மனிதனாக பிறந்த எல்லாரும் நல்ல உடல்நலத்தோடு சந்தோஷமாக வாழத்தான் விரும்புவார்கள். இயற்கையான நல்ல உணவுப் பழக்கம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் சேர்த்து கொடுக்கும்.
ஆனால் பல மனிதர்கள் தங்களது கவலைகளை தற்காலிகமாக மறந்து அமைதி சந்தோஷம் காண மது, புகைப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை நாடிச் செல்கின்றனர்.
ஆனால் இந்த தீய பழக்கங்கள் உங்களுக்கு தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் நிரந்தரமான விரைவான உடல் பாதிப்புகளை கொடுத்து விடும்.
நீங்கள் புகைப்பிடிக்கும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதிலிருந்து வெளியே வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கும் சரியா? அது மட்டுமா அது உங்கள் உடல் நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?
இந்த விஷயங்கள் சரி என்றால் அந்த பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள். புகைப்பிடித்தலால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் வாங்கும் சிகரெட் பாக்கெட்களிலேயே கூறியுள்ளனர்.புகைப்பிடிக்கும் பழக்கம் நிறைய உடல் நோய்களுக்கு காரணமாக உள்ளது. நுரையீரல் புற்று நோய், தொண்டை மற்றும் வாய் புற்று நோய் போன்றவைகளும் ஏற்படுகின்றன.
சிறிய உடல் உபாதைகளான சைனஸ், மூச்சுக் குழல் பாதிப்பு, சோர்வு, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.
மேலும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் பொருள் உளவியல் ரீதியான அடிமை தனத்தை ஏற்படுத்துகிறது.
புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள நுரையீரல் மற்றும் இரத்தத்தில் நிக்கோட்டின் நச்சுக்கள் தங்கி விடுவதால் தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது.
இந்த கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்றவதற்கு ஒரு அருமையான இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காய ஜூஸ் - 1/2 டம்ளர்
மஞ்சள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 டீ ஸ்பூன்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தேவையான அளவு ஜூஸ் எடுத்து அதனுடன் சுடு தண்ணீர் கலக்க வேண்டும். நன்றாக கலக்க வேண்டும்.
இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு பின் குறைந்தது ஒரு மாதம் வரை குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
நன்மைகள் :
இந்த இயற்கை ஜூஸ் புகைப்பிடித்தவர் நுரையீரலில் உள்ள நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக்குகிறது.
தினமும் இந்த ஜூஸை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பண்புகள் :
இந்த ஜூஸில் உள்ள வெங்காயம், மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவைகள் நுரையீரலில் உள்ள நிக்கோட்டின் நச்சுக்களை எளிதாக வெளியேற்றி விடும்.
மேலும் இந்த ஜூஸ் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து புகைப்பிடித்தலால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்படைந்த செல்களையும் புதுப்பிக்கிறது.
புகை பிடிக்கக் கூடாது
இந்த ஜூஸை குடிக்கும் போது கண்டிப்பாக உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். இந்த முறையுடன் சேர்த்து நல்ல உணவுப் பழக்கம், மற்றும் ஆரோக்கியமான உடற் பயிற்சி மேற்கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment