உங்களது இடுப்பளவை கண்டு கவலையா? நீண்ட காலமாக எடை அதிகரித்து இருப்பது மற்றும் உடல் பருமன் அதிகரித்து இருப்பது போன்றவை மிகவும் ஆபத்தானவை, எனவே செயற்கை இனிப்புட்டிகளைத் தவிர்ப்பது நல்லது.
உடலுக்குக் குறைவான சத்து உள்ளபோது செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்குப் பதிலாகச் சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றது.இதைப் பற்றி ஆராய்ந்து பார்த்த போது செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புப் போன்றவையினால் வளர்சிதை மாற்றம், குடல் பாக்டீரியா மற்றும் பசியின்மை ஆகியவற்றில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.
இவ்வாறு, அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை நுகரும் தனிநபர்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதில் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் எனக் கனடாவிலுள்ள மானிடொபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதிகரித்துவரும் செயற்கை இனிப்பான்களின் பயன்படுத்துவது தொற்று நோய், உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், சராசரியாக 1,003 நபர்க்கு 6 மாதங்கள் நடத்தப்பட்ட சோதனையை வைத்துக் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியின் போது செயற்கை இனிப்பூட்டிகளால் எடை குறைப்புக்கான எந்த விளைவும் தென்படவில்லை. இதுவே நீண்ட கால ஆய்வாகத் தொடரப்பட்ட போது செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொள்ளும் போது எடை அதிகரிப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் பொன்ற பிற உடல்நலப் பிரச்சனைகள் எழும் என்று தெரியவந்துள்ளது."எடை மேலாண்மையினைப் பொறுத்தவரையில் செயற்கை இனிப்புட்டிகளின் நோக்கம் அதன் நன்மைகளைக் கிளினிக்கல் பரிசோதனையில் தெளிவாக இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்றும் அதனால் நீண்ட நாட்கள் ஆய்விற்காக உட்படுத்தினோன் என்று மானிடோபா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான ரியான் ஜார்சான்ஸ்கி தெரிவித்தார்.
செயற்கை இனிப்புட்டிகள் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது எல்லாம் சித்தரிக்கப்பட்டது என்றும் அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான மேகன் ஆசாத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment