இன்றைக்கு பலரும் விரும்பும் வேலை வொயிட் காலர் ஜாப் என்று சொல்லப்படுகிற அலுவல் வேலை அதுவும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து நிர்வாகிக்கும் வேலையைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள் .வேலை இடங்களில் மட்டுமல்ல, வீட்டில் நெடுந்தூரப் பயணம் என எதோ ஒரு வகையில் பெரும்பாலும் உடலுழைப்பு இல்லாமல் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கவே விரும்புகிறார்கள். ஒரு நாளின் முக்கால்வாசி நேரம் உட்கார்ந்தேயிருந்தால் நம் உடல் என்னவாகும் என்று தெரியுமா?
முதுகு வலி :
உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் முதுகுவலி ஏற்படும். அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள்.
வளர்ச்சிதை மாற்றம் :
உடலின் வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கு தேவையான கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும்.
சிகரெட் ஆபத்து! :
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது என்பது சிகரெட் புகைப்பதைப்போல மிகவும் அபாயகரமனாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிகரெட் புகைப்பதால் இதயத்திலும் மூச்சுக் குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
அதைப்போலவே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாலும் அதே அளவு உடலுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
தேக்க நிலை :
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடும்.
இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்
வலுவிலக்கும் தசைகள் :
வெகு நேரம் உட்கார்ந்திருக்கும்போது, நம்முடைய உடல் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதால், ஒரு இயக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதனால் உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்காது.
அத்துடன் தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். குறிப்பாகக் கழுத்து - முதுகுப் பகுதி தசைகள் இறுகி வலியை உண்டாகுவது, உடலில் கொழுப்புத்தன்மை கூடி உடல் எடை அதிகரிப்பதுடன் உடல்பருமனும் ஏற்படும்.
பெருகும் ஆபத்துக்கள் :
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து 147% சதவீதமும், நீரிழிவு நோய் ஆபத்து 112% சதவீதமும், இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் 90% சதவீதமும், அதிகரிக்கக் கூடும் என்று உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் கூட்டு முடிவு அறிவிக்கிறது.
டயாபட்டீஸ் :
ஒருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால் அவருக்கு நிமிடத்துக்கு ஒரு கலோரி மட்டுமே எரிய ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் அவர்களின் ரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் டயாபடிஸ் ஏற்படும்.
ஒபீசிட்டி :
தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கொழுப்பை கரைக்கும் நொதிகள் மிகவும் குறைந்துவிடும்.இதனால் கெட்ட கொழுப்புகள் அப்படியே எரிபடாமல் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
இளமையில் முதுமை :
உடலுழைப்பு இல்லாததால் செல் வளர்ச்சியின் இயக்கங்கள் குறைந்திடும் இதனால் இளமையிலேயே வயதானவர்கள் போன்ற தோற்றம் உண்டாகும்.
கால்களில் பிரச்சனை :
கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
No comments:
Post a Comment