உடல் பருமன் அதிகமாக இருப்பது என்பது இன்று அதிகப்படியானோர் சந்தித்து வரும் பிரச்சனையாகும். அளவான உடல் அமைப்புடன் இருப்பது தான் பேரழகு..!
அளவான உடல் அமைப்புடன் இருந்தால், நம்மை பல நோய்கள் அண்டாது. உடலை குறைக்க நீங்கள் ஒரு எளிமையான முறையை கையாண்டால் போதும்..! அந்த முறை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
அமெரிக்கர்கள்
அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் உள்ள 30-59% பேர் உடல் எடையை குறைக்க தண்ணீரை அதிகமாக குடித்து வருகின்றனர். பல ஆராய்ச்சிகளும் தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என தெரிவித்துள்ளன.
கலோரிகளை குறைக்க
தண்ணீரை அதிகமாக குடிப்பது உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. பெரியவர்கள் தண்ணீர் குடித்த 10 நிமிடங்களுக்குள் அவர்களது கலோரி 24-30 சதவீதம் குறைகிறது. இது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.
குழந்தைகள்
அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் தண்ணீரை அதிகளவு குடிப்பதால் அவரகளது கலோரி 25% வரை குறைக்கப்படுகிறது.
பெண்களுக்கு..!
பெண்கள் அதிகளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
எவ்வளவு தண்ணீர்?
0.5 லிட்டர் தண்ணீரை அதிகமாக குடிப்பதால், உடலில் உள்ள கலோரிகள், தண்ணீர் குடித்ததில் இருந்து 60 நிமிடங்கள் வரை எரிக்கப்படுகின்றன.
எவ்வளவு குறையும்?
பல ஆய்வுகளின் அடிப்படையில், 0.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 23 கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. வருடத்திற்கு 17,000 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இன்னும் அதிகமாக குடித்தால்?
இன்னும் பல ஆய்வுகளில் 1-1.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை இன்னும் அதிகமாக குறையும் என கூறப்பட்டுள்ளது.
குளிர்ந்த நீர்
உடல் எடையை குறைக்க குளிர்ந்த நீர் ஒரு சிறந்த தீர்வாகும். குளிர்ந்த நீர் குடிக்கும் போது, அந்த நீரை சூடாக்க சிறிதளவு கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment