்சம்,பெட்ரோல் அல்லது வாசனை பொருட்கள் நுகர்தல், தலை சாயம்வ,போர்வையை முழுவதுபோர்த்திக்கொண்டு உறங்கும்போது,
தலையணையில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கும்போது, இறுக்கமான உடை அணியும்போது, கழுத்தில் இறுக்கமான ஆபரணம் அணியும்போது, பருவ மாற்றத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையும்போது, அதிக வெயிலில் நடக்கும்போது,
தலை குளித்த பிறகு கூந்தலை சரியாக காய வைக்காமல் இருக்கும்போது,முடியை இறுக்கமாக பின்னும்போது, கண்களுக்கு லென்ஸ் அணியும்போது,பெண்களுக்கு மாத விலக்கின்போது, குளிக்கும்போது முகத்தில் தண்ணீர் வேகமாக என காரணங்கள் பல உள்ளன.
தூண்டும் காரணிகள் :
ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும்.
மாதவிலக்கின் போது மன அழுத்தம், வெப்பம்,புகை, சிகரெட், உயர்வான இடத்தின் அழுத்தம், அது மட்டுமின்றி கொட்டாவி விடுதல், எடை எடை தூக்குதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம்.
50 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு ஒற்றை தலை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மெனோபாஸ் ஆனவுடன் ஒற்றை தலை வலி குறைய வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கான ஒற்றை தலை வலி பெரும்பாலும் 2 மணி நேரத்திற்கு நீடிக்கின்றது. ஒற்றை தலைவலி இருக்கும் குடும்பத்தில் அவர்கள் வாரிசுகளுக்கும் அது தொடர வாய்ப்பிருக்கிறது.
நீடிக்கும் காலம்:
பெரும்பாலும் 60% ஒற்றை தலைவலி தலை ஒரு பக்கம் மட்டுமே வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி இருக்கும்.
72 மணி நேரம் நீடிக்கும். வலி இருக்கும் பக்கம் பார்வை தற்காலிகமாக தடைபடும்.ஒரு பகுதி மரத்து போகலாம்.தலைக்குள் வெளிச்சம் பாய்வதைப்போல் உணர்வார்கள். கை, கால், நாக்கு, உதடு ஆகியவை பலமிழக்கும்.
காய்ச்சல், நாளுக்கு நாள் அதிகமாகும் தலை வலி, தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வலி, வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.
சிகிச்சை:
ஒற்றை தலை வலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொண்டால் வலியை கட்டு படுத்தலாம்.
ஒற்றை தலைவலியை உண்டாக்கும் மேற்கூறிய காரணிகளையும் சூழ்நிலைகளையும் இனம் கண்டு அவற்றை தவிர்ப்பதால் இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
பாட்டி வைத்தியம்:
எந்தவொரு நோய்க்கும் நமது முன்னோர்கள் சில இயற்கை மருந்துகளை சொல்லி இருக்கின்றனர். அதை போலவே இந்த ஒற்றை தலை வலிக்கும் சில குறிப்புகள் உண்டு. அவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
1. ஆரஞ்சு பழ தோலை எடுத்து சாறு பிழிந்து தலை வலி இருக்கும் பக்கத்தின் எதிர் காதில் சிறிதளவு ஊற்ற வேண்டும். இது தற்காலிக சிகிச்சை தான்.
2. ஒரு டம்பளர் காரட் சாறுடன் 1/4 டம்பளர் பசலை கீரை சாறு மற்றும் 1/4 டம்பளர் பீட் ரூட் சாறு சேர்த்து குடித்தால் தலை வலி குறையும். இத தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment