Thursday, 31 August 2017

முகப்பரு, விஷக்கடி, சருமநோய் என சகல பிரச்சனைகளையும் போக்கும் வியப்பூட்டும் திருநீற்றுப் பச்சிலை!

அகிலம் காக்கும் சிவபெருமானின் திருவருட்பிரசாதமாக, திருக்கோவில்களில் வழங்கப்படும் திருநீற்றில், "குருமூலி" என்று சித்தர்களால் போற்றப்பட்ட புனிதமான திருநீற்றுப் பச்சிலையும் சேர்ந்து, அதன் அற்புத மணம் வீசும் தன்மையினாலும், தலையில் உள்ள நீர்க்கோர்ப்பினால் அடையும் வியாதிகளைப்போக்கும்
மருத்துவத்தன்மைகளாலும் திருநீற்றை, நெற்றியில் இட, பிணிகள் எல்லாம் பறந்து ஓடும்.Medicinal properties of Sweet Basil and treating methods for different ailmentsதுளசி செடியினத்தைக்குறிக்கும் "BASIL" வகையைச் சேர்ந்த "Sweet Basil" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், இந்த குறுஞ்செடி, பல அரிய வகை தாதுக்களையும்
"வைட்டமின்-A" சத்தையும் கொண்டு விளங்குவதால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்திமிக்க கிருமிநாசினியாக, எண்ணற்ற ஆற்றலையும் நன்மைகளையும், தன்னக்கத்தே கொண்டு விளங்குகிறது.
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகள், வேர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை.
திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணமிக்க இலைகளை முகர்ந்து பார்த்தாலே, தலைவலி, மூக்கின் சுவாசக்கோளாறுகள் நீங்கும்.
மேலும், இரவில் தூக்கம் வராதவர்கள், இதன் இலைகளை முகர்ந்துவர, விரைவில் நல்ல சுகமான நித்திரை கிடைக்கும்.
கிராமங்களில் ஜுரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் இலைகளைப்பறித்து, நீரில் கொதிக்கவைத்துக்கொடுக்க, உடல் வியர்த்து, வியர்வையில் உடலின் ஜுரமெல்லாம்
காணாமல் போய்விடும். இன்னும் ஏராளம் திருநீற்றுப் பச்சிலையைப் பற்றி சொல்லவேண்டியது இருந்தாலும், நாம் முதலில், இன்றைய இளம்பெண்கள் மற்றும்
இளைஞர்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கும், அவர்கள் முக அழகைக்கெடுக்கும் முகப்பருவை எப்படி, நீக்குவது என்பது பற்றி, பார்ப்போம்.நன்மைகள் :

நன்மைகள் :

முகப்பரு முகத்தில் வந்துவிட்டாலே தங்கள் அழகெல்லாம் போய்விட்டது. எப்படியேனும் அதை நீக்க வேண்டும் என்று பதறி, அந்த பதட்டத்தில் ஏதேதோ முகப்பூச்சு
கிரீம்கள் எல்லாம் தடவி, பருக்களை அழிக்கப்போராடுவர். சிலர் அந்தப்பருக்களை கைகளால் கிள்ளி எடுத்துவிட முயற்சித்து, அதுவே, நச்சாக மாறி முகத்துக்கு கடும்
வேதனையையும், பருக்கள் பழுத்து கருமை நிறம் கொண்டு முகமும் விகாரமாக மாறிவிடும்.
இவர்களெல்லாம், திருநீற்றுப் பச்சிலையை உபயோகித்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவது மட்டுமல்லாமல் அந்தப்பருக்களால் உண்டான தழும்புகளும் மாறிவிடும்.
திருநீற்றுப் பச்சிலை இலைகளை எடுத்து, சாறு பிழிந்து அந்தச்சாற்றை பருக்களின் மேல் தினமும் அவ்வப்போது இட்டுவரவேண்டும்.கண்கட்டி :

கண்கட்டி :

