Thursday, 31 August 2017

பல பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்திப்பூ! எப்படி பயன்படுத்தலாம்!

பூக்கள் அழகிற்காகவும், கடவுளுக்கு படைப்பதற்காகவும் மட்டுமில்லை. அவற்றிற்கு மருத்துவ குணங்களும் இருக்கின்றன. இந்த வகையில் செம்பருத்திப்பூ கடவுளுக்கு படைக்க உகந்தது. அதுமட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தையும் காக்கும் தன்மை கொண்டது.
செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், காமம் பெருகும், மாதவிடாயைத் தூண்டும். மேலும் இதன் பயன்களை பற்றி முழுமையாக காணலாம்.முடி பிரச்சனைகளுக்கு!

முடி பிரச்சனைகளுக்கு!

செம்பருத்தி முடி வளர்ச்சி, நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்கும். பல மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது. செம்பருத்திப்பூவை கொண்டு கூந்தலுக்கு எண்ணெய் தாயரித்து பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகள் போகும்காலணிகளை மெருகேற்ற

காலணிகளை மெருகேற்ற

செம்பருத்திச் செடியின் மலர்களிலிருந்து காலணிகளை மெருகேற்றப் பயன்படும் ஒரு வித சாயம் பெறப்படுகின்றது. இதனால் ஆங்கிலத்தில் செம்பருத்திப் பூவை ஷு ஃப்ளவர் என்கிற பெயரால் அழைக்கின்றனர்.உபயோகிக்க தகுந்தது எது?

உபயோகிக்க தகுந்தது எது?

செம்பரத்தை, தாசானிப் பூ, ஜப புஷ்பம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் உண்டு. ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் உபயோகிக்கத் தகுந்தது.
கொத்தான அடுக்கில் பல இதழ்களைக் கொண்ட அடுக்கு செம்பருத்தி அழகிற்கு மட்டுமே பயன்படுகிறது. செம்பருத்தி செடியின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. முக்கியமாகப் பூக்களும் இலைகளும் அதிக அளவில் உபயோகமாகின்றன.கருமையான கூந்தலுக்கு..

கருமையான கூந்தலுக்கு..

செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.சிறுநீர் எரிச்சல்

சிறுநீர் எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.மாதவிடாய் பிரச்சனைகளுக்கு

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு

மாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக செய்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட் கொள்ள வேண்டும்.
7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும், மாலையிலும் 7 நாள்கள் வரை உட்கொள்ள வேண்டும்.இருமல் மருந்து

இருமல் மருந்து

செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3 இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு தொடர்ந்து குடிக்க‌ இருமல் தீரும்.பேன் தொல்லை நீங்க..!

பேன் தொல்லை நீங்க..!

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.இருதய நோய்க்கு..

இருதய நோய்க்கு..

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.இரும்பு சத்தை அதிகரிக்க..

இரும்பு சத்தை அதிகரிக்க..

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...