Thursday, 31 August 2017

வியர்வை நாற்றம் போக்க, ஞாபக சக்தி பெருக உதவும் கோரைக்கிழங்கு! எப்படி பயன்படுத்தலாம்?

கோரை ஒரு புல்வகையை சார்ந்தது. இதன் கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சாதரணமான நிலப்பரப்பு மற்றும் வயல் பகுதிகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று. இதில் சிறு கோரை, பெருங்கோரை என இருவகைகள் உண்டு.
இது முட்டை வடிவ சிறு கிழங்குகளை பெற்றிருக்கும். வளர்ந்த உச்சியில் பிரிவாக சிறு பூக்கள் இருக்கும். இந்த கிழங்குகளே மருத்துவ குணம் உடையது. இந்த பகுதியில் கோரைக்கிழங்கின் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்.செரிமானத்தை அதிகரிக்கும்:

செரிமானத்தை அதிகரிக்கும்:

கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது.உடற்கட்டிகள்

உடற்கட்டிகள்

கோரைக்கிழங்கு உடலில் உள்ள கட்டிகளை அகற்றும் தன்மை உடையது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கு குளிர் காய்ச்சலை நீக்கும். அதிக தாகம் மற்றும் பித்தவளர்ச்சி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.வியற்வை நாற்றம்

வியற்வை நாற்றம்

கோரைக்கிழங்கை அரைத்து அந்த பொடியை உடலில் பூசினால், வியற்வை நாற்றம் வராது. இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யும் குளியல் பொடியில் இதனை கலந்து பயன்படுத்தலாம்.
ஞாபக சக்தி பெருக..

ஞாபக சக்தி பெருக..

கோரைக்கிழங்கை பாலுடன் அரைத்து பசையாக்கி தலைக்கு பூசினால் ஞாபக சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், வலிப்பு நோய், பைத்தியம் பிடித்த நிலை போன்றவை குணமாகும்.விஷக்கடிகளுக்கு...

விஷக்கடிகளுக்கு...

தேள், குளவி போன்றவை கடித்தால், கோரைக்கிழங்கை பற்றாக போடலாம். இதனால் விஷத்தன்மை இறங்கும்.பால்சுரக்க

பால்சுரக்க

கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களை நன்றாக வளர்ச்சியடைய செய்ய இந்த கோரைக்கிழங்கு உதவுகிறது. தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்..

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்..

கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சில நாட்டு மருத்துவர்கள் கோரைக்கிழங்கை முத்தக்காசு என்றும் அழைக்கின்றனர்.எப்படி சாப்பிடலாம்?

எப்படி சாப்பிடலாம்?

கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.குடல் புழுக்கள் அழிய..!

குடல் புழுக்கள் அழிய..!

இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்அஜீரண கோளாறுகளுக்கு..!

அஜீரண கோளாறுகளுக்கு..!

கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்.புத்தி கூர்மைக்கு..!

புத்தி கூர்மைக்கு..!

கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...