Thursday, 31 August 2017

சர்க்கரை நோயாளிகள் என்ன மாதிரியான பழங்கள் சாப்பிடலாம்!!

பழங்களில் சர்க்கரையளவு அதிகமாக இருக்கும் என்று சொல்லி சர்க்கரை நோயாளிகளை பழம் சாப்பிட விடாமல் தடுத்திருப்போம். சில சமயங்களில் அவர்களே சாப்பிடாமல் இருந்திருப்பார்கள்.Fruits to be taken For Sugar Patientsஇது தவறு, சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட பழங்களை சாப்பிடக்கூடாதே தவிர, பழங்களையே மறந்து விட வேண்டும் என்பதல்ல. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களைப் பற்றி இப்போது காணலாம்.ஆப்பிள் :

ஆப்பிள் :

இதில் கலோரிகள் குறைவாகத்தான் இருக்கும். அத்துடன் ஃபைபரும் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இப்பழம் வெறும் உங்கள் வயிறை மட்டும் நிரப்பாமல் சர்க்கரையின்
அளவு வேறுபடாமலும் இருக்க உதவிடும். ஆப்பிளில் க்யுர்சிட்டின் (quercetin) மற்றும் பைட்டோநியூட்டிரியன்ட்ஸ் உள்ளது. இதைச் சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.பீச் பழம் :

பீச் பழம் :

பீச் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற இந்தப்பழத்தில் குறைவான குளூக்கோஸ் தான் இருக்கிறது. அத்துடன் அதில் மினரல்ஸ்களும் விட்டமின்களும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்து இருக்கும்.இதனை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உண்ணலாம்.பப்பாளி :

பப்பாளி :

இதில் குறைவான சர்க்கரையும் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. இன்ஸுலின் சுரப்பை சீர்ப்படுத்திடும்.நெல்லி :

நெல்லி :

இதில் பாலிஃபீனால் அதிகமாக இருக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையளவை மட்டுமல்ல இன்ஸுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தச் சர்க்கரையளவு குறைக்கவும் செய்யும். சர்க்கரை நோயாளிகள்
இதனை தாராளமாக சாப்பிடலாம்.பெர்ரீ :

பெர்ரீ :

ரத்தச் சர்க்கரையளவை குறைத்திடும் அந்தோசயனின் என்ற சத்து இயற்கையாகவே இந்தப்பழங்களில் இருக்கின்றன. இவை ரத்த சர்க்கரையளவை குறைத்திடும்.செர்ரீ :

செர்ரீ :

இதில் நிரம்பியிருக்கும் ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆந்தோசயனின் ரத்தச் சர்க்கரையளவு சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்.சிட்ரஸ் :

சிட்ரஸ் :

சிட்ரஸ் அமிலம் நிரம்பிய ஆரஞ்ச், எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிரம்பியிருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் சர்க்கரையளவை சீராக்கவும் உதவிடும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...