ஒருவேளை நம் வீட்டில் பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியங்கள் பின்பற்றி வந்திருந்தால், நமது ஊர்களில் தெருவுக்கு, தெருவுக்கு இத்தனை மருத்துவமனைகளும், கண், காது, மூக்கு என தனித்தனி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்ப்பிடல்களும் முளைத்திருக்காது.
சின்ன, சின்ன உடலநலக் கோளாறுகள், நோய்களுக்கு கூட, நம் வீட்டு சமையற்கட்டிலேயே மருந்துகள் இருப்பதை மறந்து... நாம் அவசர அவசரமாக மருத்துவமனைகளுக்கு ஓடுகிறோம்.இனிமேல், இந்த கோளாறுகளுக்கு நீங்கள் ஆங்கில மருந்துகளை தேடி ஓட தேவையில்லை. இதோ! இந்த எளிதான பாட்டி மருத்துவ குறிப்புகளை பின்பற்றுங்கள்...
குடல் புண்!
மஞ்சள் சாம்பல் ஆகும் வரை நெருப்பில் எரிய வைத்து, மஞ்சள் சாம்பலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடம் புண் ஆறும்.
உதட்டு வெடிப்பு!
எரித்து சாம்பல் ஆக்கிய கரும்பு சக்கையை எடுத்து, அதனுடன் வெண்ணெய் சேர்த்து தடவி வந்தால் உதட்டு வெடிப்பு சரியாகும்.
செரிமானம்!
கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஒரே அளவில் எடுத்து அதை கொதிக்கும் நீரில் கலந்து, ஆறவைத்த பிறகு அதை வடிக்கட்டி குடித்து வந்தால் செரிமான கோளாறுகள், அஜீரணம் போன்றவை குணமாகும்.
மலச்சிக்கல்!
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, காலை, மாலை இருவேளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும், காலை கடன் சீராக கழியும்.
தீப்புண்!
வாழைத்தண்டினை நெருப்பில் இட்டு சாம்பலாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண் ஆறும். சீழ்வடிதல் நிற்கும்.
வறட்டு இருமல்!
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.
தலை பாரம்!
தும்பை பூவை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைபாரம் குறையும்.
வாயுத் தொல்லை!
உலர்ந்த வேப்பம் பூவை பொடியாக்கி, சுடுநீரில் கலந்து உட்கொண்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்குவதுடன், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
No comments:
Post a Comment