நோய் வந்த பிறகு அதனை தீர்க்க பாடுபடுவதை விட அதனை வராமல் தீர்த்துவிடுவது தான் சிறந்தது. குறிப்பாக காலச்சூழ்நிலைகள் மாறும் நேரம் அதனை எதிர்கொள்ள முடியாமல் நம் உடல் தடுமாறும். அதுவும்,
மழை காலங்களில் எல்லாம் எளிதாக தொற்று நோய் எளிதாக பரவிடும். நோய்த்தொற்று பரவுவதை தடுக்க நம் உணவுமுறையில் சிற்சில மாற்றங்களை செய்தாலே நோய் வராமல் பாதுகாத்திட முடியும். மழைக்காலங்களில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.
ஜீரணம் :
பெரும்பாலான பிரச்சனை சரியாக ஜீரணம் ஆகாததால் தான் வருகிறது. பூண்டு, மிளகு, இஞ்சி,பெருங்காயம், சீரகம்,மஞ்சள் மற்றும் மல்லி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.
தண்ணீர் :
கண்ட இடங்களிலும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து குடித்துப் பழகுங்கள். அதே போல உணவுகளில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.அதே போல ரோட்டோரக் கடைகளிலிருந்து ஜூஸ் குடிப்பதையும் தவிர்த்திடுங்கள்.
அசைவம் :
அசைவம் உணவு உட்கொள்கிறவர்கள் லைட்டான உணவுகளை எடுத்து கொள்ளலாம். மீன்,நண்டு போன்றவற்றை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிக கலோரி இருக்கும் கறிகளை தவிர்த்திடுங்கள்.
சாப்பிடலாம் :
சூடான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நன்றாக வேக வைத்து சமைத்தப் பின்னரே சாப்பிட வேண்டும். ஏனென்றால் இவை அஜீரணத்தை ஏற்படுத்திடும்.
கீரைகள் :
மழைக்காலங்களில் முடிந்தளவு கீரைகளை தவிர்த்திடுங்கள். மழைக்காலத்தில் தான் அதில் பாக்டீரியா தொற்று ஏற்படும் என்பதால் அதனை தவிர்ப்பது நன்று. கீரைகளை தவிர்த்து, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றையும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
No comments:
Post a Comment