மேலும், இந்த திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன், அதிமதுரமும் சேர்த்து, பருக்களில் தடவி வர, எத்தனை நாள்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பருக்களானாலும், காய்ந்து, உதிர்ந்துவிடும். உதிர்வதோடு மட்டுமல்லாமல், பருக்களின் தழும்பையும் போக்கி முகத்தை பொலிவாக்கக்கூடியது, திருநீற்றுப் பச்சிலை மூலிகை.
அதுபோல இளைஞர்களுக்கு அதிகம் வருவது கண் கட்டி. உடல் சூட்டினால் வரும் இந்த கண் கட்டி கண்களை முடியாமல் அதோடு சேர்ந்து வரும் கண் வலியினால், அதிகம்
துன்புறுவர். அவர்களெல்லாம், திருநீற்றுப் பச்சிலை இலைகளை சாறெடுத்து, கண் இமைகளின் மேல் பற்று போல தடவி வரவேண்டும். இந்த இலைச்சாற்றினை,
அவ்வவ்போது கண் இமைகளின் மேல் தடவி வர, விரைவில் கண் கட்டிகள் உடையும், அதன் பின்னர், மீண்டும் இலைச்சாற்றை கண்கட்டிகளின் காயத்தில் இட்டுவர,
சீக்கிரம் அவை ஆறிவிடும். மேலும் உடல் சூட்டுக் கட்டிகளையும் நீக்கும்.தலைவலி :

தலைவலி :

உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும் தன்மை மிக்க திருநீற்றுப் பச்சிலை இலைகளை நீரில் கொதிக்கவைத்து, அருந்திவர, மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்த
வேதனை மற்றும் தலைவலி நீங்கும். திருநீற்றுப்பச்சிலை இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, நெஞ்சு வலி, இருமல் தீரும். திருநீற்றுப் பச்சிலை இலையை மென்றுவர, வாய்ப்புண்கள் நீங்கும்.விஷக்கடி :

விஷக்கடி :

பொதுவாக கிராமப்புறங்களில், திருநீற்றுப் பச்சிலை நச்சுக்களை முறிக்கும் மூலிகையாகப் பயன்படுகிறது.
தேள் மற்றும் விஷப்பூச்சிகள் கடியினால், உண்டாகும் கடுமையான வலியைப்போக்க, அவை கடித்த இடத்தில், திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றினை பிழிந்துவிட, வலிகள் நீங்கும்.
சிலருக்கு காதுகளில் வலி தோன்றும், அப்போது திருநீற்றுப்
பச்சிலை இலைச்சாற்றை ஓரிரு சொட்டுகள் காதில் விட, வலிகள் நீங்கும்.
சிலர் ஒவ்வாமையினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அடிக்கடி வாந்தி எடுப்பர், சிலர் இரத்த வாந்தி கூட எடுக்க நேரிடலாம். அப்போதெல்லாம்
பயந்துபோய்விடாமல், இந்த திருநீற்றுப் பச்சிலை இலைச்சாறுகளை வெந்நீரில் சேர்த்து அல்லது நன்கு சுண்டக்காய்ச்சி, அவர்களைப் பருகச் செய்ய, அவையெல்லாம் நீங்கி விடும். சிறுநீரகக் கோளாறுகள் :

சிறுநீரகக் கோளாறுகள் :

தாய்மார்கள் தினமும் திருநீற்றுப் பச்சிலை சாறு அருந்திவர, கடுமையான பிரசவ கால வலிகள் குறையும்.மேலும், திருநீற்றுப் பச்சிலை இலைச்சாறு அஜீரணக்கோளாறுகள்,
மற்றும் சிறுநீரகக்கல் அடைப்பை நீக்கும்.
திருநீற்றுப் பச்சிலை இலைகளைப்போல அதன் வேரும் நல்ல பலனகளைத் தரவல்லது. திருநீற்றுப் பச்சிலை வேரை உரலில்
இடித்து, அதை நீருடன் கலந்து தீநீராக இரு வேளை அருந்தி வந்தால், இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரகத்தை பலமாக்கி, உடலின் நச்சு நீரை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றி, உடல் நலம் காக்கும், மேலும் வயிற்றுப் புண்கள் ஆற்றும். குடல் பூச்சிகளை ஒழிக்கும்.படர்தாமரை :

படர்தாமரை :

"பங்கஸ்" என ஆங்கிலத்தில் கூறப்படும் படர்தாமரை, அதிக வியர்வையினாலும், பூஞ்சைநச்சுத்தொற்றினாலும் வரும் இந்நோயைப்போக்க, கிருமிநாசினியான திருநீற்றுப்பச்சிலை இலைச்சாற்றை, அவ்விடங்களில் தடவிவர, அவை நீங்கிவிடும். மேலும் காயங்கள் மேல் தடவி வர, அவை விரைவில் குணமாகும்.சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

நீரில் ஊறிய திருநீற்றுப் பச்சிலை விதைகள், அளவில் அதிகரித்து நீரில் வழுவழுப்புத்தன்மையுடன் இருக்கும், சர்ர்க்கரை பாதிப்புள்ளவர்கள் இவற்றை தினமும் சிறிதளவு
சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்புகள் குறையும். உடல் உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...