டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஒரு அமைதியாக கொல்லும் நோயாகும். உங்களுக்கு தெரியும் டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படும்.
ஆனால் புதிய ஆராய்ச்சி தகவல்கள் என்ன சொல்கிறது என்றால் நடுத்தர வயதில் டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் பின் நாட்களில் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் JAMA நியூராலஜி என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 15,744 பேர்கள் 45-64 வயதில் 1987-1989 வரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆராய்ச்சியானது 25 வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது. இதில் 1516 பேர்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் இந்த ஆராய்ச்சியானது டிமென்ஷியாவுக்கும், ஹைபர் டென்ஷனுக்கும் இடையே உள்ள தொடர்பையும் ஆராய்ந்தது. அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ் போன்றவைகள் ஹைபர் டென்ஷனை ஏற்படுத்துவதால் டிமென்ஷியா வருகின்றன என்பதும் உறுதியாகியுள்ளது.மேலும் புகைப்பிடிப்பதாலும் டிமென்ஷியா வருவது தெரிய வந்துள்ளது.
மேலும் மற்றொரு ஆராய்ச்சியில் பீட்டா அமிலாய்டு புரோட்டீன் அதிகளவு மூளையில் தங்குவதால் அல்சீமர் நோய் வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment