அதிகமான வேலைப்பளு காரணமாக சிலர் சாப்பிடுவதை கூட தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியே சாப்பிட்டாலும் சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை. நீங்கள் வேலையின் காரணமாக சத்தான உணவுகளை சாப்பிடவில்லை என்றால், எப்படி வேலையில் கவனம் செலுத்த முடியும்?
பசி உணர்வில் யாராலும் சிறப்பாக பணியாற்ற முடியாது. எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது. கோபம் கோபமாக தான் வரும். அதுமட்டுமின்றி காலை உணவை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு குறையும்.எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்க நீங்கள் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் இந்த பகுதியில் வேலையில் கவனமாக செயல்பட சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பசி உணர்வில் யாராலும் சிறப்பாக பணியாற்ற முடியாது. எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது. கோபம் கோபமாக தான் வரும். அதுமட்டுமின்றி காலை உணவை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு குறையும்.எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்க நீங்கள் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் இந்த பகுதியில் வேலையில் கவனமாக செயல்பட சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை தான். ஆப்பிள் உங்களுக்கு மறந்த போன விஷயங்களை நினைவுப்படுத்த உதவுகிறது. புதிதாக சிந்திக்கும் திறனை வழங்குகிறது.
2. அவோகேடோ
அவோகேடோ உடலுக்கும் மூளைக்கும் தேவைப்படுகின்ற ஒரு மிகச்சிறந்த உணவு. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடல் மற்றும் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதை சாப்பிடுவதால் மூளை களைப்படையாமல் வேலை செய்யும்.
3. தேங்காய் எண்ணெய்
கேரளா போன்ற இடங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெயைதான் அதிகமாக பயன்படுத்துவார்கள். நமது பகுதிகளில் அவ்வாறு கிடையாது. ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெய், மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. நீங்கள் பாப்கார்னை தேங்காய் எண்ணெய்யில் பொரித்து அதில், சிறிதளவு நட்ஸ்களை சேர்த்து சாப்பிடுவது மூளைக்கு நீங்கள் தரும் சிறந்த உணவாகும்.
4. பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளான முள்ளங்கியில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அடங்கியுள்ளன. இது உங்களது மூளையை வேகமாக இயங்க வைத்து நீங்கள் சரளமாக பேசவும், நியாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
5. சால்மன்
சால்மன் மீனில் நல்ல கொழுப்பு, ஒமேகா 3 ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளன. இவை மூளையில் உள்ள தகவல்களை சீக்கிரமாக வெளிக்கொண்டு வர உதவுகிறது. மீட்டிங் போன்றவற்றில் நீங்கள் சீக்கிரமாக பாய்ண்ட் பாய்ண்டாக பேச இது உதவும். மூளையில் உள்ள தகவல்களை எளிதாக நீங்கள் பேச்சின் மூலமாக கொண்டு வர இது உதவுகிறது.
6. சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளை சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம். இது மூளைக்கு மிகவும் சிறந்தது. ஒரு கைப்பிடி சூரியகாந்தி விதைகளில் 15 மில்லி கிராம் அளவுக்கு விட்டமின் ஈ உள்ளது. விட்டமின் ஈ உங்களது மூளையில் உள்ள விஷயங்களை சீக்கிரமாக நினைவுகூர்வதற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment