Thursday, 31 August 2017

தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

நடுத்தர வயதுடையோர் எல்லோரும் உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் வாழ்வில் நிறைய நிகழ்வுகளைக் கடந்தே வந்திருப்பர், அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல்.
விக்கல் எடுக்கும் சமயத்தில், நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என பிரயத்தனம் செய்வதும், அதனால் அடையும் மன உளைச்சல்களும் மிக அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடுபடுத்திவிடும் என்பதில், ஐயமில்லை.
விக்கல் எதனால் ஏற்படுகிறது?
எல்லாம், அவசரம்தான் காரணம். காலையில் அலுவலகத்துக்கோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லத் தாமதாமாகிவிடும் என எண்ணி, அல்லது மதிய உணவு நேரத்தில் சாப்பிடும்போது, வரும் போன் அழைப்பை பேசிக்கொண்டே சாப்பிடுவது, அரட்டையடித்துக்கொண்டே சாப்பிடுவது, ஏதோ சிந்தனையிலேயே சாப்பிடுவது போன்ற சாப்பிடும்போது செய்யத்தகாத அத்தகைய செயல்கள் மூலம் விக்கல் வரலாம்.How to stop hiccups காலை சிற்றுண்டியை நாம் அவசர அவசரமாக அள்ளி விழுங்கும்போதோ, அவரசமாக ஏதேனும் சூடான பானங்கள் பருகும்போதோ நமக்கு விக்கல் ஏற்படுகிறது.
மேலும், நம்முடைய மூச்சுக்காற்று, மூச்சுக்குழாய்கள் வழியே உடலில் பரவும்போது, உடலில் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உள்ள தசைகள் திடீரென தானாக சுருங்கி விரியும் தன்மையை அடையும்போது, அதன் காரணமாக விக்கல் ஏற்படுகிறது.
தசைகள் தானாக சுருங்க, நாமறியாத காரணங்கள் பல இருந்தாலும், பொதுவாக, இடைவிடாத விக்கல் இருந்தால் மட்டுமே, நாம் அதை ஆராயவேண்டும். மாறாக, விக்கல் சாதாரணமாக, சில நிமிடங்களில் நின்றுவிடும், அல்லது நாம் விக்கலை நிறுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவால், விக்கல் நின்றுவிடும்.
நீண்ட நேரம் தொடரும் விக்கலால், களைப்பு மற்றும் உணவில் நாட்டமின்மை போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்,
விக்கலுக்கு சிறந்த தீர்வு என்ன?
வயிற்று தசை சுருக்கத்தால் ஏற்படும் விக்கலைத் தடுக்க, ஒரு சிறந்த வழி, நமது ஊர் அரசியல்வாதிகளின் பால பாடம்தான் இங்கும். என்ன அது என்று யோசிக்கிறீர்களா?
விக்கல் வரும் சமயத்தில், நம்முடைய கவனத்தை, திடீரென வேறு ஒரு விசயத்தில் திசைதிருப்புவது, இது விக்கல் வரும் நபர் செய்யமுடியாது. அருகில் இருக்கும் விஷயம் தெரிந்தவர் முயற்சி செய்யலாம்.
விக்கல் எடுக்கும் நபர் அலுவலகத்தில் இருந்தால், அவரிடம் நண்பர் சென்று, நண்பா, வாழ்த்துக்கள்!, உனக்கு "சிக்கிமுக்கு" டிரான்ஸ்பர் போட்டிருக்காங்க, இப்போதான் ஆர்டரைப் பார்த்தேன். .. என்று காதில் டன் கணக்கில் அதிர்ச்சியைக் காய்ச்சி ஊற்றியதைப்போல விசயத்தைக் கேட்டபின், விக்கல் வந்தவருக்கு விக்கல் எங்கே போயிருக்கும் என்றே தெரியாது, மாறாக, அவர் மனமெல்லாம், அந்த அதிர்ச்சியான தகவலிலேயே இருக்கும்.
சரி இருக்கட்டும், இனி நாம் வேறு என்ன செய்தால் விக்கல் தீரும் என்று பார்க்கலாம்.துளசி :

துளசி :

துளசி இலைகள் சிறிதளவு எடுத்து வாயில் மென்று வர, விக்கல் தீர்ந்துவிடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மூச்சடக்குதல் :

மூச்சடக்குதல் :

விக்கல் எடுக்கும் சமயத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து பின்னர், மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம்.சர்க்கரை :

சர்க்கரை :

பொதுவாக கிராமங்களில் செய்வார்கள், விக்கல் வரும்போது, ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ள, விக்கல் நீங்கிவிடும்.
தயிரில் சற்றே கூடுதலாக உப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிவர, விக்கல் .விக்கல் வராமல் தடுப்பது எப்படி?

விக்கல் வராமல் தடுப்பது எப்படி?

விக்கல் வராமல் தடுக்க, பெரிதாக எதுவும் தேவையில்லை, வழக்கமாக நமது உடல் நலனுக்கு என்ன செய்வோமோ, அதையே தொடர்ந்து செய்து வந்தால் போதும். உதாரணமாக, சூடான அல்லது குளிரான நீராக அல்லாமல், சாதாரண தண்ணீரை தினமும் அடிக்கடி நிறைய பருக வேண்டும், குறைந்த பட்சம் எட்டு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு நாம் பருக வேண்டும்.
அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு உண்ணும்போது, மெதுவாக, உணவை நன்கு மென்று உண்ண வேண்டும், அளவுக்கு மீறி உண்ணாமல் அளவுடன் சாப்பிட வேண்டும், அவசரம் கூடாது.
நன்கு செரிக்கக்கூடிய உணவுகளை மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். சூடான உணவு வகைகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும், ஊட்டமுள்ள புரதச்சத்துகள் அதிகமுள்ள உணவு வகைகள் சாப்பிடவேண்டும்.மருத்துவரை நாடுதல் :

மருத்துவரை நாடுதல் :

மேற்கண்ட முறைகளில் விக்கல் தீராமல் நெடுநேரம் தொடர் விக்கலாக நீடித்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்பாக இருக்கும். உடல் வறட்சி, கண்கள் தெளிவின்மை மற்றும் இலேசான மயக்கம் ஏற்படக்கூடும், உடனே மருத்துவரை அணுகுதல் நலம்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...