Thursday, 31 August 2017

பல வியாதிகளை தடுக்கும் இந்த மசாலாக்களை என்றாவது உங்கள் உணவில் சேர்த்ததுண்டா?

ஆரோக்கியமான சுவையான உணவை சாப்பிட வேண்டும் என்று தான் நாம் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்போம். நாம் சாப்பிடும் உணவில், அறுசுவைகளும் இருக்க வேண்டியது அவசியம். நாம் இளம் வயதில் ஏதேனும் ஒரு சில சுவைகளை வெறுத்து ஒதுக்கிவிடுவதால் தான் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.Worlds Healthiest spices அதற்காக அனைத்து சுவை உணவுகளையும் ஒரே சமமான அளவு எடுத்த்துக் கொள்வது தவறு. ஆனால் சுவைகளை பொறுத்து இந்த உணவை இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என திட்டமிட்டு கொள்ளலாம்.
இந்த பகுதியில் நீங்கள் உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது மசாலா பொருட்களை பற்றி காணலாம்.1. பட்டை

1. பட்டை

பட்டை உணவுக்கு அற்புதமான சுவையை அள்ளித்தரக்கூடிய ஒரு பொருளாகும். நமது ஊர் கறிக்குழம்புகளில் பட்டை ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் பட்டையை அனைத்து பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது.
ஆரோக்கியத்திற்காக ஓட்ஸ், பீநட் பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் இரத்த சக்கரை அளவு, கொழுப்பு அளவு குறைகிறது.2. மிளகாய்

2. மிளகாய்

உங்களுக்கு காரசாரமாக சாப்பிடுவது பிடிக்கும் என்றால் மிளகாய் ஒரு சிறந்த பொருளாக இருக்கும். மிளகாய் விதைகளில் உள்ள கேப்சைசின் தான் காரத்தை தருகிறது. இது ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.
இது உடல் வலிகள், இருதய ஆரோக்கியம், மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.3. மஞ்சள்

3. மஞ்சள்

மஞ்சள் நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு அற்புத பொருளாகும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது தொற்றுகளில் இருந்து காக்க உதவுகிறது. மேலும், ஆர்த்தரிட்டிஸ் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
4. ஆர்கனோ

4. ஆர்கனோ

ஆர்கனோ இலைகள் உணவில் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருக்கிறது. இது தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...