சுற்றுச்சூழல் மாசுக்களின் தாக்கம் நம் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதால் நமக்கும் எண்ணிலடங்காத நோய்கள் வந்து சேருகின்றன. நமது வளிமண்டலத்தில் உள்ள பசுமை நிற வாயுவான ஓசோனின் அளவு அதிகரிப்பதால் இதய நோய்களான ஹார்ட் அட்டாக், அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம் போன்ற அபாயங்கள் வருகின்றன என்று சைனீஸ் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஓசோன் வாயு மாசுக்கள், சில வேதிவினைகளான சூரிய ஒளிக்கதிர்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுடன் வினைபுரியும் போதும் மற்றும் நிலக்கரி எரித்தல், வாகனப் புகை, இயற்கை மூலப் பொருட்கள் போன்றவற்றிலிருந்தும் கிடைக்கின்றன.ஜீன் ஃபெங் ஹாங் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூக் குன்ஷன் யுனிவர்சிட்டியிலிருந்து இந்த தகவலை சீனாவில் உள்ள ஹாங்ஷா நகரத்தில் வாழும் 89 ஆரோக்கியமான இளைஞர்களிடமிருந்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
அவர்கள் உள்ளே மற்றும் வெளிச் சூழலில் ஓசோன் அளவை தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
நான்கு இடைவேளைகளில் அந்த இளைஞர்களுக்கு இரத்தம் மற்றும் யூரின் டெஸ்ட்டும், மூச்சுப் பிரச்சினையை ஸ்பைரோமீட்டர் கருவியை கொண்டும் ஆராய்ச்சி செய்தனர். இதன் மூலம் அவர்களுக்கு இதய நோய் மற்றும் மூச்சுப் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்தனர்.
மேலும் இந்த ஆராய்ச்சியின் போது பங்கு பெற்ற இளைஞர்களிடம் அழற்சி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், தமனி விரைப்பு, இரத்த அழுத்தம், இரத்தம் கட்டுதல், நுரையீரல் பிரச்சினை போன்றவற்றை ஆராய்ந்தனர்.இதிலிருந்து தெரிந்தது இரத்த ப்ளோட்லெட் செல்கள் செயல்கள், இரத்தம் கட்டுதல், அதிக இரத்த அழுத்தம் போன்றவை ஓசோன் தாக்கத்தால் ஏற்பட்டு இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது தெரிய வந்தது.
குறைவான ஓசோன் வாயு தாக்கம் இருந்தால் மூச்சுப் பிரச்சினை ஏற்படுகிறதாம். இந்த அளவு யு. எஸ் என்விரான்மென்டல் புரோசஷன் ஏஜென்சி குறிப்பிட்ட தூய்மையான காற்றின் அளவை பொருத்தது எனக் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் பாதுகாப்பான அளவான ஓசோனிலிருந்து வாயு வெளியேற்றம் இருந்தால் இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கலாம் என்று ஹாங் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியானது ட்யூக் யுனிவர்சிட்டி, ஜிங்குஹா யுனிவர்சிட்டி, ட்யூக் குன்ஷன் யுனிவர்சிட்டி மற்றும் பீக்கிங் யுனிவர்சிட்டி போன்றவற்றில் செய்யப்பட்டு யு. எஸ் ஜேர்னல் JAMA இன்டர்நேல் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment