பெண்கள் உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க வேண்டியது ஒரு எழுதப்படாத விதிமுறையாகும். இதை நீங்கள் பின்பற்றுபவராகவும் இருக்கலாம், பின்பற்றாதவராகவும் இருக்கலாம்.
ஆனால் உடலுறவுக்கு பின்னர் பெண்கள் சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்காக நீங்கள் உடலுறவு முடிந்த கையுடன் வேக வேகமாக ஓடிப்போய் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த பகுதியில் உடலுறவுக்கு பின்னர் ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை காணலாம்.
நோய் தொற்று
உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிப்பதால் உடலுறவு மூலம் பெண்ணுறுப்புக்குள் சென்ற பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். நீங்கள் ஒருவேளை சிறுநீர் கழிக்கவில்லை என்றால் அந்த பாக்டீரியாக்கள் சிறு நீர் பாதையின் வழியாக சென்று சிறுநீரகத்தையோ அல்லது கருவறையையோ பாதிக்கும்.
சிறுநீரை அடக்க வேண்டாம்
உடலுறவுக்கு பின்னர் மட்டுமல்ல எப்போதுமே சிறுநீரை அடக்கிக்கொள்வது என்பது கூடாது. இவ்வாறு நீங்கள் சிறுநீரை அடக்கிக்கொண்டிருந்தால் அது சிறுநீர் பாதையி தேக்கி வைக்கப்பட்டு அந்த இடங்களில் பாக்டீரியாக்களை வளர செய்யும்.
தொற்றுக்கள்
சில பெண்களுக்கு உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்கவில்லை என்றால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இதனை தடுக்க கட்டாயமாக சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம்.
பிரச்சனை இல்லையா?
சில பெண்களுக்கு உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அவர்களுக்கு எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும். இப்படி உள்ளவர்கள் முதலில் இருந்தவாறே இருந்து கொள்ளலாம். சிரமப்பட்டு சிறுநீரை வர வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சிறிய சிறுநீர் பாதை
பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் சிறிய சிறுநீர் பாதை உள்ளது. எனவே பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப்பையை தாக்கிவிடும் ஆபத்துகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
கண்டிப்பாக இதை செய்யுங்கள்
சிறுநீர் பாதையில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் அருகில் இருக்கும் பிற உறுப்புகளையும் தாக்கும் அபாயம் உள்ளதால் நீங்கள் கண்டிப்பாக உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment