வலிகளை குறைக்க எண்ணி வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது எதிர்மறையான விளைவுகளை தான் தரும். வலிகளை குறைக்க சில எளிமையான வீட்டு மருத்துவங்களும் உள்ளன. இதனால் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவது இல்லை. மேலும் இவை மிகவும் எளிய வழிமுறைகளும் கூட... இந்த பகுதியில் வலிகளை குறைக்க உதவும் எளிய வழிகளை பற்றி காணலாம்.
கிராம்பு
கிராம்பு மசாலா பொருட்களில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சளி, தலை சுற்றல் மற்றும் பல்வலியை போக்க உதவுகிறது. இதனை நீங்கள் பற்களுக்காக வீட்டு மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்பாக பல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
அக்குபஞ்சர்
அக்குபஞ்சர் ஒரு மருந்திலா மருத்துவ முறையாகும். இதனை நீங்கள் செய்ய முறையாக அக்குபஞ்சர் கற்றுக்கொள்ளலாம். அல்லது நிபுணர்களிடன் இந்த சேவையை பெறலாம்.
ஐஸ் மருத்துவம்
உடலில் வலி உள்ள இடங்களில் ஐஸ் அல்லது மிதமான சூடுள்ள நீரில் நனைக்கப்பட்ட துண்டினால் ஒத்தடம் தருவதன் மூலம் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
குறிப்பு
உங்களுக்கு நீண்ட நாட்களாக வலி இருந்து வந்தால், அது வேறு சில உடல்நலக் கோளாறுகளால் இருக்கலாம். எனவே அப்போதைக்கு நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக இதை மட்டுமே செய்து கொண்டிருக்க கூடாது.
No comments:
Post a Comment