சுவாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும்.
நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல், சளி உண்டாகும் போது உடலில் கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.
இதற்கு சிரப் குடிப்பதற்கு பதிலாக, இதற்கு மாற்றாக ஒரு சிறந்த இயற்க்கை வைத்தியம் இருக்கிறது. அது தான் வெங்காயம், பூண்டு ஜூஸ்.
நுகர்வு!
நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் நுகர்வு திறன் உள்ள சிறந்த உணவு பொருள் வெங்காயம் மற்றும் பூண்டு. இது உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த சத்துக்களும் கொண்டுள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடெண்ட் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
மேலும், வெங்காயத்தில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக். இவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து வலுவாக சண்டையிடும். இதனால் தான் உணவில் வெங்காயத்தை ஒதுக்க வேண்டாம் என கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment