ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒரு சக்தி வாய்ந்த வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர். மற்ற வலி நிவாரண மருந்துகளை விட சக்தி வாய்ந்த பலனை தரும் வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளனர்.
கெமிக்கல் மருந்து பொருளான UKH-1114 குறைந்த அளவில் பயன்படுத்தும் போது இதுவரை நீங்கள் கண்டிராத வழியில் செயல்பட்டு வலியை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வலி நிவாரணி ஹெப்போபென்டின் மூலம் நியூரோபேத்திக்(நரம்புகளில் வலி) வலியை குறைப்பதை பாதிப்படைந்த எலியில் ஆராய்ச்சி செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.
நியூரோபேத்திக் வலி என்பது நம்ம மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு ஆகும்.
இந்த வலி நிவாரணி பாதுகாப்பானது, அடிமை பொருளில்லை என்பதை தற்போதைய உலகத்தில் நிரூபிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று ஓப்பாய்டு அமியூஸ் எபிடெமிக் பற்றி ஸ்டீபன் மார்டின் யுனிவர்சிட்டி ஆஃப் டெஸ்ஸஸ் ஆஸ்டினிலிருந்து கூறுகிறார்.
பொதுவாக ஒரு சில பேர்களுக்கு மற்ற வலி நிவாரண மருந்துகளை எடுக்கும் போது மன நல குறைப்பாட்டை ஏற்படுத்தும்.
இதை சரி செய்யவே நாங்கள் புதிதான வலி நிவாரணியை கண்டறிந்து உள்ளோம் என்றும் மார்ட்டின் கூறுகிறார்.
இந்த வலி நிவாரணி மருந்துப் பொருள் நரம்பு செல்களின் ஏற்பியுடன் (Receptor) இணைந்துஉள்ளது. இது நரம்பு செல்களின் வழியாக நரம்பு மண்டலம் முழுவதும் செல்கிறது. இதற்கு சிக்மா 2 ரிசப்டார் என்று பெயர். இதை 25 வருடத்திற்கு முன்பே கண்டறிந்துள்ளனர். ஆனால் இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு இதைப் பற்றி தெரிவதில்லை.யுனிவர்சிட்டி ஆஃப் டெஸ்ஸஸ் அட் ட்லாஸ் லிருந்து அஸோஷியேட் புரபொசர் ஆன தியோதோர் ப்ரைஸ் என்பவர் UKH-1114 வலி நிவாரணியை நரம்பு மண்டலம் பாதிப்படைந்த எலிகளில் பரிசோதித்தார். மேலும் வலியை ஹெப்போபென்டின் குறைந்த அளவான 1-6 என்ற அளவில் உபயோகித்து 4-6 மணி நேரம் இரண்டு நாட்கள் பரிசோதித்து கவனித்தார்.
இந்த ஆராய்ச்சியானது சிக்மா 2 ரிசப்டாரை கொண்டு நியூரோபேத்திக் வலியை குறைக்க மேற்கொள்ள செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் ACS கெமிக்கல் நியூரோ ஸ்சைன்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment