Thursday, 31 August 2017

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் திரவ டயட்!! இதப் பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

உடல் எடை குறைக்க விதவிதமான டயட் ப்ளான்கள் பிரபலமாகி வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களுக்காகவும், குறைந்த நாட்களில் உடல் எடை குறைய பெஸ்ட் சாய்ஸ் திரவ டயட். ஏழு நாட்கள் வரை இருக்க வேண்டிய இந்த டயட்டில் திட உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.யாரெல்லாம் இந்த டயட் எடுத்துக் கொள்ளலாம் :

யாரெல்லாம் இந்த டயட் எடுத்துக் கொள்ளலாம் :

தீவிரமான ஒபீசிட்டி இருப்பவர்கள் இந்த டயட் இருந்தால் நிச்சயமாய் நல்ல பலன் கிடைத்திடும். வயிற்றில் கேஸ் பிரச்சனை இருப்பவர்கள், உடலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்திடலாம். புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரக்ள் இதனை தாராளமாக செய்து பார்க்கலாம்.எவ்வளவு நாட்கள் :

எவ்வளவு நாட்கள் :

பொதுவாக இந்த திரவ டயட் குறைந்த நாட்கள் தான் கடைபிடிக்கப்படும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி உங்களின் உடலுக்கேற்ப ஒரு மாதமோ அல்லது, 10 நாட்கள் 7 நாட்கள் வரை இந்த டயட் இருக்கலாம். சிலர் உடல் உபாதைகள் தீர 3 நாட்கள் மட்டும் கூட இருப்பர்.தீமை :

தீமை :

இந்த திரவ டயட்டில் ஏராளமான நன்மைகள் உண்டென்றாலும், அதேயளவு தீமை இருக்கும் என்பதை மறந்திட வேண்டாம். இந்த டயட் இருப்பதற்கு முன்னதாக இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றிட வேண்டும். குறைந்த நாட்களில் பெரியளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. ஆனால் நீண்ட நாட்கள் இந்த டயட் கடைபிடிப்பவர்களுக்கு சத்துக்குறைபாடுகளால் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.என்னென்ன சாப்பிடலாம்.

என்னென்ன சாப்பிடலாம்.

இந்த திரவ டயட்டில் முழுவதும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறி ஜூஸ் :
காய்களை வேக வைத்து அதனை மிக்ஸியில் அரைத்து குடிக்கலாம். இதில் விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
தண்ணீர் :
உடலுக்கு தேவையான எனர்ஜி கொடுத்திட, எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்க தண்ணீர் மிகவும் அவசியம்.
பழச்சாறு :
சர்க்கரை அதிகம் சேர்க்காமல் பழச்சாறு பிழிந்து அப்படியே குடிக்கலாம்.வகைகள் :

வகைகள் :

இந்த திரவ டயட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன.
1.க்ளியார் திரவ டயட்
2.முழு திரவ டயட்
க்ளியர் டயட்டில் வெறும் திரவ வகைகள் மட்டுமே இடம் பெறும். இதில் சோடாக்கள் இடம்பெறாது. அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ இதனை குடிக்க கூடாது. ரூம் டெம்ப்பரேச்சரில் இருந்தால் நன்று. இந்த வகை டயட் உங்கள் உடலில் எப்போதும் தண்ணீர் சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்.
முழு திரவ டயட்டில் அதிகப்படியான திரவ உணவுகளும் குறைந்த அளவு திட உணவும் சாப்பிடலாம். இதனை ஐந்து நாட்களுக்கு மேல் தொடரக்கூடாது.பயன்கள் :

பயன்கள் :

இது உடல் எடை குறைக்க உதவிடும். இந்த டயட்டில் அதிகப்படியான ப்ரோட்டீன், ஃபைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ் கிடைக்கும் அதே நேரத்தில் மிக குறைந்த அளவிலான கொழுப்பு தான் நம் உடலில் சேர்கிறது.
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவிடும். ஜீரணத்திற்கு அதிகப்படியான வேலை கொடுக்காமல், அவை ஆற்றல்களாக மாற்றிடும்.டயட் ஆரம்பிப்பதற்கு முன்னால் :

டயட் ஆரம்பிப்பதற்கு முன்னால் :

லிக்விட் டயட் ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். திரவ உணவுகள் எடுக்கும் போது அதில் குறைந்தது 200 கலோரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஜூஸ்களில் அதிகமாக சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். குறைந்த சர்க்கரை அதே நேரத்தில் உடலுக்கு தேவையான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் கிடைக்க வேண்டுமானால் இளநீர் குடிக்கலாம். சூப் மற்றும் ஜூஸ்களில் செயற்கை சுவையூட்டிகளை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...