Thursday, 31 August 2017

உங்க உடம்புல இந்த சத்துக்களெல்லாம் என்னென்ன வேலை பண்ணுதுன்னு தெரியுமா?

நம் உடலை சீராக இயக்குவதற்கு சில ஊட்டச்சத்துக்களின் உதவி தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்துகளை பற்றிய ஒரு அறிமுகமே இந்த தொகுப்பு. எந்த விட்டமின் உங்கள் உடலின் எந்த செயலுக்கு இன்றியயமையாதது என்று இக்கட்டுரையில் காணலாம்.Vital nutrients and their importance to the bodyவிட்டமின், மினரல், மற்றும் இதர சத்துக்களைப் பற்றியும் அவை உடலுக்கு செய்யும் நன்மைகளையும் இங்கு காணலாம்.வைட்டமின் A :

வைட்டமின் A :

நோயெதிர்ப்பு, இனப்பெருக்கம் மற்றும் குறிப்பாக பார்வை போன்றவற்றிற்கு வைட்டமின் A இன்றியமையாதது. வைட்டமின் ஏ விழித்திரை, கார்னியா , மற்றும் கண் சவ்வு சரியாக செயல்பட உதவும்.தையமின்(வைட்டமின் B1):

தையமின்(வைட்டமின் B1):

வைட்டமின் B1 என்றும் அறியப்படும் தியாமின், உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஒழுங்காக இயங்க வைக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து இது. ரிபோபிளவின் (வைட்டமின் B2):

ரிபோபிளவின் (வைட்டமின் B2):

ரிபோபிளவின் என்பது மற்றொரு B வைட்டமின் ஆகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றி ஆகும், இது புரதம் மற்றும் கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்து, கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது. மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.நியாசின் (வைட்டமின் B 3):

நியாசின் (வைட்டமின் B 3):

நியாசின், என்பது மற்றொரு B வைட்டமின் ஆகும். உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு முக்கியம். செரிமான அமைப்பு, தோல் மற்றும் நரம்புகள் சரியாக செயல்பட உதவுகிறது.வைட்டமின் B6:

வைட்டமின் B6:

வைட்டமின் B6 உடலில் ஒத்த விளைவுகள் கொண்ட ஆறு வெவ்வேறு கலவைகள் அடங்கிய ஒரு குடை போன்றது. இவை உணவை வளர்சிதைபடுத்த உதவுகிறது. சிவப்பணுக்களின் பகுதியான ஹீமோகுளோபின் உருவாக உதவுகின்றன. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நோயெதிர்ப்பு பொருட்களை உருவாக்குகின்றன. வைட்டமின் B12 :

வைட்டமின் B12 :

சிறந்த நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கும் டிஎன்ஏ மற்றும் சிவப்பு அணுக்கள் உருவாவதற்கும் B12 இன்றியமையாதது. இது சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும் இரத்த சோகைக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகிறது.வைட்டமின் C:

வைட்டமின் C:

இது ஒரு முக்கிய ஆக்ஸிஜனேற்றியாகும். புரத வளர்சிதை மாற்றம், நரம்பியக்கடத்திகளின் தொகுப்பு போன்ற பல முக்கிய உடல் செயல்பாடுகளில் இது ஒரு தேவையான மூலப்பொருளாக இருக்கிறது.வைட்டமின் D :

வைட்டமின் D :

நமது உடலில் சூரிய வெளிச்சம் படும் போது தானாகவே வைட்டமின் D உடலுக்குள் உருவாகிறது. இது கால்சியத்தை உறுஞ்சுவதற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது. இது செல்களின் வளர்ச்சிக்கும் , நோயெதிர்ப்பு மற்றும் வீக்கங்கள் குறைப்பு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் E :

வைட்டமின் E :

வைட்டமின் E சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளிலிருந்து உயிரணுக்களை பாதுகாக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் ஆரோக்கியமான இரத்தக் குழாய் செயல்பாடு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற செயல்பாடுகளுக்கு முக்கியம்.வைட்டமின் K :

