உணவுகளைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு வந்தால் மட்டும் போதாது, அதனை தயாரிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் தான் ஆரோக்கியமானது என்று நினைத்திருப்போம். ஆனால் அது நிஜமா? காய்கறி மற்றும் பழங்களில் எவ்வளவு பூச்சி மருந்துகள் இருக்கிறது தெரியுமா?
2004 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த விவாயத்துறை, உணவு மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த அமைப்புகள் காய்கறி மற்றும் பழங்களில் எவ்வளவு பூச்சிமருந்து கலந்திருக்கிறது ஒவ்வொரு காய் மற்றும் பழத்திற்கு எவ்வளவு பூச்சி மருந்து தேவைப்படுகிறது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
2004 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த விவாயத்துறை, உணவு மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த அமைப்புகள் காய்கறி மற்றும் பழங்களில் எவ்வளவு பூச்சிமருந்து கலந்திருக்கிறது ஒவ்வொரு காய் மற்றும் பழத்திற்கு எவ்வளவு பூச்சி மருந்து தேவைப்படுகிறது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஸ்ட்ராபெர்ரி :
ஸ்ட்ராபெர்ரி பழங்களை விளைவிக்க அதிகப்படியான பூச்சி மருந்து தேவைப்படும். ஆய்வுக்காக கொண்டுவரப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் 29 சதவீத ஸ்ட்ராபெர்ரிகளில் பத்துக்கும் மேற்பப்ட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருந்ததாம்.
கீரை :
ஆய்வுக்கு எடுத்து வரப்பட்ட நான்கில் மூன்று பங்கு கீரைகளில் நியுரோடாக்ஸிக் பக் என்ற பூச்சி மருந்து கலந்திருக்கிறது. இது ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்தாகும். கீரைகளில் அடிக்கடி பூச்சி தாக்குதல் ஏற்படும் அதனை தவிர்க்க அதிகப்படியான பூச்சி மருந்துகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள்.
ஆப்பிள் :
இந்தியர்களை பொருத்தவரை பழங்களிலேயே மிகவும் சத்தானது ஆப்பிள் பழம் தான். நமக்கு நன்மைபயக்கும் பழங்களில் வாழும் நுண்ணுயிர்களையும் சேர்த்தே அழித்திடுகிறது. இதனால் பழங்களிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் குறைந்து விடுகிறது.
திராட்சை :
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பழங்களில் திராட்சையில் ஒப்பீட்டளவில் பூச்சிமருந்து குறைவாக இருக்கிறது. வளரும் நேரங்களை விட பதப்படுத்துவதற்காகவே திராட்சைகளில் அதிகப்படியான பூச்சி மருந்துகளை கலக்குகிறார்கள்.
தக்காளி :
சமையலில் கண்டிப்பாக சேர்க்கும் விஷயங்களில் தக்காளியும் ஒன்று. இதிலும் அதிகப்படியான பூச்சி மருந்து கலந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். தக்காளியின் விளைச்சலுக்குத்தான் பூச்சி மருந்தை பயன்படுத்துகிறோம் என்று சொன்னாலும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உருளைக்கிழங்கு :
பலருக்கும் மிகப்பிடித்தமான காய்கறிகளில் ஒன்று.அதிகமான பூச்சி மருந்து தெளிக்கப்படும் காய்களின் டாப் 12வது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே டயட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் இப்போது இதுவுமா??
No comments:
Post a Comment