ஆப்பிள் மிகவும் சத்தான ஒரு பழம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. இதில் சையனைடு உள்ளது. இந்த ஆப்பிள் விதைகளை சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
அமிக்டாலின்
ஆப்பிள் விதைகளில் அமிக்டாலின் உள்ளது. இது மனிதனின் செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் போது சர்க்கரை மற்றும் சயனைடை வெளிப்படுத்துகிறது. இது உடலின் உட்பகுதியில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகிறது. இது கடுமையான நச்சுத்தன்மையை கொண்டுள்ளது.
சயனைடு எப்படி செயல்படுகிறது?
சயனைடு பழங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப்பொருளாகும். சயனைடு ஆக்ஸிஜன் சப்ளையை தடைசெய்து விடுகிறது. இந்த சயனைடு ஆப்ரிகட்ஸ், செர்ரி, பிளம்ஸ் ஆகியவற்றிலும் இருக்கிறது. இந்த விதைகளில் கடுமையான பாதுகாப்பு படலம் உள்ளது.
விஷத்தன்மை!
இந்த விதைகளை எவ்வளவு சாப்பிட்டால் விஷத்தன்மை உண்டாகும் என்றால், 200 அதாவது ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டால், இது உடலை கடுமையாக பாதிக்கும்.
No comments:
Post a Comment