அல்சர், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு மண்டலம், பொடுகு, சளி, இருமல், தேமல் என பல உடல்நல கோளாறுகளுக்கு வீட்டில் இருந்தபடியே பெரிதாக எந்த செலவும் இல்லாமல், நல்ல தீர்வு காண நிறைய பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன.இவற்றால் பெரிய பக்க விளைவுகள் ஏற்படாது. ஆயினும், சிலவன அளவுக்கு மீறி உட்கொண்டால் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
அதே போல, வேறு உடல்நலக் குறைபாடுகள், நோய்களுக்கு மருந்துகள் எடுத்து வருபவர்கள், இந்த முறைகளை பின்பற்றும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்....
அல்சர்!
சோற்று கற்றாழை பிளந்தும் நடுபகுதியின் கசப்பான சாற்றை எடுத்தும் மோரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.
நோய் எதிர்ப்பு மண்டலம்!
நோய் எதிர்ப்பு மண்டலும் வலுவாக, முகம் பொலிவுடன் இருக்க தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.
நீரிழிவு!
சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை சுடு தண்ணியில் கலந்து குடித்து வர வேண்டும்.
பொடுகு!
பொடுகு தொல்லையில் இருந்து விடுபெற செம்பருத்தி காய வைத்து பொடி செய்து சீயக்காய்யுடன் சேர்த்து தேய்த்து குளித்து வர வேண்டும்.
இருமல், சளி!
மூச்சு திணறல் உடனான சளி, இருமலில் இருந்து விடுபட குப்பை மேனி சாற்றை எடுத்து குடித்து வர வேண்டும். அதிகமாக குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும்.
தூக்கமின்மை!
தூக்கமின்மையில் இருந்து விடுபட கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்லலாம். இது நல்ல பலனளிக்கும்.
உடல் சூடு!
உடல் சூட்டை தணிக்க, அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் பொடி வாரம் ஒருமுறை உட்கொண்டு வர வேண்டும். இது இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.
வீரியம்!
எந்த நோய், உடல்நல கோளாறுக்கு மருந்து உட்கொள்பவராக இருந்தாலும். மது, புகை, போதை எடுத்துக் கொள்ள கூடாது. இது மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
தேமல்!
தேமல் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை எடுத்து வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
இரத்த கொதிப்பு!
மூன்று நாட்களுக்கு ஒருமுறை அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
No comments:
Post a Comment