அமெரிக்கவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தக்காளியை மெக்ஸிகோவில் தான் முதலில் உணவுக்காக பயன்படுத்தினார்கள். நம் சமையலில் அன்றாடம் இடம் பெற்றிடும் ஒரு பொருள் தக்காளி. மூன்று வேலை உணவிலும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்கிறோம்.
தக்காளி சாப்பிடுவது ஆபத்தானதல்ல ஆனால் அதிகளவில் எடுப்பது சிலருக்கு ஆபத்து கூட ஏற்படுத்தலாம். தக்காளிச் செடியின் இலைகள் சிலருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை ஏற்படுத்தும்.
ஆசிட் :
தக்காளியில் அதிகளவு ஆசிட் இருக்கிறது. இதனை எடுப்பதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். தக்காளியில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் இதனால் வயிற்றில் அதிகளவு கேஸ்ட்ரிக் கேஸ் உற்பத்தியாகும்.
வயிற்றில் ஆசிட் அளவு உயர்ந்தால், அது ஜீரண சக்தியை குறைத்திடும்.
அலர்ஜி :
தக்காளியை அதிகமாக எடுத்தால் சில நேரங்களில் ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்திடும். சில நேரங்களில் இருமல்,தும்மல் தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்படும்.
கிட்னி :
கிட்னி தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் பொட்டாசியம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அது தக்காளியில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் அதிகளவு சேர்ந்தால் அது கிட்னியின் செயல்பாடுகளை முடக்கிவிடும். தக்காளி,தக்காளி சாஸ் போன்றவற்றை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
டயேரியா :
தக்காளியினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்புகள் அதிகம். டயேரியா பாதிப்பு இருக்கும் போது உணவில் தக்காளியை சேர்க்க கூடாது. காரணம், டயேரியா ஏற்பட காரணமாக இருக்கும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா வளர்வதற்கு, அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு தக்காளி உறுதுணையாய் இருக்கும்.
சருமம் :
தக்காளியில் அதிகளவு லைகோபென் இருக்கிறது. இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படும்.
சிறுநீர்ப்பிரச்சனை :
ஆசிட் நிறைந்த உணவுகளான தக்காளியை எடுத்துக்கொள்வதால் அது நம் சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.
உடல் வலி :
தக்காளியில் அல்கலாய்டு நிறைய இருக்கிறது. இது உடலில் கால்சியம் பற்றாகுறையை ஏற்படுத்தும். இதனால் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு வலி உண்டாகும்.
மைக்ரேன் :
மைக்ரேன் தலைவலியை தூண்டும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 40 சதவீத மைக்ரேன் வலிகளை உணவின் மூலமாகவே கட்டுப்படுத்தலாம். இதில் முக்கியம் இடம் பிடிப்பது தக்காளி.
மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள் தக்காளியை தவிர்ப்பது நன்று.
No comments:
Post a Comment