வைட்டமின் K :

இரத்தம் உறைதலுக்கான முக்கிய மூலக்கூறு இந்த வைட்டமின் K வாகும். இந்த சத்து இல்லையேல் காயத்தினால் ஏற்படும் இரத்த வெளியேற்றத்தை தடுக்க முடியாமல் போகும்.கால்சியம் :

கால்சியம் :

உடலில் அதிக அளவு காணப்படும் ஒரு தாது பொருள் கால்சியம் ஆகும். 99% கால்சியம் பற்களிலும் எலும்புகளிலும் சேமிக்கப்படுகின்றன. மற்றவை இரத்த குழாய் மற்றும் திசுக்களின் செயல்பாட்டில் மற்றும் ஹோர்மோன் சுரப்பதில் உதவுகின்றன.ஃபோலேட்:

ஃபோலேட்:

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கிறது. மற்றவர்களுக்கு புரத சத்து மற்றும் திசுக்களின் வளர்ச்சியில் உதவுகிறது.இரும்பு சத்து :

இரும்பு சத்து :

நம் உடலில் உள்ள புரதங்கள் இந்த உலோகத்தின் மூலம் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதோடு செல்களை வளர்க்கவும் பயன்படுத்துகின்றன. உடலின் இரும்பு சத்து பெரும்பான்மை ஹீமோகுளோபினில் காணப்படுகிறத. இவை உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன.லிகோபீனே:

லிகோபீனே:

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் இந்த இரசாயன நிறமி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டதாக தோன்றுகிறது. சில ஆய்வுகள் லிகோபீன் இதய நோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களும் எதிராக பாதுகாக்க உதவும் என்று தெரிவிக்கிறது. லைசின்:

லைசின்:

லைசின், லி-லைசின் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அமினோ அமிலமாகும். உடல் கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளுக்கும் இணைப்பு திசுக்களுக்கும் கொலோஜனாக மாற்றுவதில் இதன் பங்கு இருக்கிறது. கொலெஸ்ட்ரால் அளவை பராமரிப்பதற்கு கார்னிடினே என்ற ஊட்டச்சத்து உற்பத்தியில் இது துணை புரிகிறது.ஒமேகா 3 - கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா 3 - கொழுப்பு அமிலங்கள்:

எல்லா கொழுப்புகளும் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது. சில வகை பல்நிறைவுற்ற கொழுப்புகள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. அவற்றுள் ஒன்று ஒமேகா3 கொழுப்புகள் . இவை மூளை வளர்ச்சிக்கும் வீக்கங்கள் குறைவதற்கும் துணை புரிகின்றன.மற்ற முக்கிய மினரல்கள் :

மற்ற முக்கிய மினரல்கள் :

பொட்டாசியம் இதயத்தின் மின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த தேவையான அத்தியாவசிய எலக்ட்ரோலைட் ஆகும். இது புரோட்டீன்கள் மற்றும் தசைகளை உருவாக்கவும், கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
செலினியம் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட ஒரு கனிமமாகும். உடலுக்கு இது சிறிய அளவு மட்டுமே தேவை, ஆனால் இது நாள்பட்ட நோய்களை தடுக்க ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. இது தைராய்டு செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடலில் 300வகையான உயிர்வேதியல் விளைவுகளுக்கு இந்த மெக்னீசியம் காரணமாயிருக்கிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாடு, இதய துடிப்பை சரியாக வைத்திருத்தல், எலும்புகளை பலமடைய செய்தல் போன்றவை இதன் வேலையாகும்.
துத்தநாகம் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டில் அதிகம் தேவைப்படுகிறது , இது சுவை மற்றும் வாசனையின் உணர்வுகள் ஆகியவற்றிற்கும் முக்கியம்.
இத்தகைய ஊட்டச்சத்துகள் எந்த உணவில் அதிகமாக உள்ளன என்பதை நமது அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...