Thursday, 31 August 2017

சோம்பேறியா இருக்கிறதுல கூட நன்மைகள் இருக்கு!! எப்படி தெரியுமா?


உங்களின் ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சொன்னால் பெரும்பாலானோர் சட்டென சொல்வது சோம்பேறித்தனம். சோம்பேறித்தனத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் இதில் சில நல்ல விஷயங்களும் இருக்கிறது. சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் தான் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்களாம்! புதுப்புது யுக்திகளை எளிதாக கையாள்வதில் திறம்பட செயல்படுவார்கள்.திறமை :

திறமை :

சோம்பேறிகள் கண்டுபிடிப்புகளை பெரிதும் விரும்புவர். அன்றாட வேலைகளைச் செய்யவே சோம்பேறித்தனப்படுகிறார்கள், தன் சோம்பேறித்தனத்தை ஜெயிக்க அதனை சமாளிக்க என்ன செய்யலாம் என்று புதிய யுக்தியை கையாள்வர்.குட்டித்தூக்கம் :

குட்டித்தூக்கம் :

சோம்பேறிகள் நீண்ட நேரம் தூங்குவதை விட குட்டித்தூக்கம் போடுவதை பெரும்பாலும் விரும்புவர். செய்யும் வேலைகளுக்கு இடையியே இப்படியான ஓய்வு கொடுப்பதால் மூளை செயல்படுகின்ற சிறிது நேரத்திலும் ஆக்கப்பூர்வமாகவும் புத்திக்கூர்மையாகவும் இருக்கும்.நிதானத்துடன் கூடிய வெற்றி :

நிதானத்துடன் கூடிய வெற்றி :

எப்போதும் பரபரப்பாக சுழன்று வேலை செய்வதை விரும்பாது. அடிக்கடி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வை கொடுத்துவிடுவதால் ஒவ்வொரு முடிவுகளையும் நிதானத்துடன் எடுக்க முடியும். வேலைகளில் மன அழுத்தம், எதுவும் இருப்பதில்லை.தியானம் :

தியானம் :

சோம்பேறிகள் பெரும்பாலும் உடலுழைப்பில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள். இதுவும் ஒரு வகை தியானம் தான். உடல் வேலை செய்யாது மனம் அலைபாயும் . அலை பாயும் மனதை ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதில் அவர்களின் திறமை அடங்கியிருக்கிறது. கவனம் :

கவனம் :

சோம்பேறிகள் பல வேலைகளை ஒன்றாக செய்யமாட்டார்கள். சோம்பேறிகள் ஒரு வேலையை மட்டுமே செய்யவர் அதிலும் முழு கவனத்துடன் செயல்படுவர். பரபரப்பாக அடுத்து என்ன என்று ஓடுகிறவர்களுக்கு தான் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த யோசனைகள் இருக்கும் இவர்களுக்கு அதைப்பற்றிய கவலையெல்லாம் கிடையாது. செய்கின்ற ஓரு வேலையை உருப்பாடியாக செய்வதில் முனைப்பைக் காட்டுவர்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...