Thursday, 31 August 2017

க்ரீன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

க்ரீன் டீ குடித்தது போதும் க்ரீன் காபி குடித்திருக்கிறீர்களா? வறுத்த காபி கொட்டையைத் தான் சாதாரண காபிக்கு பயன்படுத்துவாரக்ள் ஆனால் இதற்கு பச்சையான காபி கொட்டையை பயன்படுத்த வேண்டும்.
காபி கொட்டையை வறுக்கும் போது அதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் எல்லாம் நீங்கிடும். ஆனால் அவை தான் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. வறுக்காமல் பச்சையாக அப்படியே காபி கொட்டையை பயன்படுத்தி காபி தயாரித்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும்.எடை குறைவு :

எடை குறைவு :

காபி விதையில் இருக்கும் க்ளோரோஜெனிக் ஆசிட் நம் உடலின் மெட்டபாலிசத்தை உயர்த்திடும். கல்லிரலில் இருந்து ரத்தத்தில் கலக்கும் அதிகப்படியான சர்க்கரையை தவிர்க்கச் செய்யும். கிடைக்கும் சர்க்கரையின் அளவு குறைவதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரையத் துவங்கும். இதனால் உடல் எடை குறைந்திடும்.பசியுணர்வு :

பசியுணர்வு :

அடிக்கடி பசியுணர்வு தூண்டுகிறதா? அப்போ இதைத் குடிக்கலாம். அதே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பதால் உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்.சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

க்ரீன் காபி விதை டைப் 2 வகை சர்க்கரை நோயை குறைத்திடும். இந்த க்ரீன் காபியை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்திடும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இதனை குடிக்கலாம்.ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

ரத்த அழுத்தம் தான் பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. இவை நம் ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட்ஸுக்கும் துணை நிற்கும். இதனால் உடல் முழுவதும் எளிதாக ரத்தம் ஓட்டம் ஏற்படும்.கல்லீரல் :

கல்லீரல் :

க்ரீன் காபி இயற்கையாகவே உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கிடும். கல்லீரலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிடும். கல்லீரல் தான் ஜீரணத்திற்கும் சத்துக்களை பிரித்து கொடுக்கும் பணியை மேற்கொள்கிறது என்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...