நாம் வளரும் பருவத்தில் கண் தொடர்பான பல அட்வைஸ்களை கண்டிப்பாக கேட்டிருப்போம். அதுவும் குறிப்பாக நீண்ட நேரம் டிவி பார்த்தால் கண் கெட்டுவிடும், காரட் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் என்று நாம் பார்க்கும் விஷயங்களில் ஆரம்பித்து எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என வரையறை செய்துவிடுவார்கள். இதை தவிர்க்க கண் தொடர்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்களும் அதன் உண்மைகளும் பற்றிய தொகுப்பு.
டிவி :
டிவிக்கு மிக அருகில் உட்கார்ந்து பார்த்தால் கண் கெட்டுவிடும் :
இது எல்லாருக்கும் பொருந்தாது.ஏற்கனவே கிட்டப்பார்வையால் கண்ணாடி அணிந்தவர்கள் தொடர்ந்து டிவி அருகில் உட்கார்ந்து ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் போது அவர்களுக்கு கிட்டப்பார்வை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதே போல் அதிக நேரம் கண்களை சிமிட்டாமல் ஒரே பொருளை கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பதால் கண்களை சிமிட்ட மறந்துவிடுகிறோம் இதனால் விரைவிலியே கண்கள் மிகவும் களைப்பாகும் அதோடு சிலருக்கு கண்கள் வறட்சி ஆவதற்கும் வழியுண்டு.
கேரட் :
காரட் சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது .
கண்களுக்கு தேவையான பீட்டா கரோட்டீன், விட்டமின் ஏ ஆகியவை காரட்டில் அதிகம் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக காரட் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போதாது. உங்களது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டு வந்தாக வேண்டும்.
இருட்டறை :
இருட்டு அறையில் படிப்பது கண்களை பாதிக்கும். பலரும் இந்த வார்த்தைகளை கேட்டிருப்போம். மிகவும் உன்னிப்பாக படிப்பதால் கண்கள் விரைவில் ட்யர்டு ஆகிடுமே தவிர மற்றபடி பெரிய பிரச்சனைகள் வராது. அதுவும் இது நிரந்தரப் பிரச்சனையல்ல. கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் கவனம் முழுவதும் அதில் இருக்குமே தவிர என்ன படிக்கிறோம் என்பதில் இருக்காது என்பதாலேயே நல்ல வெளிச்சமான காற்றோட்டமான இடத்தில் படித்தால் நல்லது.
கண்ணாடி :
இன்னொருவரின் கண்ணாடி அணிந்தால் நம் கண் பாதிப்படையும். இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. இன்னொருவரின் கண்ணாடி அணிந்தால் நம் பார்க்கும் திறன் வேறுபடும் தொடர்ந்து அணிந்து கொண்டேயிருந்தால் மட்டுமே பாதிப்பு கண்ணாடியை கழட்டிவிட்டோம் என்றால் அதுவும் இல்லை.
பார்வை இழப்பு :
பார்வை இழப்பு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதில் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. யாருக்கும் ஒரே நாளில் பார்வை போவது இல்லை. சில அறிகுறிகள் தெரியும் போதே சுதாரித்து ஆரோக்கியமான உணவு, கண்களுக்கு தேவையான பவர் கண்ணாடி, சன் கிளாஸ்,தொடர்ந்து செக்கப் செல்வது என்று இருந்தால் பார்வை பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
கணினி :
நாள் முழுவதும் கம்ப்யூட்டர் பார்த்தால் கண்கள் பாதிப்படையும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் என்றில்லை வேறெந்த பொருளை பார்த்தாலும் கண்களுக்கு பாதிப்பு தான். அடிக்கடி சிறிய இடைவெளி எடுத்து நாம் பார்க்கும் பொருளை தவிர்த்து வேறு எதாவது பொருளை பார்க்க வேண்டும். கண்களுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் கிடைக்கும்.
சூரியன் :
சூரியனை சன் கிளாஸ் உதவியுடன் நேரடியாக பார்க்கலாம். இது தவறான கருத்து. சூரியனிடமிருந்து வெளியாகும் அல்ட்ரா கதிர்கள் நம் கண்களின் கார்னியா, லென்ஸ், ரெட்டீனா ஆகியவற்றை பாதிக்கும். என்ன தான் சிறந்த சன் கிளாஸ் அணிந்து சூரியனை பார்த்தாலும் அவை 100 சதவீதம் சூரியனில் இருந்து வெளியாக அல்ட்ரா கதிர்களை தடுப்பதில்லை.
செக்கப் :
அடிக்கடி கண்களை செக் செய்ய வேண்டும் என்றில்லை. தவறு. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கண்களை செய்து கொள்ள வேண்டும். கண்களை தாக்கும் நோய்களை முன்னரே அறிந்து அதனை தவிர்க்க இது அளிதாக அமையும். நோய் வந்த பிறகு செல்வதை விட நோய் வராமல் தவிர்ப்பதே சிறந்தது.
கண்ணாடி :
கண்ணாடி அணிய வேண்டியவர் தொடர்ந்து கண்ணாடி அணியவில்லையெனில் பவர் கூடிடும். கண்ணாடியோ லென்ஸோ அணிவது பார்க்கும் திறனில் ஏதேனும் குறைகள் இருந்தால் மட்டுமே சிரமப்படாமல் நீங்கள் பார்க்கலாம். இதனை தவிர்த்தால் சிரமங்களை தவிர்க்கலாம். தொடர்ந்து அணிந்திருந்தால் பவர் குறையும் என்பதோ, அணியாமல் தவிர்த்தால் பவர் கூடும் என்பதோ தவறான கருத்து.
சர்க்கரை நோயாளிகள் :
உடலில் சர்க்கரையளவு சரியாக இருந்தால் அவர்களுக்கு பார்வை பறிபோகாது.
உடலில் உள்ள ரத்தச் சர்க்கரையளவை தாண்டி, சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை பறிபோவதற்கான வாய்ப்புகள் உண்டு,தொடர்ந்து செக்கப் செய்வது, மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
பயிற்சி :
கண்களில் செய்யப்படும் பயிற்சி தொடர்ந்து செய்தால் பார்வை குறைபாட்டில் இருந்து தப்பிக்கலாம்.
கண்களுக்கு உள்ளே வரும் பாதிப்புகளை எல்லாம் பயிற்சி கொண்டு தவிர்க்க முடியாது. பயிற்சி செய்வது என்பது கண்கள் டயர்டு ஆகிடாமல் தவிர்க்கவே தவிர பார்வைக் குறைபாடு வராமல் தடுக்க அல்ல. சில நேரங்களில் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தாமதப்படுத்தவும் செய்யும்.
கண்களை அழுத்த தேய்ப்பது :
எப்போதும் கண்களை அழுத்த தேய்க்ககூடாது. சரி, ஏனென்றால் கண்களைமூடி வெளிப்புறத்தில் தேய்க்கலாம் ஆனால் அழுத்த தேய்த்துவிடக்கூடாது இது கண்களில் உள்ள ரத்த நாளங்களை பாதிக்கச் செய்யும் அத்துடன் கண்களில் ஈரப்பதமான திசுக்கள் அதிகமிருக்கின்றன அதற்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
No comments:
Post a Comment