பருவநிலை மாறும் போது பொதுவாக அனைவரும் ஏதேனும் ஒரு சில ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆளாவார்கள்ம் இதில் அதிகப்படியானோரை தாக்குவதும், சளி போன்றவற்றின் அறிகுறியாய் இருப்பதும் தொண்டை வலி தான்.
இந்த தொண்டை வலி நம்மை முக்கியமான சூழ்நிலைகளில் கூட பேசவிடாமல் தடுத்துவிடும். இந்த தொண்டை வலிக்கு பாட்டி வைத்தியத்தில் என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
நாமக்கட்டி
தொண்டை வலி மற்றும் தொண்டை கவ்வல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பது நாமக்கட்டி. இந்த நாமக்கட்டியை சூடான நீரில் குழைத்து தொண்டையில் மேல் இருந்து கீழாக பற்று போட்டால் தொண்டை வலி குணமாகும்.
தூதுவாளை
தூதுவாளை கீரை வீடுகளிலேயே எளிமையாக வளரக்கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதனை நன்றாக நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் தொண்டை வலி குணமாகும்.
கஞ்சி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, அதில் பணங்கற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி விரைவில் குணமாகும்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் சிறிதளவு பனங்கற்கண்டை போட்டு சாப்பிட்டாலும் தொண்டை வலி குணமாகும்.
சீமை ஓடு
தொண்டை வலி வந்தால் உடனே தலைவலியும் வந்துவிடும், இந்த தலைவலிக்கு சீமை ஓட்டினை வெந்நீரில் நன்றாக அரைத்து தலையில் பத்துப்போட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி வந்தால், சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்து தலைக்கு பத்துப்போட்டால் ஒற்றை தலைவலி காணாமல் போய்விடும்.
பூவரசம் இலை
தலைவலி நீங்க பூவரச மரத்தின் பழுத்த இலைகளின் காம்புகளை எடுத்து தலையின் இரு ஒரங்களிலும் வைத்துக் கொண்டால் ஒற்றை தலைவலி நீங்கும்.
No comments:
Post a Comment