பெண்கள் தங்கள் உடலை பற்றி கவலைப்பட ஆரம்பித்ததும் நினைப்பது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.
சரி ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் உடற்பயிற்சி மேற்கொள்ள ஒரு கிராஸ் ஃபிட் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள். தினமும் என்ற முறையில் பயிற்சி மேற்கொள்ளபடுகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் உங்கள் மாதவிடாய் காலம் என்றால் என்ன செய்வீர்கள்.
சில பெண்கள் தங்கள் உடற்பயிற்சியை சில காலங்களுக்கு தள்ளி வைத்து விடுவர். சில பெண்கள் அந்த நாட்கள் மட்டும் மேற்கொள்ளவதை தவிர்ப்பர் என்பது சரியா
உடற்பயிற்சியை தினமும் செய்வதால் நிறைய நன்மைகளும் நோய்கள் வருவதையும் தடுக்கலாம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இந்த ஆழமான உடற்பயிற்சி பழக்கங்கள் மாதவிடாய் சமயத்தில் செய்யலாமா வேண்டாமா என்று நிறைய சந்தேகங்கள் பெண்களிடையே ஏற்படுகின்றன.
இதில் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத இரத்த போக்கால் உடற்பயிற்சியை பற்றி யோசிப்பதே இல்லை. எங்கே இன்னும் அதிகமாகி விடுமோ என்ற பயம் தான் அவர்களிடம் உள்ளது. மேலும் சில பெண்கள் மாதவிடாய் வலியால் உடற்பயிற்சியை தவிர்க்கின்றனர்.
உங்கள் கவலை யெல்லாம் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் எதாவது உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு விடுமோ என்பது தான்.
அதற்காகத்தான் உங்களுக்காக மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்ய சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க பார்க்கலாம்.
அதிக தீவிர உடற்பயிற்சி மாதவிடாய் காலத்திற்கு நல்லது
அதிக தீவிர உடற்பயிற்சியான கிராஸ் ஃபிட், கிக் பாக்ஸிங் அல்லது எடை தூக்கும் பயிற்சி போன்றவை மாதவிடாய் காலத்தில் நல்லது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உடற்பயிற்சி யால் மூளையில் உள்ள என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஒரு ரிலாக்ஸ்யை தருகிறது. மேலும் மாதவிடாய் காலத்தில் சுரக்கும் புரோஸ்டோகிளான்டின் ஹார்மோன் உங்களது மனநிலையை எரிச்சலாக்கும். எனவே இந்த சமயத்தில் அதிக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டால் உருவாகும் என்டோர்பின் ஹார்மோன் அந்த ஹார்மோனை கட்டுப்படுத்தி ரிலாக்ஸ் உடன் சேர்ந்து மாதவிடாய் வலியையும் குறைத்திடும்.உடற்பயிற்சி மற்றும் மாதவிடாய் கட்டுக்கதை
சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்தால் இரத்த போக்கு குறையும் அல்லது அதிகமாகும் என்று நம்புகின்றனர். ஆனால் அது
உண்மையல்ல. உடற்பயிற்சியால் உங்கள் இரத்த போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் இது கருப்பை அகலத்தை பொருத்தது மட்டுமே.
இதயத்திற்கான உடற்பயிற்சி மாதவிடாய் காலத்தில் நல்லது
இதயத்திற்கான உடற்பயிற்சியான ஓட்டம், ஜாக்கிங், வாக்கிங், படியேறுதல் போன்றவை ஆகும். மேலும் இந்த இதயத்திற்கான உடற்பயிற்சினாலும் என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் வெப்பத்தை மாதவிடாய் காலங்களில் சீராக்குகிறது.
எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது மட்டுமில்லாமல் ஆரோக்கியமானதும் கூட.
இருப்பினும் உடற்பயிற்சி செய்த பிறகு ஏதாவது அதிக ஒழுங்கற்ற இரத்த போக்கு இருந்தாலோ அல்லது தீவிர வலி இருந்தாலோ மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment