நீங்கள் சரியான உடல் எடையை தொடர்ந்து வந்தால் உங்களுக்கு எந்த வித தீர்வும் தேவைப்படாது. அதுவே உடல் எடை அதிகமானால் நீங்கள் ஒவ்வொரு முறை டயட் மேற்கொள்ளும் போதும் எடையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.
எடையை குறைக்கணும் என்று நினைத்து நிறைய பேர் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே அடைகின்றனர். எடையை குறைப்பது என்பது ஒரு எளிதான விஷயம் அல்ல. ஏன் நீங்கள் செலிபிரிட்டியாக இருந்தாலும் இதற்காக அதிகமான வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கிறது.
தினமும் இதற்கான ஒரு திட்டத்தை வரையறுத்து கொண்டு அதன் படி செயல்பட வேண்டும்.நமது உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க அதிக எடை போடுவதை முதலில் தடுக்க வேண்டும்.பல நேரங்களில் வெவ்வேறு விதமான டயட் செய்தும் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். எனவே தான் உங்கள் எடையை சரியான அளவில் பாதுகாக்கவும் கச்சிதமான உடலை பெறவும் ஒரு இயற்கை முறை தேவைப்படுகிறது. இது உங்கள் உடல் எடையை விரைவில் குறைத்து விடும்.
அதிகப்படியான உடல் எடையால் உங்கள் தன்னம்பிக்கை இழந்து மற்றவர்கள் முன்னிலையில் கேளி கிண்டலுக்கு ஆளாக நேரிடும். இது மட்டுமா உடல் பருமனாதல், கோரோனரி டிஸ்ஆர்டர், மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்றவையும் தொற்றிக் கொள்ளகின்றன.நீங்கள் உடல் எடையை குறைக்க வெவ்வேறு முறைகளை பயன்படுத்தியும் பலன் இல்லையா. உங்களுக்காக ஒரு எளிய முறை இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.
இந்த எளிய முறை ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
காரட் ஜூஸ் - 1/2 டம்ளர்
ஆப்பிள் கூழ் - 1/2 டம்ளர்
இஞ்சி ஜூஸ் - 1 டீ ஸ்பூன்செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் மிக்சி சாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
இந்த முறையை தினமும் பயன்படுத்தினால் கண்டிப்பாக வீட்டிலேயே உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை, உடற்பயிற்சி, எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.இதனுடன் உங்கள் மருத்துவரின் எடை குறைப்பது பற்றிய கருத்துகளையும் கேட்டுக் கொண்டால் மிகவும் நல்லது.
காரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி இந்த மூன்று பொருட்களும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்கின்றன.
இதி்ல் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடையை விரைவாக குறைக்க பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.
No comments:
Post a Comment