ஆராய்ச்சியாளர்கள் புதிய முறையில் பாதிப்படைந்த இதயங்களை சரி செய்யும் ஆராய்ச்சியை கண்டுபிடித்துள்ளனர். இதில் திசு வடிவத்தில் மிகவும் நுண்ணிய பேன்டேஜ் ஒன்றை இதயத்தில் செலுத்தி அதை சரி செய்கின்றனர். இந்த பேன்டேஜின் அளவானது போஸ்ட் ஸ்டாம்ப் அளவை விட மிகவும் சிறியது.
பாதிப்படைந்த செல்களை சரிசெய்து ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதற்கு அல்லது புதிய செல்களை புதுப்பிப்பதற்கு இதயத்தை துளையிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் கனடாவில் உள்ள யுனிவர்சிட்டி டோரான்டோ செய்த ஆராய்ச்சியானது நமது நெஞ்சுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்யாமலேயே சிறு நுண்ணிய ஊசியை இதயத்தினுள் செலுத்தி பாதிப்படைந்த செல்களை சரி செய்யலாம்.
இந்த ஆஞ்சியோ சிப் என்ற சிறிய பேஜ் ஹார்ட் திசு இரத்த குழாய் களையும், சீரான இதய துடிப்பையும் கொண்டுள்ளது.
இப்பொழுது இது எல்லா இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் கிடைக்கக் கூடியதாக இல்லை என்று மிளிகா ரேடிசிக் யுனிவர்சிட்டி ஆஃப் டோரான்டோ விலிருந்து கூறுகிறார்.
அவர் என்ன சொல்லுகிறார் என்றால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இதய செயல்கள் குறைந்த பிறகு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் அபாயகரமானது என்கிறார்.
மில்ஸ் மோன்டோமெரி என்ற பி. எச். டி படித்த இவர் ரேடிசிக் ஆய்வுக் கூடத்தில் இந்த பேஜ்யை இதய அறுவை சிகிச்சைக்கு பதிலாக இதை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட 3 வருடங்கள் போராடியுள்ளார்.
இந்த ஆராய்ச்சி படி பாதிப்படைந்த திசுவின் இயக்க பொருட்களுடன் ஒத்து போகவும், தேவையான அளவு நினைவாற்றல் இயக்கத்தியையும் கொண்டு இந்த பேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேஜ் தானாகவே அன்ஃபோல்ட் இயக்கத்திலிருந்து பேன்டேஜ்யாக மாற ஒரு ஊசியில் மட்டும் செலுத்தினால் போதுமானது . நினைவாற்றல் அளவானது அதன் இயற்பியல் பொருட்களை சார்ந்துள்ளது. கெமிக்கல் பொருட்களை சார்ந்து இல்லை என்று ரேடிசிக் கூறுகிறார்.அதாவது பேஜின் அன்ஃபோல்டிங் செய்முறைக்கு எந்த வித ஊசியும் தேவைப்படாது. அதுவாகவே அன்ஃபோல்ட் நிலைக்கு மாறிவிடும்.
அடுத்த நடவடிக்கை அந்த பேஜ் பாதிப்படைந்த செல்களை புதுப்பிக்க ஆரம்பித்து விடும். இந்த பேஜை எலி மற்றும் பன்றிகளில் செலுத்திய போது சில நாட்களிலேயே புதிய செல்கள் வளரத் துவங்கி விட்டனர்.
பாதிப்படைந்த செல்களின் அளவிற்கு தான் இந்த பேஜ் அன்ஃபோல்ட் ஆகும் என்று சொல்ல முடியாது.
புதிய செல்கள் வளரத் துவங்கியதும் தானாகவே இந்த பேஜ் விழிந்து விடும்.
No comments:
Post a Comment